ஆஹா!என்ன விலை அழகு?
அனுஷ்காப்புயல் கோடம்பாக்கத்தை மையம் கொண்டு வருடங்கள் சில கடந்தாலும் அம்மணியின் விஸ்வரூபம் இப்பத்தான் பிரம்மாண்டமா இருக்கிறது..ரெண்டுல கிளாமரா இடயக்காட்டின அம்மணி தூத்தல் மழைக்கே வழுக்கிட்டுப் போனாலும், அருந்ததிக்கப்புறம் கொஞ்சம் ச்டாங்காவே பேஸ்மெண்ட போட்டிற்றாங்க...
அனுஷ்கா ஒரு யோகா டீச்சர்..அவங்க உடல் அமைப்பிலையும்,அந்த பளபளப்பிலையுமே அது சூப்பெரா தெரியுது...சூப்பர் எண்ணத்தான் ஞாபகம் வருது...அவங்க அறிமுகமானதே சூப்பர் என்ற படத்தில்தான்...நாகார்ஜுன் ஜோடியா வந்தாங்க...
முதல் படத்திலையே அப்பிடியொரு கிளாமர்...சூப்பர் சூப்பெறு ..ஆனா என்ன அந்தப்படத்தில நாகார்ஜுன்கூட சேர முடியாம செத்துப்போயிடுவாங்க...ஆஹா...நாகார்ஜுன் எண்ட உடனே இன்னொண்ணு ஞாபகம் வருது...நாகார்ஜுன் படத்தில அறிமுகமாகி அவரோட நல்ல பிரெண்டாகிட்டாங்க அனுஷ்கா...அப்புறம் நாகார்ஜூனோட நிறைய நடிச்சிட்டாங்க...அப்புறம்தான் தெரியுமே....கொஞ்சம் கொஞ்சம் கிசு கிசு நம்ம நாகார்ஜுன் பத்தியும்...அனுஷ்கா பத்தியும் வரத்தான் செய்தது...நாகார்ஜுன் வயசு,கியசு எதையும் பார்க்காம நம்மாளுக நம்பிட்டாய்ங்க..இருக்கட்டும்...
சரி...அத விடுவம்...அப்புறம் நம்ம சிம்புகூட நடிக்க வந்தாங்களா..சிம்புன்னா வம்பாப்போச்சே...அனுஷ்காவேற வானம் படத்தில நல்ல வேஷப் போட்டாங்களா....எல்லாம் பச்சக்...பச்சக்...சிம்புவேற அனுஷ்கா புகழ்மாலையாவே பாடினாரா...நம்மாளுங்க உயரத்தையும் யோசிக்கல...ஒண்ணையும் யோசிக்கல...நம்மாளுக நம்பிட்டாய்ங்க..இருக்கட்டும்...
க்ரிஷ் பற்றியும் தெரிஞ்சிருக்குமே?தெலுங்குப்பட இயக்குனர்..வேதம் படத்தில அவருக்காகத்தான் அனுஷ்கா அந்த மாதிரியொரு வேடத்தில நடிச்சான்கலாம்...என்?வேதம் படத்தின் ரீமேக்தானே வானம் படம்...வானம் படமும் அவர்தானே இயக்குனர்...அதிலையும் அவருக்காகத்தான் எல்லாமே...தோற்றப்பொருத்தம் இல்லன்னாலும் இதுவும் ஜோடி சமாச்சாரமாத்தான் பேசப்பட்டது....நம்மாளுக நம்பிட்டாய்ங்க..இருக்கட்டும்...
அதுக்குப்பிறகு வந்ததே..ஒரு செய்தி...அது பிரேக்கிங் நியூஸ்...ஹாட் நியூசு...அம்மாடியோவ்..அதுதான் நம்ம நாகார்ஜுன் பையன் நாக சைதன்யாக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருச்சுன்னு...ரொம்பப்பெரிய நியூசு...நாக சைதன்யா ரொம்பச் சின்னப் பையன்..அவனுக்கும்..அனுஷ்காக்கும்...எப்பிடி இந்த நியூஸ் வந்ததுன்னா...நாகசைதஞாக்கு அனுஷ்காதான் யோகா டீச்சர்..அப்புறம் விடுவானுங்களா நம்ம பய புள்ளைக...எழுதிட்டாய்ங்க... நம்மாளுக நம்பிட்டாய்ங்க..இருக்கட்டும்...
நாகார்ஜுன் -சிம்பு -க்ரிஷ் -நாக சைதன்யா இப்பிடி பேசின நம்மாளுக இப்ப மறுபடியும் நாகார்ஜுனாக்கிட்ட வந்தி நிக்கிறானுக...இதுதான் வாழ்க்கை ஒரு வட்டம்கிறதுபோல...ஆரம்பிச்ச புள்ளியிலையே வந்து நிக்கிதா...வட்டம்தான்...
ஆனாலும் நம்ம அனுஷ்கா உயரத்திற்கேத்தமாதிரி உறுதியாத்தான் இருக்காங்க...சினிமாக்கு நடிக்க வந்தமா..சம்பாதிச்சமா..செட்டிலானமா....நல்ல கொள்கை...
ஆனாலும் நிச்சயதார்த்தத்தை மேடம் மறுத்திட்டாங்க.உள்ளுக்குள்ள கொன்பியூஸ் ஆகியிருப்பாங்க...அழகா இருக்கிறது அவங்க தப்புங்களாக்கும்???
ஆனாலும் நாகார்ஜுந்தான் கொஞ்சம் குழம்பிப்போயிட்டார்...என்னங்க இது?என்கூடயும் சேர்த்து எழுதுறிங்க /சொல்றிங்க...என் புள்ளையோடையும் சேர்த்து எழுதுறிங்க /சொல்றிங்க..என்னென்னு கேக்குறன்?என்னென்னுதான் கேக்குறன்...பாவம் அவரும் எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பாரு ?அவரு வீட்டில என்ன பிரச்சினையோ?ஆனா இது கொஞ்சம் ஓவர்தாங்க...
இனியாச்சும் விட்டிருங்க...பாவம் அனுஷ்காகாகாகா!!!
அவங்க நல்ல சம்பாதிச்சு வாழட்டும்....விட்ருங்க...












0 comments:
Post a Comment