நாட்டில,உலகத்தில என்னென்னல்லாமோ நடந்திட்டு இருக்கு..அப்ப நீங்க நடக்கலையா? இல்ல..நாங்கதான் நடக்கலையா???இப்பிடில்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது...புரிஞ்சுதோ???ஒவ்வொரு நாளும் விலை கூடுது..குறையுதுன்னு சொல்ல ஆசை...ஆசை ஆசையாவே போகுது.... ஏதோ சட்டம் புதுசா வருது...பழசா இருக்கிறது போகுது....எத்தனையோ தினம் கொண்டாடுறோம்?என்னென்னவோ பார் க்கிறோம்..பேசுறோம்....மூணுவேளை தவறாம சாப்பிடறோம்...வாழ்க்கை போகுது...போய்க்கிட்டே இருக்கு.......
நாமளும் போய்க்கிட்டே இருக்கிறோம்............
####################################################################
வேலாயுதம் -ஏழாம் அறிவு வெற்றி - தோல்வி பிரச்சினைகளில் ஆரம்பிச்சு,சன் டிவி தரப்படுத்தல்,ஜெயா டிவி தரப்படுத்தல் அப்பிடி இப்பிடின்னேல்லாம் தொடர்ந்து ,போதி தர்மர் தமிழரா என்று போய்க்கிட்டே இருக்கு....
நம்ம சூப்பர் ஸ்டார்,அல்டிமேட் ஸ்டார் பப்ளிசிட்டி எல்லாம் அடங்கி இப்போ பவர் ஸ்டார் பேச்சா போய்க்கிட்டு இருக்கு...
அம்மா கலைஞர் கட்டினதெல்லாம் மாத்தி முடிச்சிட்டாங்க...இப்போ கலைஞர் கூட்டாததெல்லாம் கூட்டிற்று இருக்காங்க...பஸ் கட்டணம்,பால் விலைன்னு எல்லாம் உயரத்துக்கு போய்கிட்டு இருக்கு...
ஐஸுக்கு கர்ப்பம் எண்டு கண்டுபிடிச்சது..பிரசவமாகி,அந்த பொண்ணு வாழ்க்கையையும் நாசமாக்க ரெடியாகிட்டாங்க....ரஜனிக்கு ஜோடியாக்கி டூயட் பாட கூட்டிக்கிட்டு போய்கிட்டே இருக்காங்க...
சாரு நிவேதிதாக்கு சாட்டிங் குறஞ்சுதோ இல்லையோ,கேர்ள் பிரெண்ட் அம்பிட்டாங்களோ இல்லையோ,எக்செல் யாவராம் பிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கு...
நம்ம விஜய் டிவி ஹீரோ சிவகார்த்திகேயன் விஜய் டிவில ஹீரோவா இருந்தது மாறி,இப்போ ஒவியாக்கு ஹீரோவா மெரினாவில நடந்து போய்க்கிட்டே இருக்காரு...
நீயா?நானா? கோபிநாத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தெரியாம மண்டை குழம்பிப்போய் பிகருங்கள பார்த்துக்கிட்டே பாதாளத்துக்கு போய்க்கிட்டு இருக்காரு...
விண்ணைத்தாண்டி வருவாயாக்கு அப்புறம் நல்லவானா இருக்கேன்னு காட்டிக்கிட்ட சிம்பு கெட்டவனா ஒஸ்தியா போய்க்கிட்டு இருக்காரு...
நயனோட கல்யாணம் அன்னிக்கு,இன்னிக்குனு நீண்டுகிட்டே போயிட்டு இருக்கு...
பேஸ் புக்கில தல -தளபதிய மோதவிட்டவனுங்க குழந்தை பசங்களோட விளையாடிக்கிட்டு தம்முக்கும்,சாராயத்துக்கும் ஓசில விளம்பரம் கொடுத்து சின்னப்பசங்க வாழ்க்கைய அழிக்கிற வேலைல மும்மரமா போய்க்கிட்டு இருக்கானுக..
கிங்பிஷேர் ஊத்திக்கொடுத்திட்டிருந்த இருந்த காலம் போய் ஊத்திக்கிட்டு,ஊதிக்கிட்டு போயிட்டு இருக்கு...
ஜோன் ஆபிரகாம் வருசக்கணக்கா அணைச்சுக்கிட்டு திரிந்த பிபாச பாசுவ அறுத்திட்டு...புதுசா பார்த்துக்கிட்டு பார்டிகளுக்கு போய்கிட்டு இருக்காரு..
சங்ககார அடிச்சு,அடிச்சு..பேரோடும்,புகழோடும்,முதல் ராங்கோடும் போய்க்கிட்டே இருக்காரு..
சச்சின் நூறு அடிப்பாரா,நூறு அடிப்பாரா என்று அவருக்கு டென்ஷன ஏத்திட்டாங்க...பாவம் மனுஷன்..தொண்ணூத்தொம்பது அடிச்சத மறந்தவனுங்கள பார்த்து ஓடுவாரா?அந்தப்பக்கம் டிராவிட்ட பார்த்து ஓடுவாரா....எப்பிடியோ போய்க்கிட்டே இருக்காரு...
மகிந்த தன் மக்கள் ஆட்சியில் அறுபத்தாறை கடந்தும் அயராது ஓடிக்கிட்டே வீரநடை போட்டு போய்க்கிடு இருக்காரு...
ராகுல் காந்தி நாப்பத்துஒன்னை கடந்தும் வெளிநாட்டுப்பக்கம் காதலியோட போகாம உபியில் உச்சிவெயில் பிரசாரமா நடையில போய்க்கிட்டு இருக்காரு...
ஜெனிலியாக்கு,ரிதேஷ் தேஸ்முக்கோட மாச்சில கல்யாணமாம்..பொண்ணு அதே சிரிப்போட ஜோடியா விழாக்களுக்கு போய்க்கிட்டு இருக்கு...
###################################################################
எல்லாரும் எப்பிடி எப்பிடியோ போய்க்கிட்டு இருக்காங்க.....
நான் அதே காலேஜில்,அதே படிப்போடும்,அதே நோட்சொடும்.....போய்க்கிட்டே இருக்கேன்.....
#####################################################################
போய்க்கிட்டே இருப்போம்......என்னைக்கோ போறதுதானே வாழ்க்கை...


1 comments:
என்னைக்கோ போறது வாழ்க்கை அல்ல, போன பின்பும் பலர் நினைவுகளில் ஓடிக்கிட்டே இருப்பது தான் வாழ்க்கை
Post a Comment