Pages

Friday, November 4, 2011

கொஞ்சம் சிந்தியுங்கள் பெற்றோர்களே!!!!!!

இன்றைக்கு நாட்டில ஆயிரம்..இல்லல்ல லெட்சம்..ம்ம்ஹீம் கோடிக்கணக்கில பிரச்சினைகள்..அந்த கோடில நாம ஏதோவொரு கோடில இருக்கோம்...ஆனா என்ன நமக்கும் அந்த கோடிகளுக்கும் எங்கேயோ ஒரு புள்ளில சந்திப்பு வந்திடுது ....அந்தப் புள்ளி அப்புறமா பெரிய வட்டத்தையே கீறிடும்....
இன்றைய ,குழந்தைகளும் சரி,சிறுவர்களும் சரி,இளைஞர்களும் சரி என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும் அவர்கள் வீடுகளில் சந்திக்கும் பிரச்சினைகள் ரொம்பக் கஷ்டமானவை..அந்தக் கஷ்டத்தை இன்று நானும் உணர்ந்தேன்...என் தோழியின் கண்ணீரிலிருந்து...


வீட்டுக்கு வீடு வாசப்படிதான்...என்னதான் அழகுல அனுஷ்காவா இருந்தாலும்,பணத்தில பில் கேட்ஸா இருந்தாலும்,புகழில கிம் கார்டேஷியனா இருந்தாலும் எல்லாருக்கும் பிரச்சினை வரத்தான் செய்யும்...எல்லாரும் ஊரையும்,உலகத்தையும் சிரிச்சு சிரிச்சு சந்திச்சாலும் அந்த சிரிப்பிற்கு பின்னாடி ஏதோ ஒரு பூகம்பம் மையமிட்டுக்கொண்டிருக்கும்...


சின்னதா  காத்து அடிச்சாலே தூரப்போய் விழுறவங்களும் அழுறாங்க...சுனாமியில சிக்கினவங்களும் அழுறாங்க...அழாட்டி சின்னதா ஒரு வெறுமையா உணருவாங்க...சின்னதா ஒரு வலி....ஒரு கீறல்...ஒரு தழும்பு நம்ம எல்லாருக்கும் கண்டிப்பா இருக்கு....அத தனக்குள்ள வச்சு சமாதி கட்டுறவங்க சிலர்...இன்னொருத்தர் தோளில சாய்ந்து ஆறுதல் தேடுவோர் சிலர்.. 


எல்லாரும் இப்பெல்லாம் ரொம்பப் படிக்கிறோம்...ரொம்பவும் சம்பாதிக்கிறோம்...உலக விஷயங்களை அந்தந்த நிமிஷத்திலையே தெரிஞ்சுக்கிறோம்..விமர்சிக்கிறோம்..பாராட்டிறோம்..யோசிக்கிறோம்..ஆச்சர்யப்படுறோம்...ஆனாலும் சில விஷயங்கள் என்ன பண்றதுன்னே தெரியாம இருக்கும்...அது குடும்பத்தில வாற சில சிக்கல்களாகத்தான் இருக்கும்...


குழந்தையா.....சிறுவனா....இளைஞனா வீட்டில்தான் இருக்கிறோம்...ஒரு குடும்பத்தில் நான்கு சுவர்களுக்குள் வாழ்கிறோம்..பெற்றோர்களையே சார்ந்திருக்கிறோம்...நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அவங்ககிட்ட சொல்றோம்...ஆறுதல் தேடிக்கிறோம்...ஆனா அவங்களே பிரச்சினையா இருந்தால்?????


இன்றைய நாள்ல பெரும்பாலான வீடுகள்ல பெற்றவங்க படிச்சவங்க...சில வீடுகள்ல ரொம்பப் படிச்சவங்க...எல்லாம் தெரிஞ்சவங்க...சாதாரண குடும்பங்கள்கூட பொது அறிவு தெரிஞ்சவங்களாத்தான் இருக்காங்க...எல்லா வீட்டிலும் டிவி இருக்கு...எல்லாரும் பேப்பர் படிக்கிறாங்க...சினிமா பாக்கிறாங்க...ஆனாலும் எங்கேயோ எப்பிடியோ பிரச்சின வரத்தான் செய்து...


அப்பா,அம்மாவை உலகமா நினச்சு அவங்க தொழிலும்,மடியிலும் ஆறுதல் தேடும் குழந்தைகள் அவர்கள் தவறிழைக்கும் சந்தர்ப்பத்தில் கேள்விக்குறியாகுறார்கள் ...
அப்பாவாலும் பிரச்சினை வருது...அம்மாவாலும் பிரச்சினை வருது...

  • அப்பா குடிகாரரா இருந்தால்...
  • அம்மா மட்டும் உழைப்பாளியாக இருந்தால்...
  • பெற்றோர்களுக்கிடையில் மனக்கசப்பிருந்தால் ....
  • பெற்றோர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வு /ஈகோ /???இன்னோரன்ன ....
  • அப்பாக்கு / அம்மாக்கு வேறு ஏதோ தொடர்புகள் இருந்தால்....

பல பல பிரச்சினைகள் இருந்தாலும் இவை ரொம்ப முக்கியமானதாக மாறிவிடுகின்றன...

அம்மா,அப்பா ரெண்டு பேருமே வேலை பார்க்கும் குடும்பங்களில் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்...பிள்ளைகளுக்காகவே உழைக்கிறாங்க...ஆனாலும் அதுவே பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது...அப்பா வீட்டில இருந்தா அம்மா இல்ல...அம்மா இருந்தா அப்பா இல்ல...அப்பிடி பிசியான வாழ்க்கை..


வேலைக்குப்போகும் அம்மா காலையில எழுந்து வீட்டு வேலை,சமையல் செய்து பிள்ளைகள பள்ளிக்கு / காலேஜுக்கு அனுப்பி தானும் வேலைக்கு கிளம்பி...அப்புறம் அங்க நாள் முழுக்க பம்பரமா சுத்திற்று இரவு வீட்டுக்கு வந்தா...இரவுச் சாப்பாடு..நாளைய நாளுக்கான இன்னோரன்ன வேலைகள்...செய்து முடித்து நிமிர்ந்தால் இடுப்பு வலிதான் மிஞ்சும்...அந்தப் பெண்ணும் பாவம்தானே...அப்புறம் எங்கே பிள்ளைகளுடன் சிரிப்பதும்???கதைப்பதும்???

வேலைக்குப்போகும் அப்பா வேலை செய்து களைச்சுப்போய் வந்தா மனைவியோட காப்பியும்,டிவி செய்தியும்...நாளைக்கான அசைன்மண்டுகள்...பேப்பெருகள்...கணக்கு வழக்குகள் அவர் மனதில்...

படிக்காத அம்மா,அப்பா என்றாலும் பிரச்சினை...
குழந்தைகளை இன்றைய காலகட்டத்தில அவங்களின் இயல்புகளோடு,பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகாமலும் பிரச்சினை...

  • படிச்ச அப்பாக்கு, படிக்காத அம்மா பிரச்சினை.
  • குறைவா உழைக்கிற அப்பாக்கு, அதிகமா சம்பாதிக்கிற அம்மா பிரச்சினை..
  • அழகான / மாடர்ன் பெண்களோட வேலை பார்க்கிற தகப்பனுக்கு ,அழகில்லாத / ஹோம்லி மனைவி பிரச்சினை..
  • பெண்களோட சிரிச்சிப் பேசி சகஜாமா இருக்கிற கணவனால் , மனைவிக்கு சந்தேகப் பிரச்சினை..
என்னத்த சேர்க்கிறது  ????என்னத்த விடறது????
இப்பெல்லாம் இளம் சமுதாயம் கெட்டுப்போவதைவிட மூத்த சமூகம் தவறிழைப்பது அதிகம்...எத்தனை கள்ளக்காதல்கள்??எத்தனை முறைதவறிய குழந்தைகள்???

பிள்ளைகள் இந்த வாழ்க்கைக்கு எப்பிடியோ பழக்கிப் போயிட்டாங்க...
தினமும் வீட்டில சண்டை நடக்குது...அம்மா கடைசியில அழுவாங்க...பழகிடும்...பிள்ளைகளும் டிவியுடனும்,கம்பியூட்டருடனும்,வாழப்பழகியாச்சு....
ஆனால் இது நல்லதா??

தினம் தினம் வலிகளோடும்,ரணங்களோடும் வாழ்றது கஷ்டம்...
புரிதல்கள் இல்லாத குடும்பங்களில் கத்தி, ரத்தம் இன்றிய யுத்தங்கள் மனங்களை,உயிர்களை மரணிக்கச்செய்துவிடும்...
அந்த வாழ்க்கை ஒரு செக்கனில் ஒரு உயிருக்கு விடை கொடுத்திடும்...

அந்த நேரம் சண்டை போடுவிங்க...அடுத்த நாள் சமாதானம் ஆயிடுவீங்க....ஆனா அந்த கொஞ்ச நேரம் ஒரு கெடுதல் நடந்தால் அதன் பின் கதறியழுதும் பிரயோஜனமில்லை....திருந்தியும் பிரயோஜனமில்லை...
..........................................................................................................

பெற்றோர்களே!!!!!!!!
ஒரு உயிரை உலகத்திற்கு கொண்டு வாறிங்க...கொண்டு வந்த உயிரை பாதுகாப்பது உங்க கடமை...அன்பான அழகிய குடும்பத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்...


குடும்பம் என்பது கட்டிடம் ..ரத்தமும் சதையும் இணைந்த அன்பான கட்டிடம் ...ஒருத்தர் அதைக்கட்டமுடியாது..குடும்ப உறுப்பினர்கள் அதன் தூண்கள்..அந்த தூண்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே அது நிலைத்து நிற்கக்கூடிய கட்டிடம்..


உங்க பிரச்சனைகளை நீங்க ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்...பிள்ளைகள் கண்ணெதிரில் சண்டை போடுவது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு...குழந்தையில அவங்களுக்கு நீங்கதான் ரோல்மாடல்ஸ்...அந்த இடத்தை தக்கவச்சுக்கொள்ளுங்க.உங்களின் சின்னச்சின்ன சண்டைகள் உங்க குடும்பத்தில பெரிய சுனாமியா வந்திடும்...உங்களில் கவனமா இருங்க..உங்க குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு...

கொஞ்சம் சிந்தியுங்கள் பெற்றோர்களே!!!!!!


########################################################

1 comments:

SURYAJEEVA said...

கோபம் கண்ணை மறைக்கும் பொழுது, சிந்தனை?

Post a Comment