Pages

Wednesday, November 9, 2011

இது ஒரு சாப்பாட்டுக் கதை!

ஹாய் பதிவுலக நண்பர்களே!

எல்லாரும் நலமாக இருக்கிங்களா?எனக்குத்தான் உடம்புக்கு முடியல...
டுவிட்டர்மேனியா, பேஸ்புக் சிட்டாமேனியா,ப்ளாக் ஸ்லீப்பிமேனியா இப்பிடில்லாம் என்னமோ வருத்தமாம்..டாக்டர்ஸ் சொல்றாங்க..இதுக்கு மருந்தே இல்லையாம்...என்ன பண்றது...எனக்கும் இந்த நோய்களிலிருந்து குணமாக ஆசை...அந்த ஆசையெல்லாம் ரொம்பவும் பேராசை..

இன்னைக்கு விடுமுறை நாள்..ஆனாலும் நான் பத்து மணிக்கே கீரைக்காரர் கூவிய சத்தத்தில் எழுந்தாச்சு.வழமைபோலவே பிரஷ் பண்ணி...முகம் கழுவி...என் சர்வரோக நிவாரணி நெஸ்கபேயோடு என் செல்லக்குட்டி மடிகணணியோடு உட்கார்ந்தனா நேரம் போனதே தெரியல...காப்பி கப்ப பூச்சிகள் லவ் பண்ணத் தொடங்கின நேரம் எனக்கு பசி வர நான் அதுகளுக்கு சொர்ணாக்காவா மாறிட்டன்...

கப்ப கழுவி வச்சிட்டி என் ரூமப் பார்த்தால் ஐயோ என்ன ஒரு பரிதாபம்....எல்லாம் வச்சபடியே மியூசியம் மாதிரியே இருந்துச்சு..சரி...வேலையும் இல்ல...சாப்பிடலாம்னு பார்த்தால் என் கையால் சமைத்து என் வாயால் அதை அர்ச்சித்து எனக்கு நானே தண்டனை கொடுக்க விரும்பல நான். சரி இன்னைக்கு கடைக்குபோய் நல்லா வாங்கி சாப்பிடலாம்னு நினச்சு ஒரு சூப்பர் கடைக்குப்போய் சாப்பாடும் வாங்கியாச் .

ஆசை ஆசையா சாப்பாட பார்க்கிறன்...
உலகத்தில இருக்கிற எல்லாக் கடவுளையும் கும்பிட்டன்...(அட ஒரு வேலை சாப்பாட்டிற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்றேன்னு நினச்சா அதான் இல்ல...சாப்பாடு சூப்பெரா இருக்கணும்னு)
சாப்பாட பிரிச்சு மேசையில வைக்கிறன்...இல்லல்ல...
நிலத்தில உட்கார்ந்து சாப்பிட்டா ஒரு சோறு மீதமில்லாம நக்கி தின்னலாம்கிற சிக்கன உணர்வில்  நினைச்சுப் பாய தேடினா ம்கும் அதுக்கு எங்க போறது நானு..சரி ஒரு போர்வையை விரிச்சு என்னை ஆசுவாசப்படுத்தி அழகாய் உட்கார்ந்து பார்சலை பிரிச்சு வச்சா ஒலகமே................
அந்த உணவைப் பார்த்ததும் கண்ணீரா வருது..அம்மா நினைப்பு வாறத நிறுத்த முடியல..வீட்டுச் சாப்பாடு.....என்ன தவம் செய்தேன்???

  • நசிந்துபோய் குப்பறபட்டுத்திருந்த பூசணிக்காய்  என்னைப் பார்த்து சிரித்தது...
  • ஸ்ரேயிட்னிங் செய்த மயிர்களை திரிஷா என நினைப்பில் ஏதோவொரு கீரை என்னைப் பார்த்து கண்சிமிட்டி...
  • தண்டத்துக்கு பெருத்திருந்த அந்தப் பயற்றங்காய் நான் அவியவே இல்லன்னு சொல்லாம சொல்லிச்சு...
  • காலிபிளவர் காச்சல்வந்து படுத்தமாதிரி ஒரு மாதிரியாய் கிடந்தது 

ஒரே ஆறுதல் பொரியல் ....அத வாயில நீரூற எடுத்துக் கடித்தேன்...உப்பு என்ன விலையாம்??அது அங்க இல்ல....அப்புறம் எங்கே செல்லும் அந்த உணவு???

எனக்குப் பிடிக்காத காய்கரிகளாய் இருக்ககூடாது..இருக்கக்கூடாது என்று எத்தனை ஆண்டவனை வணங்கினேனோ யாரும் எனக்குத் துணை வரல்ல....அம்மா பசிக்குது என்று நான் சொன்னது வீட்டில தம்பிக்கு சோறு போடும் எங்க அம்மாக்கு கேட்டிருக்குமா? 

தனித்த வாழ்வு எப்ப கசக்குதோ இல்லையோ...சாப்பாட்டு நேரம் சோககீதம்தான்...

என் கையே எனக்குத் துணை என்றெண்ணி குக்கரை பற்றவைக்கிறேன்...
முதலில் குக்கரைப் பற்றவைக்கவும்......ஒரு பாத்திரத்தை  எடுத்து.......
தண்ணியை வைத்து நூடுல்சை போட்டு வடித்து  இறக்கி வேர்த்துக் களைத்து 
நீண்ட தூரப் பயணத்தில் என் பசி மயங்கிகெடக்கு.இதில இதையும் உள்ளே அனுப்பினால் நானும் அதே நிலையை அடைவேனே 


#####################################################



2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாத்திரம் இருக்கா? இல்லையா? சாப்பாடு வைக்க...


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

SURYAJEEVA said...

இங்கேயும் ட்விஸ்ட் ஆ இல்லை கதையே அவ்வளவு தானா... குக்கர் என்றால் அடுப்பு தானே?

Post a Comment