நிறைய நாட்களுக்குப் பிறகு பார்க்கக்கிடைத்த ஹிந்திப் படம் "FORCE"
எனக்கு ஹிந்திப் படங்கள் என்றால் மிகுந்த ஆர்வமும்,விருப்பமும்...தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருத்த எனக்கு அந்தப் படங்களில் இப்பெல்லாம் திருப்தியே இல்லை..என்னதான் அக்சன் படமா இருந்தாலும்,காதல் படமா இருந்தாலும்,காமெடிப் படமா இருந்தாலும் எனக்கு எல்லாமே காமெடிப்படமாகவே தெரியுது..இந்த திருப்தியின்மையே வேற்று மொழிப்படங்களை என்னை பார்க்கத் தூண்டியது..அப்பிடி பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஹிந்திப்படங்கள் மேல கொஞ்சம் கூடுதல் கவனம்....
ஓமகசீயாப் பாடல் -இங்கு காமோ காமோ அப்பிடின்னு வருது...கேகே மற்றும் சுசித்ரா குமார் பாடியிருக்காங்க...நல்லா இருக்கு...
எனக்கு ஹிந்திப் படங்கள் என்றால் மிகுந்த ஆர்வமும்,விருப்பமும்...தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருத்த எனக்கு அந்தப் படங்களில் இப்பெல்லாம் திருப்தியே இல்லை..என்னதான் அக்சன் படமா இருந்தாலும்,காதல் படமா இருந்தாலும்,காமெடிப் படமா இருந்தாலும் எனக்கு எல்லாமே காமெடிப்படமாகவே தெரியுது..இந்த திருப்தியின்மையே வேற்று மொழிப்படங்களை என்னை பார்க்கத் தூண்டியது..அப்பிடி பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஹிந்திப்படங்கள் மேல கொஞ்சம் கூடுதல் கவனம்....
அதிலும் எல்லா ஹிந்திப் படங்களும் பார்க்கமாட்டேன்...படங்களின் ட்ரெயிலர் என்னை பார்க்கத் தூண்டியிருக்கணும்...ஆனாலும் ஷாருக்கான் படங்கள் மேல் தனிக் கிறுக்கம்...ஹிந்திப் படம் பார்த்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று பார்த்தேன்..
பொதுவாக எனக்கு ஜோன் ஆப்ரஹாமின் படங்கள் பிடிப்பதில்லை..எப்பபாரு சட்டையை களட்டிவிட்டுக்கொண்டு அவரின் உடம்பைக் காட்டுவதிலே ஜோன் ஆபிரகாம் அக்கறையாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம்..
ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் "ஜூதா ஹை சா ஹீ" என்ற படம் பார்த்தேன்..எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது..வித்தியாசமான ஜோன் ஆப்ரஹாமை பார்க்கமுடிந்ததில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன்..
அந்த ஈர்ப்பில் இந்தப் படத்தை பார்க்க உட்கார்ந்திட்டன்..பார்க்க ஆரம்பிச்ச உடனே தெரிஞ்சுபோச்சு..படம் நம்ம "காக்க காக்க" படத்தோட ரீமேக்குன்னு..என்னாடா இது வம்பாப்போச்சு என்றிருந்தாலும் அந்த லூசுப்பொண்ணு ஜெனிலியாவின் சிரிப்பிற்காக உட்கார்ந்தாச்சு...பொதுவா எனக்கு ரீமேக் படங்கள் பிடிக்காது..பார்க்காத படத்த பார்க்கிறதில்தான் என்றும் ஈர்ப்பு..
அப்பிடியே காக்க காக்க" எந்த வித்தியாசமுமே இல்லை..என்னை அவங்கட மும்பை சூழலிற்கேற்ப மாத்தியிருக்காங்க..
ஹீரோ ACP "யஸ்வர்த்தன்"
ஜோன் ஆபிரகாமின் பாடி அந்த கரக்டேருக்கு பொருந்தும்னு நினைத்திருப்பாங்க போல.ஆனாலும் அந்த வெயிட்டான மிரட்டும் பாத்திரம் ஜோன் ஆப்ரஹாமிற்கு அந்நியமாகவே தெரியுது.. சூர்யாவின் கண்களில் இருந்த அந்த மிரட்டல்,மீசையில் இருந்த வீரம் மிஸ்ஸிங்..மிஸ்ஸிங்...
சிலநேரம் வில்லனை துரத்திப் பிடிக்க ஜோன் ஓடும் காட்சிகளில் அந்த உடம்பை கஷ்ற்றப்பட்டு தூக்கிக்கொண்டு ஓடுவதுபோல இருக்கு..
ஹீரோயின் "மாயா"நம்ம ஜெனிலியா...
ஜெனியைப்பார்க்கும்போது ஜோதிகா கண்களுக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை..இதிலிருந்தே ஜோதிகாவின் நடிப்பு எவ்வளவிற்கு சிறப்புன்னு தெரியுது...
மாயாவா வரும் ஜெனிலியா வழமை போலவே கியூட்டா சிரிக்கிறா...அழகா இருக்கிறா..நிறைய ரொமான்சிலும் கலக்கியிருக்கிறா...நடிச்சாவான்னு எனக்கு தெரியல...
ஜெனிலியா ஜோன் ஆபிரகாமோட நெருக்கமாத்தான் நடிச்சிருக்காங்க...கெமிஸ்ட்ரி நல்லாத்தான் இருக்கு...ஜெனி கிளாமராவும் நடிச்சிருக்காங்க..
வில்லன் விஷ்ணுவா "வித்யுத் ஜம்வல்"..
எனக்கு புதுகமாவாகவே தெரிந்தார்...ஆனா ஹீரோ களை இருக்கு..மிரட்டினார்.....
இசை ஹாரிஸ் ஜெயராஜா..அதே காக்க காக்க பாடல்கள் என்றாலும் சூப்பர்...
ஓமகசீயாப் பாடல் -இங்கு காமோ காமோ அப்பிடின்னு வருது...கேகே மற்றும் சுசித்ரா குமார் பாடியிருக்காங்க...நல்லா இருக்கு...
கசே கஹூ -கார்த்திக் மற்றும்,பாம்பே ஜெயஸ்ரீ பாடியது...
என்னுடைய இப்போதைய பேவரிட்...ரொமாண்டிக் பாடல் சூப்பர்...
என்னுடைய இப்போதைய பேவரிட்...ரொமாண்டிக் பாடல் சூப்பர்...
நிஷிகாந்தின் இயக்கம் பரவால்ல...
படம் ஏதோ விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தாலும் மனசில் ஒட்டல...ஒரு தரம் பார்க்கலாம்.....
இந்தப்படத்தை பற்றி ரொம்பவும் கேள்விப்படாட்டாலும் இந்த ஒரு விஷயத்தில கேள்விப்பட்டிருப்பிங்க...
இதிலும் யஸ்வர்தனுக்கும்,மாயாவிற்கும் கல்யாணம் நடக்கும்...சினிமாவிற்கப்பால் ஜெனிலியாவிற்கும்,ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் கல்யாணம் என்று பேச்சு வந்ததும்,படத்தில் கல்யாணத்தை நடத்திவைத்த ஐயர் என்னை சொன்னாரு தெரியுமா?
"ஜோன் ஆபிரகாமும்,ஜெனிலியாவும் கல்யாணம் பண்ணிட்டாங்களே.....,உண்மையில உண்மையான மந்திரங்கள் சொல்லியே கல்யாணத்தை நடத்தினேன்...அவங்களும் அக்கினி வலம் வந்து,மாலை மாத்திக்கிட்டாங்க ...இது சினிமாக் கல்யாணம் இல்ல..உண்மைக்கல்யாணம்.."
என்னடா இது வம்பாப்போச்சு?அவங்களுக்கு இது சகஜம்தானே....
FORCE - லூஸ்
##########################################









1 comments:
Post a Comment