Pages

Wednesday, November 23, 2011

மாத்தி யோசிங்க எழுத்தாளர் அம்மா !

இந்தக் காலத்து பொண்ணுங்கள எப்பிடி எப்படிஎல்லாமோ இன்றைய ஆண்கள் பிரிச்சு பிரிச்சு பார்த்துக்கிட்டாலும் ஒரு வரையறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவே இருக்கிறது...அது கண்ட கண்ட புத்தகங்களை வாசித்து தங்களை புத்தக ஆர்வலர்களாக காட்டிக்கொள்ளும் பெண்கள் எனும் வரையறையைக் கொண்டதே...இன்றைய கால கட்டத்தில் நிறைய நாவல்கள் வருது,நிறையப் பேர் கதைகள்,சிறுகதைகள் எழுதுறாங்க..புத்தகம் வாசிக்க நேரம் இல்லன்னாலும் ஏதோ வாசிக்கிறவங்க இருக்காங்கதான்..புத்தகங்களா எழுத முடியாதவங்க சிம்பிளா ப்ளொக்கில் எழுதி வெற்றி பெறுகிறார்கள்..


பொண்ணுங்களுக்கு பெரும்பாலும் ரொமான்ஸ் பிடிச்ச விஷயம்...காதல் சார்ந்த குளுகுளு நாவல்களை விரும்பி படிப்பாங்க..ஆனா சிலர் தங்களை புதுமைவாதிகளாக காட்டிக்கொள்வதற்காகவே புரட்சிகரமான நாவல்களை விளங்காட்டியும் படிப்பாங்க...ரொம்பப் படிச்ச பொண்ணுங்களா இருந்தா பெண்ணியவாதிகளாக காட்டிக்கொள்வாங்க.அதனால அப்பிடியான புத்தகங்களோட சுத்துவாங்க...சில கிரண் பேடிகள் துப்பறியும் நாவல்கள் வாசிச்சு துப்புத் துலக்குவாங்க...பெரும்பாலான பெண்கள் ரமணிச்சந்திரன் விசிறிகள்..


பொதுவா,வீட்டில இருக்கும் பெண்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்,இல்லத்தரசிகள்,இல்லத்தில் இல்லா ஆப்பீஸ் அரசிகள் பொதுவா படிக்கும் நாவல் ரமணிச்சந்திரன் நாவல்..

இப்பெல்லாம் "உலகிலே அதிகமான தமிழர்கள் படிக்கும் நாவல்" ."மனம் வருடும் இனிய நாவல்" இப்பிடில்லாம் அவங்க நாவல் வருது..

ரமணிச்சந்திரன் எப்போ இருந்து எழுதுறாங்கன்னு எனக்குத் தெரியாது..ஆனா நான் பள்ளி படிக்கும் காலத்திலேயே அவங்களின் ரசிக நெஞ்சங்கள் லைப்ரரியில் அலைமோதும் காட்சியை கண்டிருக்கிறேன்...யாரு புத்தகத்துக்கு இவ்வளவு கூட்டம் என்று எட்டிப்பார்த்தால்கூட எங்க லைப்ரரி அக்கா அப்பெல்லாம் எங்கள முறைச்சிப் பார்க்கும்..அந்த முறைப்பிலே வில்லங்கமா நாங்க அந்தப்பக்கம் போகமாட்டோம்...பள்ளிப் பருவத்திலே நான் சரித்திர நாவல்களோடு உட்கார்ந்திடுவேன்..

பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி வாழ்க்கைக்குத் தயாரான அந்த காலத்திலும் என் பொழுது நூலகத்திலே பெரும்பாலும் கழிந்தது...பள்ளி நூலகத்திற்கு விடை கொடுத்து பொது நூலகத்திற்கு மாறியபோதும் அதே ஆச்சரியம் எனக்கு...புத்தகங்களை இரவல் பெறும் பகுதியில் ரமணிச்சந்திரன் புத்தகங்களை பெற்றுக்கொள்ள பெண்களிடம் சச்சரவு நடக்கும்...எப்பவும் கூட்டம் இருக்கும்...நாமளும் வாசித்துப் பார்க்கலாம் என்று பார்த்தால் அவங்களின்  புத்தகங்கள் வைக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்காது...இப்பிடி போட்டியா என்று யோசித்துக்கொள்வேன்...அதனாலே எனக்கு அவரின் நாவல்களில் ஒரு ஈர்ப்பு உண்டாகியிருந்தது...

 நண்பிகள் எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றிக்கொள்வோம்..ஒரு நாள் என் நண்பி மூலம் எனக்கு ரமணிச்சந்திரன் புத்தகம் கிடைத்தது..நிறைய எதிர்பார்ப்புடன் வாசித்த அந்த நாவலை என்னால் மறக்க முடியாது...நான் வாசித்த ரமணிச்சந்திரனின் முதல் நாவல் "வளையோசை".எனக்குப் பிடித்திருந்தது அந்த கதை..தொடர்ந்து நான் வாசித்த நாவல்களும் எனக்குப் பிடித்திருந்தன. "ஊனமறு நல்லழகே" ,"அடிவாழை" ,"ஜோடிப்புறாக்கள்" ,"லாவண்யா" ....எல்லாம் எனக்குப் பிடித்திருந்தன...நானும் ரமணிச்சந்திரன் ரசிகையாகி அவங்க நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன்..


ஒரு பத்து நாவல்கள் வாசிச்சு முடிந்ததுமே அவங்க மசாலாத்தனம் விளங்கிப் போச்சு...
  • பணக்கார அழகான வாலிபன்..
  • வசதியில்லாத / நடுத்தர குடும்ப அழகிய நாயகி..
  • பணக்காரப் பையன விரும்பும் பணக்கார வில்லி..
  • ஏழைப்பொண்ண விரும்பும் முரட்டு வில்லன்..
  • மோதலில் ஆரம்பிக்கும் காதல்..
  • கிளைமாக்சில் நாயகி கடத்தல்..
  • ஹீரோ நாயகியை மீட்டல்..அப்புறம் சுபம்..
  • பாராட்டப்படவேண்டிய விஷயம் மருமகள் -மாமி சண்டையே இருக்காது..
இப்பிடியே எல்லா கதையும் போச்சு...கதை பரவால்ல..நாயகன்,நாயகி பெயர்கூடவா அப்பிடியே???

சுதாகர்,சதானந்தன்,தயானந்தன்,வித்யாதர்,தனஞ்சயன்,புவனன்,சித்தரஞ்சன் அவங்க பேவரிட் ஹீரோக்கள்....
அபரஞ்சி,வாணி,சௌமினி,தரங்கிணி ஹீரோயின்கள்...

எப்பிடியோ அந்தம்மாக்குன்னு கூட்டம்...நாவல்களுக்கும் நல்ல பிஸ்னஸ்....எப்பிடியோ ஒருவழியா போயிட்டு இருந்தாங்க...நாமளும் சரி பாவம் எழுதுறாங்க..யாராவது வாசிக்கணுமே என்ற நல்ல நோக்கத்துக்காக வாசிச்சோம்...ஆனா இப்ப என்னதான் பண்றாங்க?பேர்கள்தான் படாவதிப்பெயர்கள் என்றால் கதையும் பழசின் ரீரைட்டா வருது...

சில கதைகளை வாசிக்க ஆரம்பிச்சவுடனே தெரிஞ்சிடும் எங்க சுட்டதுன்னு..அப்பிடியே அதே கதைய கடைசில கொஞ்சம் மாத்தியிருப்பாங்க...இதுவரைக்கும் நூற்று நாற்பதுக்கும்  மேற்பட்ட அவங்க கதைகளை வேலை வெட்டியில்லாம நானும்  வாசிச்சிட்டன்...ஒரு முன்னேற்றமும் இல்ல..நல்லா ஓட்டுறாங்க..ஒரு வரிய எங்கையோ எடுத்து மறுவரிய எங்கேயோ கோர்ப்பாங்க..அதே உப்புச்சப்பில்லாத பழைய உப்புமாதான்...ஆனா பில்டப்பு ரொம்ப நீளம்...

உங்க கதையில என்ன இருக்கு????நாலு பேருக்கு என்ன கிடைக்குது??என்னென்ன படத்தெல்லாம் கொஞ்சமே லாஜிக் இல்லாம பார்க்கிறமாதிரி ஏதோ வாசிக்கிறம்....அவ்வளவுதான்..
எப்பிடியோ ரமணிச்சந்திரன் மேடம்...இனியாவது கொஞ்சம் மாத்த முயற்சி செய்யலாமே...கதைய மாத்தி யோசிக்கிற அளவு இல்லாட்டியும் பெயர்களையாவது கொஞ்சமா மாத்திப் பாருங்க...தெரியலன்னா டிவில நாலு சனல மாத்திப் பார்த்தா தெரிஞ்சிடும்...அதிலாவது கொஞ்சம் மாறினாதான் உண்டு...இப்பெல்லாம் நேரத்த ஓட்ட மட்டுமே உங்க நாவல எடுக்க வேண்டியிருக்கு....கிராக்கி குறைய முன்னாடி எழுத்தப் போட்டுடுங்க...

#############################################

8 comments:

bandhu said...

நல்லா எழுதறீங்க..

//இதுவரைக்கும் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட அவங்க கதைகளை வேலை வெட்டியில்லாம வாசிச்சிட்டன்..//

பாவம். அவங்களே அவ்வளவு படிச்சிருக்க மாட்டாங்க!

பால கணேஷ் said...

கரெக்ட்! அவங்க எம்.ஜி.ஆர். ஃபார்முலா மாதிரி ஒரு ஃபார்முலாவை வெச்சுக்கிட்டு எழுதறாங்கன்றதை நான் பத்து நாவல்கள்லயே புரிஞ்சுக்கிட்டு அவங்க நாவல்களைப் படிக்கறதையே விட்டுட்டேன். இப்பவும் அப்படித்தான்னு நீங்க சொன்னதை வெச்சு புரிஞ்சது. அழகா கருத்து சொல்லியிருக்கீங்க. (140க்கும் மேல அவங்க புக்கைப் படிச்சீங்களா? பொறுமைத்திலகம்தான்!) நன்று.

முன்பனிக்காலம் said...

ரமணி சந்திரனை தென்னகத்து மில்ஸ் அண்ட் பூன் எண்டு சொல்லுவாங்க. இந்த காதல், பிரிவு, துயரம் எல்லாம் நமக்கு ஒத்து வராது.நமக்கு எப்பவுமே சுஜாதா சார் தான்...! ( லேட்டஸ்ட்டா இன்னொரு ' தா ' !) ( ப்ளாக் சூப்பர் ! )

பூங்குழலி said...

பெரும்பாலான pulp fiction எனும் வகையை சார்ந்த எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள் .லேசாக படிக்க விரும்பும் நேரங்களுக்கு அவர் நாவல்கள் சரியான துணை .
உங்களின் ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அழகு

அனாமிகா said...

@bandhu
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))

//பாவம். அவங்களே அவ்வளவு படிச்சிருக்க மாட்டாங்க!//

இருக்கும்..இருக்கும்..

அனாமிகா said...

@கணேஷ்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))

//அழகா கருத்து சொல்லியிருக்கீங்க//
நன்றி :))

//(140க்கும் மேல அவங்க புக்கைப் படிச்சீங்களா? பொறுமைத்திலகம்தான்!) நன்று.//
;)

அனாமிகா said...

@முன்பனிக்காலம்
நன்றி :))

//( லேட்டஸ்ட்டா இன்னொரு ' தா ' !)//ஹாஹாஹா!!!

அனாமிகா said...

@பூங்குழலி

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))
//உங்களின் ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அழகு//
நன்றி :))

Post a Comment