Pages

Friday, November 11, 2011

எப்பிடியிருந்த தனுஷ் எப்பிடியாயிட்டார்???

தனுஷ் இன்றைய நாளில் ஒரு பெரிய நடிகர்...
(உடலளவில் இல்ல...மனதளவில்...திரையளவில்..ரசிகர்களவில்.....)
தனுஷ் ஒரு நல்ல கணவர்
தனுஷ் ஒரு நல்ல அப்பா
தனுஷ் நல்ல மகன்
தனுஷ் நல்ல மருமகன்
தனுஷ் நல்ல தம்பி 
இப்பிடில்லாம் இருந்த தனுஷ் இப்போ எப்பிடியாயிட்டார்??? 


வெங்கடேஷ் பிரபுவா ஜாலியா ஊர் சுத்திற்று இருந்த பையன அவசரத்துக்கு ஆளில்லாத நிலையில் சப்ஸ்டிடியூட்டா அண்ணன் செல்வராகவன் சினிமாவிற்குள் கொண்டுவந்தார்..
"துள்ளுவதோ இளமை" யில் துள்ளலா வந்த அந்த தனுஷுக்கு அப்புறம் வாழ்க்கையில் துள்ளலுக்கு பஞ்சம் இருக்கவில்லை...ஆனாலும் ஒரு நடிகனா..அதுவும் ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும் நடிகனா அந்த தனுஷை அன்று யாருமே பார்க்கவில்லை....நம்ம வீட்டுப்பையனப்போல, நாம தெருவில பார்க்கும் பையன் போல இருந்த தனுஷ் அன்றைய தனுஷ்....இன்றும் அப்பிடியே.....


அடுத்து "காதல் கொண்டேன்"...தனுஷை கொஞ்சம் பார்க்கவைத்தது...படம் சக்கைபோடு போட்டது...அடுத்து "திருடா திருடா" தனுஷை நிமிர்ந்து பார்க்க வைத்தது...சப்ஸ்டிடியூட்டாக இறங்கிய அந்த இளைஞனின் ஹாட்ரிக் பெரிய சாதனை...தனுஷிற்கு நடிகன் அந்தஸ்தும் கிடைத்தது..."மன்மதராசா" பாடல் ஒன்றே அவரை எட்டுத்திக்கிற்கும் கொண்டுசென்றது....கஸ்தூரி ராஜாவை மறந்திருந்த கோடம்பாக்கம் அவரைத் தேடிச்சென்று பார்த்தது...அண்ணனுக்கும் ,தம்பிக்கும் அந்தஸ்தும் வந்தது..


சூப்பர் ஸ்டாரே தனுஷ் வீட்டுக் கதவை தட்டினார்...
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்..பல்லாயிரம் விஐபிகள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது அந்த திருமணம்...
"தனுஷிற்கு வந்த வாழ்வைப் பாரேன்" என்று நினைக்காத, சொல்லாத ,வியக்காத, ஆச்சரியப்படாத மனிதர்களே இல்லை..ஐஸ்வர்யாவிற்கு எப்பிடி தனுஷ மாப்பிளையாக்கினார் ரஜனி என்றும் யோசித்த, ஆராய்ச்சி செய்தவர்களும் உண்டு....


ஆனாலும் அடுத்து வந்த காலம் தனுஷிற்கு நல்லகாலமாகவே இல்லை...
கிசுகிசு, பிரச்சினைகள்,தோல்விகள் இல்லாத தனுஷிற்கு எல்லாமே வந்தன...ஐஸ்வர்யாவின் வரவு தனுசை சிம்புவிற்கு நிஜத்தில் வில்லனாக்கியது...தன் படங்களில் தனுஷைத் தாக்கத்தொடங்கினார் சிம்பு...கொஞ்சம் சறுக்கல்கள்தான்....ஆனாலும் அமைதி காத்தார் தனுஷ்...தன் படங்களில் சிம்புவிற்கு பதிலடி கொடுப்பதற்கு பதில் தன்னையே தாழ்த்திக் கொண்டார்..


அதுவரை சாதரணமாக ஜாலி பண்ணின தனுஷ் ,அக்ஷனில் களமிறங்கினார்..."புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" ,"சுள்ளான்" "ட்ரீம்ஸ்" என்று தொடர் தோல்விகள்...ஆனாலும் அடுத்த "தேவதையைக் கண்டேன்" அவரை மீண்டும் பேசவைத்தது..."அது ஒரு கனாக் காலம்" ,"புதுப் பேட்டை" சறுக்கல்களுக்குப் பிறகு "திருவிளையாடல் ஆரம்பம்" சக்சஸ் கொடுத்தது...

அதே நேரம் தனுஷிற்கு புது ப்ரோமொஷனும் கிடைத்தது...அது "அப்பா" என்ற அழகான ஒரு பதவி...
"யாத்ரா" எனும் பையன் பிறந்தான்.. 


"பரட்டை எனும் அழகுசுந்தரம்" எனும் வீழ்ச்சிக்குப் பிறகு "பொல்லாதவன்" ,"யாரடி நீ மோகினி" , "படிக்காதவன் " மீண்டும் அதிரடி ஹாட்ரிக் விழுந்தது..."குட்டி " கொஞ்சம் சறுக்க "உத்தமபுத்திரன் " எழுப்பியது...காமெடியில் பின்னி எடுத்தார்...அடுத்தது சாதனையானது..."ஆடுகளம் " தேசிய விருதை வாங்கவைத்தது.. 
அடுத்தும் ப்ரோமோஷன்...."லிங்கா" என இன்னுமொரு பையன்...


எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்த நேரம் யார் கண் பட்டுதோ???
 ஒரு பாடகனாகக்கூட மாறினார் தனுஷ்..அது நல்லாத்தான் ஆரம்பிச்சுது.....
அடுத்து பாடலாசிரியர் அவதாரம்..அதுவும் நல்லாத்தான்...
ஆனா போற போக்குதான் பயம்மா இருக்கு....

............................................................................
பாடும் பாடல்களும்,வரிகளும்தான் கவினயம்ம்மா இருக்கு...

மயக்கம் என்ன படத்தின் "பிறை தேடும் இரவிலே....." நிச்சயமா அது தனுஷ் எழுதினதுதான்னு நம்ப முடியல...அவ்வளவு அழகான பாடல் அது....சைந்தவியின் குரலும்,பிரகாஷ்குமாரின் தடவலும் பாடலை ரசிக்கவைத்து எம்மை மயங்கவைக்கிறது...உயிர் உருகும் அந்தப் பாடல் இனிமையான ஒரு பாடல்.....


பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா!!!

இருளில் கண்ணீரும் எதற்கு 
மடியில் கண் மூட வா 
அழகே இந்த சோகம் எதற்கு 
நான் உன் தாயும் அல்லவே 

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி!!!


##############################################

அடுத்தபாடல் இருக்கே...சொகம்..
செல்வகராகவன்,தனுஷ் எழுதி தனுஷ் பாடும் "ஓட ஓட"..... ம்கும் மட்டும்தான் சொல்லலாம்....

உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது.

பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…


####################################

அடுத்த பாடலும் அப்பிடியே...என்ன காதல்..."அடிடா அவள...ஒதடா அவளை..." யாருக்கு இப்பிடியொரு மனசு வரும்.....

தேன் ஊறுன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..

Friendsசு கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்டா 

#################################

"மூணு" படத்திலும் தொடருது கலைச்சேவை....
மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக களமிறங்குகிறார் தனுஷ்....


அங்கொரு பாடல் உச்சம்....அப்பிடியொரு கொலைவெறி.....


why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி?
வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி?
வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி?
வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி?


###################################

நான் நினைக்கிறேன் சிம்புவுக்கும்,தனுஷுக்கும் இதில்தான் இப்போ பயங்கர போட்டி நடக்குதுன்னு....அப்பிடி எழுதுறாங்க பாட்டு....

ஐஸ்வர்யா தனுஷ் தன் கணவன் தனுஷ இப்பிடி இயக்குறது யாருக்கு நல்லதோ?
கடவுள்தான் நம்மள காப்பாத்தணும்.....


ஆனால் பாடல் புதுமையாய் இருக்க எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள்....

சிறந்த பாடகர், சிறந்த பாடலாசிரியர்னு அதற்கும் விருது கொடுக்கும் நம்ம எலக்கிய சமூகம் 
####################################

வை திஸ் கொலைவெறி கொலைவெறி????

0 comments:

Post a Comment