Pages

Showing posts with label ஹிந்தி விமர்சனம். Show all posts
Showing posts with label ஹிந்தி விமர்சனம். Show all posts

Sunday, March 10, 2013

Matru ki Bijlee ka Mandola - ஹிந்தி விமர்சனம்



நீண்ட நாட்களுக்குப் பின் வலையுலகில் பிரவேசிக்கிறேன்...தொடர்ந்த சில கால இலக்கற்ற வாழ்வில் இயந்திரமாய் ஓடிக்களைத்து இப்போ கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விடுவதாய் உணர்கையில் மீண்டும் இந்தப்பக்கம் ஒரு எட்டிப்பார்த்தல்..

இந்த வருடத்தின் என் முதல் பதிவு....



இன்றுதான் இந்தப்படம் பார்த்தேன்..படம் சொல்லிக்கொள்ளும்படி எதையும் சாதிக்காவிட்டாலும் நன்றாக சிரிக்கவைத்தது...

உங்களுக்கு எப்படியோ நான் நன்றாக சிரித்துக் களைத்தேன்...என் மனநிலைக்கு அப்படி சிரிப்பது தேவைப்பட்டதாககூட இருந்திருக்கலாம்..வேதனையில் அலுத்துக் களைத்த மனது சிரித்தது...

உங்களை போரடிக்காமல் படத்திற்கே செல்கிறேன்....

.........................................................................................................

எனக்குப் பிடித்த இம்ரான் கான், மற்றும் அனுஷ்கா ஷர்மா..அதுவே படம் பார்க்க என்னைத் தூண்டியது...இம்ரான் கான் படங்கள் எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும்...அது போல அனுஷ்கா ஷர்மா படங்களும் சிரிக்கவைக்கும்...(ரப் நே பனாடி ஜோடி விதிவிலக்கு) மற்றும்படி அவரது பெரிய வாயும்,சிரிப்பும் கூடவே அந்தக் குறும்பும் என்னை ஈர்த்துவிடுகின்றன..



படத்தை ஒரு எதிர்பார்ப்போடுதான் பார்த்தேன்...ஆனால் பார்க்கும்போதே படம் காமெடியை மட்டும் கொண்டு கொஞ்சம் கதையத் தூவியிருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது..



விவசாயத்தையே நம்பி வாழும் சமூகம் தங்கள் எஜமானானின் கீழ் கட்டுண்டு விடுதலைக்கு போராடுவது நகைச்சுவையோடு இணைந்து பயணிக்கிறது...கூடவே கொஞ்சம் காதல்..ஆனால் காட்சிகள்தான் இல்லை...


ஆனாலும்  ஓரிடத்தில் இயக்குனரை பாராட்டியே ஆகணும்...கதாநாயகியை அறிமுகப்படுத்துகையில் எருமைகளோடு  ஒரு குளத்தில் அறிமுகப்படுத்துவார் பாருங்கள்...அங்க இருக்கு...சாரோட திறமை...இப்படி இதுவரை எந்த இயக்குனரும் செய்திருக்கமாட்டார்...


நீண்ட கால இடைவேளையின் பின் பங்கஜ் கபூரை பார்த்தது அதுவும் காமெடியில் பார்த்தது நன்றாகவே இருந்தது..."ரோஜா" படத்தில் வில்லனாகப் பார்த்ததற்கும் இதில் வயோதிபராக பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு...அனாலும் ஷாகிட்  கபூரின் அப்பாவா இவர் என்று வியக்கத்தான் முடிகிறது....


சபானா ஆஸ்மி இப்படித்தான் நடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாரா என்ன? ஒரு மாதிரியாகவே வந்து போகிறார்....


அனுஷ்கா ஷர்மாவிற்கு நிச்சயக்கிப்பட்ட அந்த மாப்பிளை லூசு நன்றாகவே காமெடியாகிருக்கிறது..அதைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது...

லேகா வாஷிங்டன் கௌரவத் தோற்றத்தில் தனக்கேயுரிய மேலைத்தேய எழிலில் கலக்கிவிட்டு சென்று விடுகிறார்...

காதலன் காதலி காதல் காட்சிகள் இழையோடாவிட்டாலும் ஒரு லிப் டு லிப் காட்சியை வைக்க மட்டும் தவறுவதேயில்லை இந்த பொலிவூட்காறர்கள்....

தயாரிப்பாளருக்கு செலவு கொஞ்சம்கூட வைக்கவே இல்லையே என்று இயக்குனர் கவலைப்பட்டிருப்பார் போல...அதனால் ஆபிரிக்கப் பழங்குடியினர் பன்னிரண்டு பேரை நன்றாக ஆடவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்...

கொஞ்சநேரம் சிரித்து மகிழலாம்..


####################################

Sunday, July 22, 2012

ஹிந்தி சினிமா -Department

இந்திய சினிமாவில் ராம்கோபால் வர்மாவிற்கென்று தனியிடமே இருக்கு.அவரோட திரைக்கதைக்கும்,அந்த ஸ்டைலுக்கும் படம் பார்க்கிறவர்களே அதிகம்.ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய படைப்பு இந்த டிப்பாட்மென்ட்.


எனக்கு ராம்கோபால்வர்மா படங்கள் பிடிக்காது.அவரின் படங்களில் இருக்கும் வன்முறையும்,ரணகளமும்,எல்லைமீறிய கவர்ச்சியும் எனக்கு எரிச்சல் தருபவை.இந்தப்படத்தை "ராணா"விற்காக மட்டும் பார்த்தேன்.

ராம்கோபால்வர்மாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட தாதாக்களும்,போலீசும்தான் திரைக்கதை..
தீவிரவாதத்தை ஒழிக்க தனியான ஒரு போலீஸ்படை அமைக்கப்படுகிறது.அந்த அமைப்பை பிரபல தாதாவின்  கையாள்  எப்படி கையாள்கிறான் என்பதே கதை.முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் அவை கொஞ்சமே.தன் பாணியில் அவற்றை வித்தியாசமாக படைத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.

அமிதாப்பச்சன் கலக்கியிருக்குறார்.யாரையோ நையாண்டி செய்வதுபோன்ற பாத்திரம்.

சஞ்சய் தத்திற்கு சுடுவதை தவிர வேலையில்லை.சும்மா வந்து சுட்டிற்று போகிறார்.

ராணாவிற்கு நடிக்க களம் இல்லை.
முகத்தில் எந்த எக்ஷ்பிரஷனும் இல்லை.
உடம்பைத்தவிர வேறு பிளஸ் இல்லை.
சுட்டிற்றே இருக்கார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.


மதுஷாலினி அநியாயத்திற்கு அவ்வளவு கவர்ச்சி.


வில்லிஎன்றாலே கவர்ச்சியான காரெக்டர் என்று எழுதிவைத்துவிட்டார்கள்.


டுவிஸ்டு இருக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்காங்க.இருந்தும் பயனில்லை.இப்பிடி சுட்டிற்றே இருக்கும் சினிமா கலாச்சாரத்தை எப்போ ஒழிக்கப்போறாங்களோ தெரியல.உண்மையை சொன்னா படத்தில் சுவாரசியமே இல்லை.

இந்த அண்டர்வேல்ட் படங்கள் பார்த்துப் பார்த்து சலித்துப்போன சினிமா ரசிகனுக்கு எப்போ விடுதலை கொடுக்கப்போறாங்களோ இந்த இயக்குனர்கள்??

#############################################

Tuesday, December 13, 2011

Zindagi Na Milegi Dobara - ஹிந்தி விமர்சனம்

ஹிர்திக் ரோஷன பிடிக்காத பொண்ணுங்க ரொம்பவும் குறைவாத்தான் இருப்பாங்க.எனக்கும் ஹிர்திக்க ரொம்பப் பிடிக்கும்..

ஹிர்திக் ரோஷனோட எல்லாப் படங்களும் பார்த்தாலும் நான் ரொம்ப விரும்பிப் பார்த்தது "ஜோதா அக்பர் "....ரொம்பவும் நல்ல படம்..

ஹிர்திக்கோட டான்ஸ் மற்றும் அந்த மேனரிசத்திற்காகவே ஒரு கூட்டம் இருக்கு...

இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானது...


Zindagi Na Milegi Dobara 



மூன்று நண்பர்கள் - பள்ளித் தோழர்கள் ..
 (ஹிர்திக் ரோஷன் - அர்ஜுன் ,அபய் தியோல் -கபீர், பார்ஹான் அக்தர் -இம்ரான்)

மூன்று பெரும் மூன்று இடத்தில்....மூணு பேருமே ஒன்றாய்  ட்ரிப் போகணும்கிறது இவங்களோட ஆசை...


நாலு வருசத்திற்குப் பிறகு அந்த ஆசை நிறைவேறுது..

கபீர் நடாசாவ நிச்சயம் பண்றாரு...அப்புறமா பச்சிலர் ட்ரிப் ஒன்னு ஸ்பெயினுக்குப் போக அர்ஜுன கூப்பிடுறார்....

வேலை...வேலை..பணம்...பணம்னு லண்டனில் பிசியா வாழும் பினான்சியல் ப்ரோக்கர் அர்ஜுன் முதலில் மறுத்தாலும் அப்புறம் ஓகே சொல்றார்...மூணு பெரும் ஸ்பெயினுக்கு போறாங்க...ரொம்பவும் என்ஜாய் பண்றாங்க...


அந்த ட்ரிப்பில் ஒருத்தர் அவருக்கு விருப்பமான திரிலிங் விளையாட்ட தெரிவு செய்வாரு....அத மற்ற இரண்டு பெரும் கட்டாயம் விளையாடனும்..இது அவங்க பள்ளிக்காலத்தில எடுத்த முடிவு...

கபீர்(அபய்) சீ டைவிங் தெரிவு செய்வார்..
தண்ணினாலே அர்ஜுனுக்கு(ஹிர்திக்) பயம்...

அதனால ஒரு டைவிங் இன்ஸ்ட்ரக்டர தெரிவு செய்வாங்க...அவங்கதான் ஹீரோயின் கத்ரீனா கைப்(லைலா).

லைலாவால டைவிங்க காதலிக்குராறு ஹிர்திக்.. 


இதுக்கிடையில் ஸ்கைப்பில் அபய்,நடாசாக்கூட பேசும்போது....அங்கு லைலா வர....அவங்க காதலில் பிரச்சினை வருது....உடனே நடாஷா ஸ்பெயின் வந்திடறாங்க...அப்புறம் அவங்க ட்ரிப் அவ்வளவுதான்...


இப்பிடியா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான விளையாட்டை தெரிவு செய்ய மற்றவங்க அத எப்பிடி சமாளிக்கிறாங்க என்றதும்....அந்த பாச்சிலர்ஸ் ட்ரிப்பில் அவங்க என்ன விதமான பிரச்சனைகளை சமாளிக்கிறாங்க என்றதும்தான் படம்...ரொம்ப சுவாரசியமா நகரும் கதையில் காமெடிக்கு பஞ்சமே இல்லை..

இந்த ட்ரிப்பில் வாழ்க்கைய ஈசியா வாழற லைலாக்கும்,பணம்..பணம்னு வாழற ஹிர்திக்கும் காதல் வந்திருது......அதுவும் வித்தியாசமாவே வருது....


பரபரப்பான நேரம் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறாங்க....

ஹிர்திக் ரோஷன்,அபய் தியோல்,பார்ஹான் அக்தர் கூட்டணி செம கலக்கல்....
ஆரம்பத்தில் ஹிர்திக்,இம்ரான வெறுக்கும் காட்சிகள் ஹிர்திக்கின் பணத்திமிர் என்று நினைத்தால் அப்புறம் அதற்கு வேறு ஒரு நியாயம் வந்து கிடைக்குது...படம் பார்க்கும்போது  நமக்கும் ஊர் சுத்தக் கிளம்பனும்னு ஆசை வருவதை தடுக்க முடியல..


ஸ்பெயினோட அழகை அழகா காடியிருக்காங்க...


டோமாட்டினோ பெஸ்டிவெல்(தக்காளித் திருவிழா),
அப்புறமா புல் ரன்(காளைச்சண்டை) என்று ஸ்பெயின் களை கட்டுது...


ஹிர்திக் அழகா தன் வேலைய செய்றார்...சீ டைவிங் காட்சிகளில் அழகு..


ஸ்கை டைவிங் காட்சிகளும்,இம்ரானின் நடிப்பும் நல்லாவே இருக்கு...
இம்ரான் அந்த விலை கூடின ஹான்ட் பாக்கிற்கு பார்வதின்னு பேர் சொல்லி லைலாக்கு அறிமுகப்படுத்துவது கல கல...


கத்ரீனா கைப் -எப்ப பாரு அந்நியமுகமாய்...
இங்கும் பாதி அமெரிக்கன்..பாதி இந்தியனாவே காட்டப்படுறாங்க...ஆனாலும் கதைக்கு பொருத்தமான தெரிவு....


ஸ்பெயின் பொண்ண இம்ரான் காதலிக்கும் காட்சிகளில் நல்லாவே சிரிக்க முடியுது....


இப்பெல்லாம் ஹொலிவூட்டின் ஆதிக்கம் பொலிவூட்டில் ரொம்ப ரொம்ப ரொம்பவும்தான்....இங்கும்....
நம்ம தமிழ் சினிமாவிலே உதட்டோடு உதடு முத்தம் சிம்பிளா வந்திட்டுப்போகுது....

கமல் கண்டெடுக்க சிம்பு தொடர்கிறார்....குடும்பத்தோடு பார்க்கமுடியாத சீன்கள நிறையப் பேர் செய்றாங்க....
இதில் சூர்யாக்கு என்னவோ முதல் இடம் கொடுக்கலாம்...
கவுதம் மேனன் நல்ல இங்கில்ஷ் பேச வைக்கிறார்....நல்லா கொண்டு போறாங்க.......

ஆங்கில மோகம் இருந்தது மாறி ஆங்கில வாழ்க்கையே இப்போ வந்தாச்சு.....




.
முடிவில் அர்ஜுன் - லைலா திருமணத்தில் நிறைவுறுகிறது படம்...


மொத்தத்தில் யூத்துக்கள் விரும்பிப் பார்க்ககூடிய படம்.....


ஜாலியான பாச்சிலர்ஸ் ட்ரிப்பிற்கு நீங்களும் தயாராகலாம்....
################################################

Tuesday, December 6, 2011

Mere brother ki dulhan -ஹிந்தி விமர்சனம்


Mere brother ki dulhan 


"ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்" தான் நான் பார்த்த இம்ரான் கானின் முதல் படம்.அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது..இம்ரான் கானின் கியூட்னசும் பிடிச்சிருக்க இந்தப் படத்தை பார்க்கும் ஆவல் வந்து படத்தையும் பார்த்திட்டன்..


குஷ் அக்னிஹோத்ரி ஒரு அசிஸ்டன்ட் டிரெக்டர்(இம்ரான் கான்).
லவ் அக்னிஹோத்ரி (அலி சபார்)லண்டனில் வாழும் இந்தியன்..

லவ் மற்றும் பியாலிக்கிடையிலான (டாரா டீ சோசா)ஐந்து வருட காதல் ப்ரேக் அப்ஆக லவ் இந்தியப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பி பொறுப்பை தம்பி குஷ்ஷிடம் ஒப்படைக்கிறார்..

குஷ் அண்ணன் லவ்வுக்கு பெண் தேடி அலைந்து திரிந்து ஒரு பெண்ணை கண்டெடுக்கிறார்..அந்தப் பெண் ஏற்கனவே குஷ்ஷுக்கு ஒரு முறை அறிமுகமானவள்...


டிம்பிள்(கத்ரீனா கைப்)லண்டனில் பிறந்து இந்தியாவில் வாழும் ரொம்பவும் அட்வான்சான பெண்.

சிகரட்,குடி என்று ஆர்ப்பாட்டமாக வாழும் பெண்..அந்தப் பெண்ணை அண்ணனுக்கு பேசி,நிச்சயமாகி,கல்யாணம் வரை போகும்போது நம்ம ஹீரோக்கு ஹீரோயின்மேல லவ்ஸ் வந்திடுது..
ஹீரோயினுக்கும் அதே..அப்புறமா குடும்பத்தை பகைக்காம தங்கள் காதலில் இந்த ஜோடி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை..ரொம்பவும் காமெடியா சொல்லியிருக்கிறார் இயக்குனர்...


இம்ரான் கான் - எப்பவும் பார்த்த மாதிரியே இருக்கிறார்..கண்கள் பேசுதோ? ...


கத்ரீனா கைப் நடிச்சிருக்காங்க..


கத்ரீனா கைப் "தனு வேட்ஸ் மனு" கங்கனா ரனாவத்தை அடிக்கடி ஞாபகமூட்டினார்...கொஞ்சம் அதேமாதிரி கதையும் கூட..


அலி சபாரும் நல்ல தெரிவு..எல்லாரையும்விட கத்ரீனா கைபே கவர்கிறார்..நடிக்கிறார்..


படம் காமெடி கலந்த காதல்...அடிக்கடி சல்மான் கானையும் வம்புக்கிழுத்த மாதிரி இருந்துச்சு..ரசிக்கக்கூடிய படம்...

மேரே ப்ரதர் கி டுல்ஹான் (அண்ணனுக்கான மணப்பெண்)


அண்ணனுக்கான மணப்பெண் தேடல் தனக்கான மணப்பெண் தெரிவில் முடிகிறது...
###########################################

Thursday, November 17, 2011

Force -ஹிந்தி விமர்சனம்

நிறைய நாட்களுக்குப் பிறகு பார்க்கக்கிடைத்த ஹிந்திப் படம் "FORCE" 




எனக்கு ஹிந்திப் படங்கள் என்றால் மிகுந்த ஆர்வமும்,விருப்பமும்...தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருத்த எனக்கு அந்தப் படங்களில் இப்பெல்லாம் திருப்தியே இல்லை..என்னதான் அக்சன் படமா இருந்தாலும்,காதல் படமா இருந்தாலும்,காமெடிப் படமா இருந்தாலும் எனக்கு எல்லாமே காமெடிப்படமாகவே தெரியுது..இந்த திருப்தியின்மையே வேற்று மொழிப்படங்களை என்னை பார்க்கத் தூண்டியது..அப்பிடி பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஹிந்திப்படங்கள் மேல கொஞ்சம் கூடுதல் கவனம்....


அதிலும் எல்லா ஹிந்திப் படங்களும் பார்க்கமாட்டேன்...படங்களின் ட்ரெயிலர் என்னை பார்க்கத் தூண்டியிருக்கணும்...ஆனாலும் ஷாருக்கான் படங்கள் மேல் தனிக் கிறுக்கம்...ஹிந்திப் படம் பார்த்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று பார்த்தேன்..


பொதுவாக எனக்கு ஜோன் ஆப்ரஹாமின் படங்கள் பிடிப்பதில்லை..எப்பபாரு சட்டையை களட்டிவிட்டுக்கொண்டு அவரின் உடம்பைக் காட்டுவதிலே ஜோன் ஆபிரகாம் அக்கறையாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம்..
ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் "ஜூதா ஹை சா ஹீ" என்ற படம் பார்த்தேன்..எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது..வித்தியாசமான ஜோன் ஆப்ரஹாமை பார்க்கமுடிந்ததில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன்..

அந்த ஈர்ப்பில் இந்தப் படத்தை பார்க்க உட்கார்ந்திட்டன்..பார்க்க ஆரம்பிச்ச உடனே தெரிஞ்சுபோச்சு..படம் நம்ம "காக்க காக்க" படத்தோட ரீமேக்குன்னு..என்னாடா இது வம்பாப்போச்சு என்றிருந்தாலும் அந்த லூசுப்பொண்ணு ஜெனிலியாவின் சிரிப்பிற்காக உட்கார்ந்தாச்சு...பொதுவா எனக்கு ரீமேக் படங்கள் பிடிக்காது..பார்க்காத படத்த பார்க்கிறதில்தான் என்றும் ஈர்ப்பு..

அப்பிடியே காக்க காக்க" எந்த வித்தியாசமுமே இல்லை..என்னை அவங்கட மும்பை சூழலிற்கேற்ப மாத்தியிருக்காங்க..

ஹீரோ ACP "யஸ்வர்த்தன்" 


ஜோன் ஆபிரகாமின் பாடி அந்த கரக்டேருக்கு பொருந்தும்னு நினைத்திருப்பாங்க போல.ஆனாலும் அந்த வெயிட்டான மிரட்டும் பாத்திரம் ஜோன் ஆப்ரஹாமிற்கு அந்நியமாகவே தெரியுது.. சூர்யாவின் கண்களில் இருந்த அந்த மிரட்டல்,மீசையில் இருந்த வீரம் மிஸ்ஸிங்..மிஸ்ஸிங்...

சிலநேரம் வில்லனை துரத்திப் பிடிக்க ஜோன் ஓடும் காட்சிகளில் அந்த உடம்பை கஷ்ற்றப்பட்டு தூக்கிக்கொண்டு ஓடுவதுபோல இருக்கு..


ஹீரோயின் "மாயா"நம்ம ஜெனிலியா...


ஜெனியைப்பார்க்கும்போது ஜோதிகா கண்களுக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை..இதிலிருந்தே ஜோதிகாவின் நடிப்பு எவ்வளவிற்கு சிறப்புன்னு தெரியுது...


மாயாவா வரும் ஜெனிலியா வழமை போலவே கியூட்டா சிரிக்கிறா...அழகா இருக்கிறா..நிறைய ரொமான்சிலும் கலக்கியிருக்கிறா...நடிச்சாவான்னு எனக்கு தெரியல...


ஜெனிலியா ஜோன் ஆபிரகாமோட நெருக்கமாத்தான் நடிச்சிருக்காங்க...கெமிஸ்ட்ரி நல்லாத்தான் இருக்கு...ஜெனி கிளாமராவும் நடிச்சிருக்காங்க..


வில்லன் விஷ்ணுவா "வித்யுத் ஜம்வல்"..


எனக்கு புதுகமாவாகவே தெரிந்தார்...ஆனா ஹீரோ களை இருக்கு..மிரட்டினார்.....


இசை ஹாரிஸ் ஜெயராஜா..அதே காக்க காக்க பாடல்கள் என்றாலும் சூப்பர்...

ஓமகசீயாப் பாடல் -இங்கு காமோ காமோ அப்பிடின்னு வருது...கேகே மற்றும் சுசித்ரா குமார் பாடியிருக்காங்க...நல்லா இருக்கு...

கசே கஹூ -கார்த்திக் மற்றும்,பாம்பே ஜெயஸ்ரீ பாடியது...
என்னுடைய இப்போதைய பேவரிட்...ரொமாண்டிக் பாடல்  சூப்பர்...



நிஷிகாந்தின் இயக்கம் பரவால்ல...
படம் ஏதோ விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தாலும் மனசில் ஒட்டல...ஒரு தரம் பார்க்கலாம்.....

இந்தப்படத்தை பற்றி ரொம்பவும் கேள்விப்படாட்டாலும் இந்த ஒரு விஷயத்தில கேள்விப்பட்டிருப்பிங்க...


இதிலும் யஸ்வர்தனுக்கும்,மாயாவிற்கும் கல்யாணம் நடக்கும்...சினிமாவிற்கப்பால் ஜெனிலியாவிற்கும்,ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் கல்யாணம் என்று பேச்சு வந்ததும்,படத்தில் கல்யாணத்தை நடத்திவைத்த ஐயர் என்னை சொன்னாரு தெரியுமா? 

"ஜோன் ஆபிரகாமும்,ஜெனிலியாவும் கல்யாணம் பண்ணிட்டாங்களே.....,உண்மையில உண்மையான மந்திரங்கள் சொல்லியே கல்யாணத்தை நடத்தினேன்...அவங்களும் அக்கினி வலம் வந்து,மாலை மாத்திக்கிட்டாங்க ...இது சினிமாக் கல்யாணம் இல்ல..உண்மைக்கல்யாணம்.."

என்னடா இது வம்பாப்போச்சு?அவங்களுக்கு இது சகஜம்தானே....

FORCE - லூஸ்

##########################################