11 -11 -11
என்ன ஒரு நாள் இந்த நாள்..
ஒன்றுஒன்று..ஒன்றுஒன்று..ஒன்றுஒன்று....அதிலும் ஒன்றுஒன்று வருமா???
சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கினபோது மனிதனுக்கு வந்த பெருமையை விட,
இந்தியா சுதந்திர தேசமானபோது இந்தியனின் தியாகத்தை விட,
நாசா செவ்வாய்க்கு சட்டலைட் அனுப்பியபோது அமெரிக்கனின் வேகத்தை விட,
கடாபியை வீழ்த்திய லிபியனின் புரட்சியை விட,
இலங்கைப்போரின் போதான மகிந்தவின் பெருமிதமான மிரட்டல் அடியை விட,
பெருமையாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் பெருமித நிகழ்வு நாளைய தினம் வெளிச்சத்திற்கு வருகிறது.....
அப்பிடி என்ன சரித்திர நிகழ்வு நடக்கப்போகுது?

- இந்தியா வியாழனுக்கு சட்டலைட் அனுப்பப்போகுதா?
- பாக்கிஸ்தானுக்கு ஆளில்லா விமானம் அனுப்பப்போகுதா?
ஏதும் இயற்கை அழிவு நடக்க இருக்கோ?
- இந்தோனேஷியா கடற்பரப்பில் சுனாமி எச்சரிக்கையா?
- பூமிமேல எரிகற்கள் விழப்போகுதா?
இல்ல..வேறயா?
- அமெரிக்கர் டுவின் டவர கட்டப்போறாங்களா?
- ஜெயலலிதாவும் - கலைஞரும் ஒன்றுபடப்போகிரார்களா ?
- விஜய்க்கு தேசிய விருது கிடைக்கப்போகுதா?
- நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு சிம்புவும்,மல்லிகா ஷெராவத்தும் போகப்போறாங்களா?
- பவர் ஸ்டாருக்கு ஜேம்ஸ் கமரூன் படத்தில சான்ஸா?
இப்பிடில்லாம் யோசிக்கிறிங்களா?
அந்த நாளப்பத்தி கவலைப்படாத, எதிர்பார்ப்புக்கள் இல்லாத ஆக்களே ஆசியாக்கண்டத்தில...இந்தியாவில இருக்கமாட்டாங்க...
டுவிஸ்டு போதுங்க...மேட்டருக்கு வாங்கன்னு எங்கோ ஒரு சத்தம் எனக்கு கேக்குது....ஓஹோ!நீங்கதானா அது...சாரி...சொல்லிடறன்...
இந்த பதிவின் மூலம் சகலருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்....
" இந்திய உலக அழகிகள் வரலாற்றிலே முதல் முறையாக திருமணமாகி சில ஆண்டுகளிலேயே ,நாளையதினம் குழந்தையை பிரசவிக்கிறார் ஐஸ்வர்யாராய்"
நவம்பெரிலிருந்து பரபரப்பாக பேசப்படும் விடயம் நாளைய தினம் நடைபெறப்போகும் சரித்திர நிகழ்வாகத்தான் இருக்கும்....ஐஸ்வர்யா ராய் அம்மாவாகிறதப் பற்றி அம்மாவாக்கினவரே கவலைப்படுறாரோ இல்லையோ அம்புட்டு பயபுள்ளைகளும் கவலைப்படுறாங்க...
தன் பொண்டாட்டி பிரசவ வேதனையில் துடிக்கிற நேரம் பிரியாணி சாப்பிட்டிற்று கும்மியடிச்சவனுங்க எல்லாம் தாடிய தடவிற்று ரிமோட்ட மாத்தி மாத்தி பாத்துக்கிறானுங்க...சீரியலையே இருபத்து நாலு மணி நேரமும் போட்டாலே பார்க்க ரெடியா இருக்கிற மாமிங்க எல்லாம் நியூஸ் சனேலா பார்க்கிறாங்க...

கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா? நாளைய தினம் மீடியாக்கள் எப்பிடி நடக்கனும்னு மீடியாக்கள் அமைப்புகள் செயல்முறை விளக்கமே நடத்தியிருக்காங்க...என்ன கொடுமை...
உலகத்தில....எங்கெங்கோ மூலையில,எத்தனையோ ஆஸ்பத்திரிகளில தினமும் எத்தனையோ பிரசவங்கள் நடந்திற்று இருக்கு..எத்தனையோ குழந்தைகள் ஜனனம்...எத்தனையோ தாய்கள் மரணம்...அதெல்லாம் சாதாரணமாத் தெரியும்போது முன்னாள் உலக அழகி என்பதற்காக இப்பிடியா?
மும்பை செவன்த் ஹில்ஸ் மருத்துவமனையில் ஐந்தாவது மாடியில் நாளை ஐஸுக்கு பிரசவம்...
அந்த அறிவிப்பை தெரிவிக்க நான் முந்தி..நீ முந்தியென மீடியாக்கள் அலைய...
எப்ப குழந்தையின் படத்தை பார்க்கலாமென மக்கள் தவிக்க,
அந்த இரட்டைகுழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க ஜோசியர்கள் முன் நிற்க.....
அந்த அறிவிப்பை தெரிவிக்க நான் முந்தி..நீ முந்தியென மீடியாக்கள் அலைய...
எப்ப குழந்தையின் படத்தை பார்க்கலாமென மக்கள் தவிக்க,
அந்த இரட்டைகுழந்தைகளின் எதிர்காலத்தை கணிக்க ஜோசியர்கள் முன் நிற்க.....
கமெராமேன்கள் பளிச்சுக்கு தயாராக தயாராக...
ஐஸ்வர்யா தனக்கென பல நிருபர்களை வைத்திருந்தார்...அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுப்பது தன்னைப்பற்றிய செய்திகளை எழுதவும், புகைப்படங்களை பிரசுரிக்கவும் மட்டுமே என்று கேள்விப்பட்டிருந்தேன்...
நம்ப மறுத்த அந்த செய்தியை இப்போது நம்புகிறேன்...
நம்ப மறுத்த அந்த செய்தியை இப்போது நம்புகிறேன்...
அந்த நாளை கட்டாய பிரசவ நாளாகக்கூட ஐஸ் தெரிவு செய்திருக்கலாம்..விளம்பரத்திற்கு பிரசவமும் தேவைப்படுகிறது நடிகைக்கு...வாழ்க்கையின் எல்லாக்கட்டமும் நடிக்க முடியாது என்பது தெரியலப்போல...
பிரசவ நாளையே பரபரப்பாக்கிய இந்த நடிகைக்கு பிரசவத்தின் பின்னர் நடிக்க சொல்லணுமா?
பெரும்பாலும் நாளைய பிரேக்கிங் நியூஸ் இதுவாகத்தான் இருக்கும்..
பச்சன் குடும்பம் மீடியாக்கு நாளை ஒரு போலி சீன் போடும்...
- மீடியாக்கள் தங்கள் பெர்சனல் வாழ்க்கையில் தொந்தரவு செய்வதாக பிக் பச்சன் அறிவிப்பார்..
- ஆனாலும் தாங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை என்று அபிஷேக் வியர்வையைத் துடைப்பார்..
- ஆளாளுக்கு ஒரு நடிப்பு நடிப்பாங்க..
தனக்காகவும், தன் குழந்தைக்காகவும் பிரார்த்தித்த , வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி அப்பிடின்னு ஐஸ் கண் துடைச்சு சொன்னவுடனே நம்மாளுங்க பாலாபிஷேகம் ,சிறப்பு பூஜை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க..
கடைசியில் ஐஸ் குழந்தைகளோடு ஒரு சிரிப்பு.....
ஜூனியர் பச்சன் / ஜூனியர் ஐஸ் உதயமாகிறான்/ றாள்
மீடியாக்களும்,பிலாஷ்களும்,நடிப்பும் இல்லாத வாழ்க்கையை ஐஸ் விரும்ப மாட்டார் என்று நிரூபிக்கிறார்...மறைந்த இளவரசி டயனா மீதும் இந்தக்குற்றச்சாட்டு இருந்தது...மீடியாக்களுக்கு போஸ் கொடுக்காமல் கொடுப்பதும், செய்தி சொல்லாமல் சொல்வதும் அவருக்குரிய கலை.அதை ஐசும் பின்பற்றுகிறார் போல..
இன்றைய தினம் பலருக்கும் தூக்கம் வராது...வெட்டியாக வெட்டி முறித்து காத்திருக்கப்போகிறார்கள் மகா கனவான்கள்...
முந்திக்கொண்டு தங்கள் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் போட்டு ஒரு நாள் பேமஸ் ஆகத்தான்....
"ஒரு நடிகையின் பிரசவம் நெருங்குகிறது......."
வெட்டியா இருக்கும் நமக்கு நாளைக்கு ஜாலி...ஒவ்வொரு வி.ஐ.பியா காட்டுவாங்க டிவி ல..ஜாலி...ஜாலி...ஜாலி...ஜாலி!!!!!!!!!
#######################################

0 comments:
Post a Comment