பிரசன்னா எப்போ கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சார்? என்னது சச்சினின் சாதனைய அவ்வளவு சீக்கிரமா முறியடிக்கிறாரா?இப்பிடில்லாம் கேள்வி கேட்கிறவங்க தொடர்ந்து படிங்க...புரிஞ்சுகிட்டவங்களும் படிங்க...
அன்றைய நாட்களில் தன்னைவிட மிகவும் வயது குறைந்த பெண்ணைத்தான் பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணிப்பாங்க ஆண் சிங்கங்கள்...சில கிழடு கட்டைகள்கூட சின்னப்பெண்ணா தன் பேத்தி வயசில பார்த்து கட்டுவதும் உண்டு..அப்பிடி கட்டி ரெண்டே நாள்ல பெரிசு காலமாவதும் உண்டு...இப்பிடியிருந்துவந்த நம்ம சம்பிரதாயத்தை சமீபத்தில் சூப்பெரா மாற்றிக்காட்டினார் சிம்பு....என்னாது?சிம்பு கல்யாணம் பண்ணிட்டாரா?அப்பிடில்லாம் கேக்கக்கூடாது...தன் படத்தில மெசேஜா சொல்லுவாருல்ல..அது....அது...
சிம்பு சொல்லமுன்னாடியே அந்த மாற்றம் வரத்தான் செய்தது...ஆனாலும் பறையடிக்கிறமாதிரி ஊரையே கூட்டிச் சொன்னவர் சிம்புதான்...அவரு தனுஷுக்கு உள்குத்து வச்சு சொன்னது நிறையப்பேருக்கு முன்னுதாரணமாயிட்டு....அப்புறம் சின்னப்பொண்ண பார்த்த நம்ம பசங்க பெரிய பொண்ணுகள் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க...ஆன்டிமாருக்கு மவுசு கூடிப்போச்சு....
இப்ப பாருங்க...சின்னப் பொண்ண கல்யாணம் பண்ண ஆசைப்பட்டவன் எல்லாம் மாறிட்டாங்க...எல்லாம் அந்த வல்லவன் எபக்டு....அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயாவிலும் அதே கதை....சிம்புக்கு குஷ்பு,ஜோதிகா,அனுஷ்கான்னு பெரிய பொண்ணுகளாவே பிடிக்குது...
இப்ப பாருங்க...சின்னப் பொண்ண கல்யாணம் பண்ண ஆசைப்பட்டவன் எல்லாம் மாறிட்டாங்க...எல்லாம் அந்த வல்லவன் எபக்டு....அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயாவிலும் அதே கதை....சிம்புக்கு குஷ்பு,ஜோதிகா,அனுஷ்கான்னு பெரிய பொண்ணுகளாவே பிடிக்குது...
இங்க சச்சின் எங்க வந்தாருன்னு கேக்கப்படாது...காலகாலமாக வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் தங்கள் செயலுக்கு சான்றாக, முன்மாதிரியாகச் சொல்வது சச்சினைத்தான்..சிம்பு கூட சச்சினத்தான் சொன்னாரு...சச்சினுக்கு அப்புறம் தனுஷ், அபிஷேக் பச்சன் என்று பெரிய விஐபி கள் எல்லாம் லைனில் நிக்கிறாங்க...ஆனா சச்சின்தான் முதலாவது..அப்பிடி ஒரு மனிதர் அந்தக்காலத்தில இப்பிடியொரு திருமணம் செய்திருக்கிறார் என்றால் சும்மாவா?.....கண் பட்டுடக்கூடாது அந்த நல்ல மனுஷனுக்கு...
தன்னைவிட வயசுகூடின பொண்ண கல்யாணம் பண்ணப்போறவங்க எல்லாம் இததான் சொல்வாங்க...
சச்சின் ஐந்து வயசுகூடின அஞ்சலிய கல்யாணம் பண்ணலையா?
அபிஷேக் பச்சன் மூன்று வயசுகூடின ஐஸ்வர்யாராய கல்யாணம் பண்ணலையா?
தனுஷ் ஐஸ்வர்யாவ (ஒரு வயசாகூட?)கல்யாணம் பண்ணலையா?
இப்பிடி நபர்கள் இருந்தாலும் சாதனை நாயகனின் சாதனைதான் இங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது...
இப்போ பிரசன்னா இதில் சேர்கிறார்...தன்னைவிட ஒருவயது கூடிய சினேகாவை மணக்கப்போகிறார்.
சினேகாவிற்கு பின்னர் சினிமாவிற்குள் நுழைந்த பிரசன்னா "அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தில் சினேகாவுடன் ஜோடி சேர்ந்தார்..அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் என்று பேச்சு வந்துகொண்டிருந்தது...இப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களாம்..
எப்பிடியோ சினேகா கல்யாணத்திற்கு தயாரானது நிறைய ஆண்களுக்கு நிம்மதியா இருக்கும்..இல்லனா கையப்புடிச்சான்..காலக் கிள்ளினான் என்று சொல்லிருவாங்களே....
இனி பிரசன்னாவின் எதிர்காலம் என்னாகுமோ?
#########################################





3 comments:
நல்லா இருக்குங்க டீட்டெயில்...
பார்ப்போம் சிறப்பாக வாழ வாழ்த்துவோம்
இப்படி ஒரு ஆராய்ய்ச்சி ,நல்ல சொல்றிங்க டீடைலு
இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிகவே முடியலையப்பா,லேட்டஸ்ட், சினேகா!!!!.
Post a Comment