நவம்பர் - 7
என்ன இண்டைக்கு ஏதும் சுனாமி வரப்போகுதோ? இல்ல அணுகுண்டு பரிசோதனை எங்கயும் நடக்கப்போகுதோ என்று யாராச்சும் நினைச்சிங்க என்றால் சாரி...வெரி சாரி...அப்பிடி எதுவுமே இல்லை...
வழமை போலவே இன்றும் காலையில் எழும்பியவுடனே என் மடி கணணியை ஆசையாகப்பார்த்து குட் மோனிங் சொன்னேன்..அது பதிலுக்கு ஆசையாக என்னை கண்ணடித்து கூப்பிட்டு என் மூடைக்கெடுத்துவிட்டது...நானும் ரொம்பக்குஷியா என் இனிய தோழியை அணைத்துக்கொண்டேன்...அப்பத்தான் தெரிச்சுது...ரொம்பபெரிய கொண்டாட்டமே நடந்துகொண்டிருந்தது சமூகவலைத்தளங்களில் ...
இன்றைய நாள் உலகம் போற்றும் ஒரு மாபெரும் விஞ்ஞானிக்கு தலைவணங்கும் நாள்..
மேரி கியூரி அம்மையாருக்கு இன்றைய தினம் பிறந்த நாள்..
மருத்துவத்துறையில் பலவருட ஆராய்ச்சியை மேற்கொண்டு ரேடியத்தை எமக்குத் தந்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரி அம்மையாருக்கு இன்றைய தினம் பிறந்த நாள்..ஆனால் அவரின் பிறந்தநாள் மாக்கெட் இழந்த நடிகையின் பிறந்த நாள் போல நம்மவர்களால் பெரிதாக கணக்கெடுக்கப்படவில்லை...கூகிள் மாத்திரம் அம்மணியின் படத்தை போட்டு கெளரவம் அழித்திருந்தது...அந்த தலை சிறந்த விஞ்ஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்..
சினிமாவில் இன்று சில சிலருக்குப் பிறந்தநாள்...
சினிமா பிரபலங்களின் பிறந்தநாள்கள் பெரிதாக பேசப்பட்டாலும் இன்று ஒரு முக்கிய தீயின் பிறந்தநாளும் சேர்ந்துகொள்ள நவம்பர் முக்கியமாகிவிட்டது...
- நடிகர் - உலகநாயகன் கமலஹாசன்
கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
கமல் இந்தியாவின்...ஏன் உலகின் ஒரு தலைசிறந்த நடிகனாக மதிக்கப்பட்டாலும், நல்லதொரு கலைஞன் என புகழப்பட்டாலும்,கலைஞானியாக மகுடம் சூட்டப்பட்டாலும் எனக்கு கமலைப்பிடிக்காது..
சின்னவயசிலும் சரி,பள்ளிக்கூடம் போகும்போதும்சரி கமல் படங்கள் என்றால் அம்மாவே டிவிய ஆப் பண்ணிடுவாங்க..கமல் படங்கள் என்றால் பெரும்பாலும் நாயகி ஸ்ரீதேவிதான்..ரெண்டுபேரும் போடும் குத்தாட்டத்தை எங்கம்மாவே பார்க்க முடியாமல் முகம் சுழித்தபடி டிவிய ஆப் பண்ணினா நாங்க எப்பிடி பார்க்கமுடியும்?அதனாலோ என்னவோ எனக்கு கமல் பிடிக்காது...
ஆனால் எனக்கான ஆளுமை என்னுள் வள ரத்தொடங்கியபிறகு...அவ்வாறு நான் நினைத்துக்கொண்ட பிறகு கமல் ரசிகையாக மாறாவிட்டாலும்,கமலை வெறுக்கவில்லை..ஒரு சில கமல் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன்..
கமலின் "அன்பே சிவம்" எனக்கு மிகவும் பிடித்தது..அந்த யதார்த்தம் என்னை கவர்ந்தது.. "புன்னகை மன்னன் " எனக்குப் பிடித்த மற்றுமொரு கமலின் காதல் காவியம்..அதன் பின்னர் பல படங்கள் பார்த்திருந்தாலும் இவைதவிர வேறு எதுவும் என்னைக்கவரவில்லை..
சினிமாவிற்கப்பால் கமலின் வாழ்கை பல பெண்களைப்போல என்னையும் வெறுக்கவைக்கிறது..ஆனால் அந்த வெளிப்படையான குணத்தை பாராட்டத்தான் வேண்டும்..சினிமா புனிதமான தொழில் என்று எல்லாக் கலைஞர்களும் கொண்டாடுகிறார்கள்..செய்யும் தொழிலே தெய்வம்தான்..ஆனால் ஒரு நடிகையின் வாழ்வு எவ்வளவு ஆபத்தானது என்பதை இதே சினிமா எங்ககளுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது..காட்டவும் முனைகிறது..ஆனாலும் தன் மகளையும் அதே இடத்தில் உட்காரச்செய்து தன் வாழ்க்கை முறை போலவே பெண்ணையும் கண்மூடித்தனமாக வாழவைக்கும் மாபெரும் கலைஞன் கமல்தான்...
- நடிகை - அனுஷ்கா
அனுஷ்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
கர்நாடகாவில் பிறந்து தெலுங்கிலும்,தமிழிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் உயர்ந்த நடிகை அனுஷ்கா..
அனுஷ்காவின் தெலுங்குப்படங்களும் பார்த்திருக்கிறேன்..தமிழ்ப் படங்களும் பார்த்திருக்கிறேன்..அனுஷ்காவின் நடிப்பைவிட எனக்கு அவரிடம் பிடித்தது அவரின் அழகு..யோகா டீச்சர் என்றாலும் மற்றை யோகா செய்பவர்களிடம் இல்லாத ஏதோவொன்று அனுஷ்காவிற்கு பிளஸ்..கூடவே மற்றைய நடிகைகளிடம் இல்லாத ஒரு கம்பீரம் அனுஷ்காவிற்கு ஹைலைட்..
அருந்ததி, கலிஜா எனக்கு பிடித்த அனுஷ்காவின் படங்கள்..
சினிமாவில் தன் உயரத்தால் கஷ்டப்பட்டாலும் சூர்யா..சிம்புவென அனுஷ்காவிற்காக கஷ்டப்பட நம்ம ஆளுங்க ரெடி...
- பாடகர் - கார்த்திக்
கார்திக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
எனக்கொரு கேர்ல் பிரெண்ட் வேணும் என்றபோதே நிறைய பெண்களுக்கு பாய் பிரெண்ட் ஆனவர்..
ரஹ்மானின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் கார்த்திக் ஹரிஷ் ஜெயராஜ், இளையராஜா, மணிஷர்மா, பரத்வாஜ், வித்யாசாகர் ,சிற்பி,யுவன் ஷங்கர் ராஜா என எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஹிட் கொடுத்திருக்கிறார்.பெண்களை கொள்ளை கொண்டிருக்கும் இவரின் குரல் மயக்கத்தக்க பாடல்களைத் தந்திருக்கிறது..இப்போது அரவானில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்..
கார்த்திக்கின் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்..இன்றைய நாளின் பேவரிட் "முன் அந்திச் சாரல் நீ..."
- இயக்குனர் - வெங்கட் பிரபு
வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்து பாடகனா, நடிகனா தன்னை நிரூபிக்க முடியாதபோது ஒரு இயக்குனரா கலக்கும் நபர்..தனக்கென ஒரு கூட்டணியை வைத்துக்கொண்டு விறுவிறு கதை சொல்லும் கலக்கல் இயக்குனர்..வெங்கட் பிரபுவின் சென்னை 600028 , சரோஜா, கோவா, மங்காத்தா எல்லாமே நல்லா இருந்தாலும் எனக்குப் பிடித்தது சென்னை 600028
- நடிகை - நந்திதா தாஸ்
நந்திதா தாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நடிகையா சாதிச்சுக்கொண்டிருக்கும் போதே இயக்குனரா அவதாரம் எடுத்து அங்கும் தன் முத்திரைய பதித்தவர்...எத்தனை அழகு நடிகைகள் வந்தாலும் இந்த 42வயது கண்ணழகிக்கு முன் எதுவுமே தூசி..நந்திதாவின் கவர்ச்சி எனக்கு அவ்வளவு பிடிக்கும்...நிறைய புரட்சிகளை தன் நடிப்பில் காட்டி சர்ச்சைகளை சந்தித்தாலும் இன்றும் புதுமையை விரும்பும் அந்த தைரியத்திற்கு ஒரு சபாஷ் !!!
அழகி ,கன்னத்தில் முத்தமிட்டால் இரண்டுமே எனக்குப்பிடித்தவை..
அழகி ,கன்னத்தில் முத்தமிட்டால் இரண்டுமே எனக்குப்பிடித்தவை..
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
சினிமாவின் பிரபலங்கள் பிறந்தநாளை சாதித்துக்கொண்டாட நான் வெட்டியாக பதிவிடுகிறேன்....






1 comments:
sir c.v.raman also celebrates birthday today...
Post a Comment