"ரத்தத்தின் ரத்தமே...." - கலைஞர் V "விளையாடு மங்காத்தா " - அம்மா
முன்பெல்லாம் நாட்டில என்ன நடக்குதுன்னே நாட்டில பல பேருக்கு தெரியாது..வீட்டில என்ன நடக்குதுன்னு தெரியாதபோது நாட்டில நடக்கிறதப்பற்றி எப்பிடி தெரிய முடியும்?ஆனா இப்பெல்லாம் அப்பிடி இல்ல...இன்டர்நெட் யுகத்தில அப்பப்ப நடக்கிற எல்லாமே நம்ம கண்ணுக்கும், காதுக்கும் வந்திடும்...நம்ம கம்பியூட்டர் நெட் ஸ்பீடோ இல்லையோ உலக நெட் தொடர்பு ஹீரோயின்ஸ் இடுப்புக்கும் -ஹீரோக்களுக்கும் இடையிலான தொடர்பு...
நாடு எங்க சார் போகுதுன்னு நான் அவனையும் அவன் என்னையும் கேட்டிகொண்டே போகிறோம்.
முன்பெல்லாம் நாட்டில என்ன நடக்குதுன்னே நாட்டில பல பேருக்கு தெரியாது..வீட்டில என்ன நடக்குதுன்னு தெரியாதபோது நாட்டில நடக்கிறதப்பற்றி எப்பிடி தெரிய முடியும்?ஆனா இப்பெல்லாம் அப்பிடி இல்ல...இன்டர்நெட் யுகத்தில அப்பப்ப நடக்கிற எல்லாமே நம்ம கண்ணுக்கும், காதுக்கும் வந்திடும்...நம்ம கம்பியூட்டர் நெட் ஸ்பீடோ இல்லையோ உலக நெட் தொடர்பு ஹீரோயின்ஸ் இடுப்புக்கும் -ஹீரோக்களுக்கும் இடையிலான தொடர்பு...
காலையில எழும்புனா பல் துலக்குதல் ,முகம் கழுவுதல், காப்பி..இத்யாதி..இத்யாதி என்று இருந்த உலகத்திலையா நாம வாழ்றோம் இப்போ?இல்லையே...நான் எழும்புன உடனே மறக்காம செய்ற வேலை என்ன தெரியுமா?.......லப் டப்ப ஓன் பண்ணி ட்விட்டர்,பேஸ் புக்,ப்ளாக் பார்க்கிறதுதான்..என்னைப்போல எல்லாரும் இப்பிடி ஆயிடுச்சு வாழ்க்கை..என்னைமாதிரி எல்லாரும் இப்பிடி வெட்டி வேலை பார்க்காட்டாலும் கொஞ்சமாவது இந்த பக்கத்தை எட்டிப்பார்க்காமல் இருக்க மாட்டிங்க..இதில என்ன பயன்னா நாட்டில அன்னைக்கு என்ன நடக்குது..என்ன நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சிடும்..
எந்த மந்திரி கட்சியைவிட்டு விலகுறாரு? எந்த மந்திரியோட வழக்கு விசாரணைக்கு வருது? எந்த மந்திரியோட அஜால் குஜால் வீட்டில ரெய்ட் நடக்கப்போகுது? விஜய் அடுத்து யாரோட படம் பண்ணப்போறாரு? ராஜா எந்த தெலுங்குப்படத்தை திருட்டு டிவிடில பார்க்குறாரு? ஹன்சிகாவ அடுத்து யாரு உப்புமூட்டை தூக்கப்போறாங்க? சிம்பு எந்த ஹோட்டல் பக்கம் போனாராம்? திரிஷா எந்த பார்ட்டில நிறைய குடிச்சாங்கா?சாரி..தண்ணி குடிச்சாங்க என்று எழுதாமபோயிட்டேன் ..?எந்த சீரியல் நடிகை எந்த நடிகையோட கணவரோட ஓடிப்போயிட்டா?.....நித்யானந்த சுவாமிகள் - ரஞ்சிதா உறவு முறிந்ததா?தொடருதா???
சாரு அடுத்து என்ன சாட்டிங் செய்வாரு?போன்ற உலகத்தரம் வாய்ந்த செய்திகள் எங்களுக்கு இந்த நெட் வசதியாலதான் கிடைக்குது..
........................................................................................................................................................
நாம வேற என்னத்ததான் தெரிஞ்சுக்கிறோம்?நாம் தமிழர்கள் என்பதையே ஏழாம் அறிவு வந்தாப்பிறகுதான் சிலபேருக்கு தெரியுது..தமிழன் தொடர்ச்சியாக எவனோ ஒரு அந்நியன் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறான்..இல்லாட்டி இன்னொரு தமிழனால் நாசமாகிறான்...
..............................................................................................................................................................
இலங்கை நாடு என்ன ஒரு அழகிய தேசம்...அதுவும் இந்த மலைப்பிரதேசங்கள் இருக்கே இயற்கைத்தாய் வெட்கப்பட்டு சிரிக்கும், சிணுங்கும் சுகமான தேசம்..
அங்கு சலசலக்கும் அருவிகளைவிட, ரத்த ஆறின் வாடை பட்டு முகம் சுழித்ததும், சிதறிக்கிடந்த சிற்றுடல்களைப்பார்த்து ஒதுங்கி நின்றதுமே இலங்கைத்தமிழனின் நேரத்தில் பெரும்பங்கை எடுத்துக்கொண்டது..போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரிடம் இழக்காத வீரம், மானம், தன்னம்பிக்கை, சுய கெளரவம் எல்லாம் ஒரு பெரும்பான்மை மொழி பேசும் .......இழந்தது இழந்ததாக இருக்கட்டும்..ஆனால் வாழும் வாழ்வு?
............................................................................................................
இந்திய நாடு கலைகள்,மதங்கள், கலாச்சாராங்கள் நிறைந்த புண்ணிய தேசம்..கோயில்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் நிறைந்த அந்த நாட்டில தமிழன் நிம்மதியாவா வாழ்றான்?தமிழ்நாட்டிலே எத்தனை பிரச்சினை?
அம்மா வந்தா கலைஞர் // கலைஞர் வந்தா அம்மா
இவங்க ரெண்டு பேர் ஆட்டம்தான் தமிழ்நாட்டின் மூச்சு...
கலைஞர் வந்திட்டாருன்னா.....
சொந்த பந்தங்கள் எல்லாம் கோடி,கோடியா சம்பாதிச்சிடுவாங்க..வீட்டுக்கு வீடு புது டிவி வாங்கிகிறமாதிரி குடும்பத்துக்கு குடும்பம் புது டிவி சானெல் ஓப்பேன் பண்ணிடுவாங்க..ஆளாளுக்கு கம்பெனீஸ்..ஆம்பிளைங்க எல்லாம் ஹீரோஸ்,தயாரிப்பாளர்
அம்மணிங்க எல்லாம் இயக்குனர்கள் ,சங்கீத மேதைகள்,எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்...
நாடு வளருதோ இல்லையோ அவங்க குடும்பம் வளர்ந்திடும்...ஆமாங்க..ஆளாளுக்கு எத்தனை புருஷன்,எத்தனை பொஞ்சாதி...எத்தனை புள்ளிக...எல்லாருக்கும் சொத்து சேக்கவேணாமா???கல்லில கட்டி தண்ணில போட்டாலும் கப்பலா வந்திடுவாகலாம் இல்ல..அப்ப பாருங்களேன்..
ஆனாலும் கலைஞர் கலைஞர்தான்..அம்புட்டு வேலைக்குள்ளையும் விஜய்க்கு லோக் போடுறதென்ன? அம்மாக்கு கேஸ் போடுறதென்ன? ரஜனிக்கு மீல்ஸ் போடுறதென்ன?அவரு கலக்கிடுவாரு...என்ன பிரச்சினை என்றால்...ஒரு லெமன் ஜூசுக்காக ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பாரு பாருங்க.....நெஞ்ச தொட்டிருங்க..
"ரத்தத்தின் ரத்தமே....என் இனிய உடன் பிறப்பே...." விஜய்கூட கிளிசரின் போட்டுத்தான் கண் கலங்கிருப்பார்...இதில கலைஞர் செய்திகளுக்காக பிரேக்கிங் நியூஸ் வேற..ஐயாவ ஒவ்வெரு கோணத்திலையும் படம் பிடிச்சுகாட்டுவாக..ஹன்சிகா இடுப்பகாட்டினாலும் பார்க்கலாம்..அந்தாள் முக்குறதையும்..முனகுறதையும்...
..........................................................................................................................................
அம்மா வந்திட்டாங்க என்றால் ......
என்ன பண்ணுவாங்கள் ஏது பண்ணுவாங்கள் தெரியாது...முதல் வேலை யாரெல்லாம் உள்ள புடிச்சு போடா நினைக்கிறாங்களோ அவங்கள எல்லாம் லாக் பண்ணிடுவாங்க...அப்புறம் ரெய்டு...மோசடி வழக்கு...தடை...
இதெல்லாம் செய்து முடிச்சாதான் அம்மாக்கு மூச்சே வரும்போல இருக்கு..
அப்புறம் ஸ்டார்ட்..கேமரா...அக்ஷன்....பெருச்சாளி மாஸ்க்க போட்டிருவாங்க...
கந்தசாமி களவாணிப் பசங்கட கள்ள நோட்டுகள தேடுற மாதிரி ஐயா என்னெல்லாம் கட்டியிருக்காருன்னு பார்த்து ஸ்கானிங் வேலை நடக்கும்..அப்புறம் எல்லாம் டிஷூம்தான்...
கனிமொழியின் சோகம்கலந்த அந்தப்போஸ் தான் இப்ப எல்லா டிவி ஹைலைட்சும்...பார்த்தும்மா..யாரும் படம் எடுத்திரப்போறாங்க...
லைப்ரரிய ஆஸ்பத்திரியாக்குவாங்க...ஆஸ்பத்திரிய கசாப்புக்கடையாக்குவாங்க....
வாஸ்து சாஸ்திரம் ரொம்பப் படிச்சிருக்காங்க போல...
கலைஞர் கட்டிய தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள தவிர எல்லாம் மாத்திங்...வேற யாரும் கலைஞரின் அம்மாக்கள் இருந்தால் உடனே உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
லைப்ரரிய ஆஸ்பத்திரியாக்குவாங்க...ஆஸ்பத்திரிய கசாப்புக்கடையாக்குவாங்க....
வாஸ்து சாஸ்திரம் ரொம்பப் படிச்சிருக்காங்க போல...
கலைஞர் கட்டிய தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள தவிர எல்லாம் மாத்திங்...வேற யாரும் கலைஞரின் அம்மாக்கள் இருந்தால் உடனே உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
அப்புறம் கலைஞரின் எதிரிகளா பொக்கே கொடுத்து வரவேற்று ஆதரவளிப்பது...இப்ப நம்ம தளபதிய வரவேற்றிருக்காங்க.
கனிமொழி வழக்கில அம்மா போட்டிருக்காங்களே ஒரு லொக்கு...ஜோன் சீனா லொக்கவிட பெரிசு..
####################################################
முன்னேல்லாம்தான் முடியாட்சி அக்கிரமங்கள் நடந்தது..தட்டிக்கேட்க யாருமில்லாத நிலை..ஆனால் இப்ப அப்பிடியில்லையே..நாட்டுக்கு நாடு புரட்சி வெடிக்குது...எத்தனை நாட்டில இப்போ சமாதானம் மலர்ந்திட்டுது..ஆனால் நம்ம நாடுகளில்...
யாராவது ஆரம்பிக்கட்டும் என்று வாழ்வதுதான் நம்ம பழக்கம்...ஒருத்தன் கள்ள டிவிடி வித்தா நாமும் விப்போம்...சாராயக்கட போட்டா நாமளும் போடணும்...அடுத்தவனுக்கு செட்டப் இருந்தா நாமளும் உடனே களத்தில இறங்கிடுவோம்...மற்றவனுக்கு ஏட்டிக்கி போட்டியா செய்தாதான் நம்மளுக்கு
தூக்கமே..
சமூகம் சும்மாதானே இருக்கு..ஊரே பயப்படுது...அவங்க செய்யட்டும்..இதெல்லாம் நல்ல விஷயங்களுக்கு மட்டும்...
அவங்க மட்டும் சமூகம் இல்ல...நீ மட்டுமும் சமூகம் இல்ல....நான் மட்டும் சமூகம் இல்ல...நீயும்,நானும் சேர்ந்தால்தான் சமூகம்..
ஒரு டியூனீசிய இளைஞன் எத்தனையோ பேரின் DNAஏக்களைத் தூண்டியிருக்கிறான்..புரட்சி வெடித்தது....
நமக்கு???
ஆயிரமாயிரம் போதி தர்மர்கள் வந்தாலும் DNA தூண்டப்படாது....நமக்குள் இருக்கும் தமிழ் உணர்வு வெளிவரும்வரை...
#########################################################
நம்ம DNA இதுக்கு வேணா தூண்டப்படலாம்....
- ஸ்ரேயாவின் ஹிப்புக்கு...
- ஷகிலாவின் பிட்டுப்படங்களுக்கு....
- ஹன்சிகாவின் பப்பி வயித்துக்கு.....
- டாஸ்மாக்கின் ஐடம்களுக்கு....
- வித்யா பாலனின் டெர்ட்டி பிக்சர் விளம்பரத்துக்கு...
- அஞ்சலினா ஜோலியின்...
- கிம் கார்டேஷியனின்.........
- அவனின்...இவனின்......அவளின்..இவளின்....
சொல்லிக்கொண்டே போகலாம்..........
##########################################################
இது ஒரு விசித்திரமான DNA கள் நிறைந்த MMM>>>KKK>>> நிறைந்த உலகம்....







1 comments:
அருமையான அலசல், இருந்தாலும் லெமன் ஜோசுக்காக கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார்னு போட்டீங்க பாரு ஒரு போடு, டாப்பு
Post a Comment