Pages

Thursday, November 3, 2011

இன்னும் ஏன் தமிழா?

சமூக வலைத்தளங்களில் ஒருத்தொருக்கொருத்தர் அடிபடுவதும்,காயப்படுவதும்,கிழிஞ்சு கந்தலாவதும்,நொந்து நூடுல்சாவதும் தினமும் அரங்கேறும் வரலாற்றுப்படலம்.அதில என்னென்னத்துக்கெலாமோ குடுமிப்பிடி சண்டை ,குழாயடி சண்டையவிட மோசமா,மூர்க்கமா நடந்திற்று இருக்கும் இந்தப் பொன்னான கலிகாலத்தில (கலிகாலம்தானா?)சினிமாக்கோஷ்டிகளின் அஜால் குஜால் சண்டைகளும்,வெறித்தனமுமான சண்டைகளும் சுவாரசியமானவை.

சினிமா வெறியர்கள் என்றால் அது தல - தளபதி ஆட்கள்தாங்க.. அதிலும் தளபதிய போட்டோசொப்பில் நம்மாளுங்க படுத்துற பாடப்பார்த்தால் அவங்க அம்மணிக்கு ரத்தக்கண்ணீர்தான் வரும்...அவ்வளவு உருக்கம்....தல ஆளுங்களும் சும்மா ஆளுங்க இல்ல..அவங்க நடையிலையே மொட்ட போட்டிருவாங்க..அம்பிட்டு சாமர்த்தியம்....இப்ப இதில புதுசா ஒரு கோஷ்டி சைலெண்டா உருவாகிற்று போல இருக்கு...அதுதாங்க போதி தர்மன் ஆளுங்க...போதி தர்மரு ஆளுங்க எப்பிடி இருப்பாங்க...விசய்யோட DNA ஐ ராமராசன் சொந்தக்காரங்ககிட்ட இருந்து எடுத்தாலும் எடுப்பானுக ..


ஏழாம் அறிவு நிறையப்பேருக்கு ஆறறிவ எடுத்திற்று..நிறையப்பேருக்கு ஒண்டு ரெண்டில விட்டிருக்கு....சிலருக்கு எட்டு ஒன்பதாக்கிட்டு இருக்கு...எப்பிடியோ ஏழாம் அறிவு கொஞ்சம் சிக்கலான கேசுதான்...

நிறைய பில்டப்பில (ஜயன்ட் எடுத்தா பிக் ஷோ மாதிரித்தானே வரும்) தமிழ் மகா ஜனங்களுக்கு செல்களில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏத்தி எடுத்து வெளியிட்டாங்க....தமிழன் படமாமே! தமிழன் பெருமைப்படும் படமாமே!இப்பிடி இனி தமிழன் படம் வராதாமே! என்று தமிழன நல்லா மே மே மே!!!!என்று மேய்த்தார்கள் ஏழாம் அறிவுக்கூட்டணியினர்.

ஏழாம் அறிவுப்படம் எல்லா சினிமாப்படங்களும் போல அரைடஜன் ஓட்டைகள் நிறைந்த கமெர்சியல் படம் என்பது மட்டுமே என் ஆறறிவுக்கு எட்டியது..அதில் தமிழன் பெருமைப்படும் அளவு எதுவும் இருப்பதாக என் அறிவுக்கு தெரியல..(ஒன்லி ஆறறிவுக்கு)என்னங்க இது?போதி தர்மர் என்றொரு ஞானியின் படத்தப்போய் இப்பிடி சொல்றிங்களே?உங்களுக்கு ஆறறிவும் இல்ல என்று நினைத்தால் நினைக்கும் அரையறிவு ஆசாமிகள் பற்றிக் கவலைப்படும் குழந்தை நானில்லை...

ஏழாம் அறிவிலா போதி தர்மர் வந்தாரா?வந்தாரு...
ஏழாம் அறிவு வர முன்னாடி எத்தனை ஆறாம் அறிவுகளுக்கு அந்த போதி தர்மர் பற்றித் தெரியும்?(முருகதாஸே கூகிளில்தான் கண்டெடுத்ததாகப்பே ச்சு  )
சரி...

இப்ப அந்த போதி தர்மர் பற்றித் தெரிந்ததால் என்ன வந்தது?
உலகளவில் தமிழர்களின் நிலை ரொம்ப உயர்ந்திட்டோ?
தமிழர்களுக்கு சமர்ப்பணமாம் ஏழாம் அறிவு...இருபது நிமிஷம் போதி தர்மர்ப்பற்றி சொன்னதால் மட்டும் தமிழன் உரிமைகளும்,பெருமைகளும் அடைகிறான் என்றால் அவனின் தமிழுணர்வு கொஞ்சம்...கொஞ்சம்தான்...

தமிழனுக்கு சமர்ப்பிக்கும் அளவு முருகதாஸ் என்ன செய்தார்?
டமில் பேசும் நாயகி(உருவத்தோற்றத்தில்கூட தமிழச்சியாகத் தெரியவில்லை)
பாடல்கள் வெளிநாட்டில் நாயகியின் கண்ணாடி  சேலையில்... சேலைகூட இல்ல போலிருக்கே?
படத்தில் "தமிழர்களுக்கு சமர்ப்பணம்" தவிர எழுத்துகள் ஆங்கிலத்திலே....இதில எது தமிழ்த்தொண்டு????

ஆரம்பத்தில் பாரதியிலிருந்து தமிழ்த்தாத்தாவரை எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு என்னெல்லாம் செய்து தமிழுக்கு உழைக்க?நம்ம முருகதாஸ் ஹொங்கொங் வில்லனையும்,மும்பையிலும்..ஹைதராபாத்திலும் ஆச்சாரமா வாழும் ஸ்ருதியையும் வச்சுக்கொண்டு தமிழ்த்தொண்டு ஆத்தினாராம்.


போதி தர்மர் விஷயத்துக்கு வருவம்....
அவர் காஞ்சி புரத்தை சேர்ந்தவர்...பல்லவ இளவரசன்..தமிழன் எல்லாம் ஓகே...ஆனா அவரே அந்த மருத்துவக்கலையையும் ,குங்க்பூவையும் தமிழனுக்கு சொல்லிக்கொடுத்தாரா?இல்ல இந்தியாவில்தான் வளர்த்தாரா?ரொம்பக்கஷ்டப்பட்டு சீனாக்கு போய் சொல்லிக்கொடுக்கிறார்.கட்டளையின் பேரில் சென்றாலும் ஒருத்தருக்குக்கூடவா சொல்லியிருக்கக்கூடாது?  அவரே தமிழன நினைக்கல...



அடுத்து முருகதாஸ்...
இவ்வளவு நாளும் அரசியலுக்காக தமிழ் பேசினாங்க...அதுவும் வெளியிடங்களில் மட்டுமே...அவங்க பசங்களே இங்கிலீஷ் மீடியம் படிக்கிறவங்களாவும்,கோக்கும்,சப்மரினும் சாப்பிடறவங்களும்தான்...

எப்பிடியோ அரசியல் லாபத்திற்கு உண்ணாவிரதம்,உடன்படிக்கை என்று தமிழனை மேய்த்தார்கள்...
கடைசியில் தமிழன் தல(லை)யில் மிளகாயும் அரைத்தார்கள்...
அது முடிஞ்சுபோன கதை...இப்ப என்னடா என்றால் புதுசா தமிழ் உணர்வ ஊட்டி வளர்க்கணுமாம்... படம் வெற்றியடைவதற்காக மட்டும் இந்த உணர்ச்சிப்பீற்றல்கள்...முடியல...சந்தர்ப்பவாதிகளுக்கு எட்டப்பனுகள் குறைந்தவர்கள் அல்லர்...படத்தை வெளியிட்ட பிறகு ஊட்டி வளர்த்த பெருமை வேறு..இந்த உணர்வ அந்த சுருதிக்கு கொஞ்சம் ஓட்டினா பார்க்கத் தமிழச்சியா கொஞ்சம் தோன்றலாம்...

பாடல் - இன்னும் என்ன தோழா????
அதத்தான் நானும் கேக்கிறேன்?இன்னும் தமிழனிட்ட இருந்து பிடுங்க என்ன இருக்கு?
வசனம் -வீரத்துக்கும் துரோகத்துக்கும் ......என்ன சொல்ல வாறாங்க இப்போ?அதுதான் முடிஞ்சிருச்சே ...
எண்ணற்ற பலிகள்...வீழ்ச்சிகள்...அன்று மௌனித்த கூட்டம் இன்று ஈழத்தைக்காட்டி லாபத்தை அள்ளுகிறது...அதற்கு கைதட்ட ஒரு கூட்டம்....

தமிழன் தமிழனாக இல்லாத போது????

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!


வாய்ப்பேச்சில் தமிழனாக போலித்தனம் செய்வதில் தமிழன் உயிர்பெற மாட்டான்...
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தமிழனை கண்டெடுக்க எங்கு,எவரின் DNAஐ தேடுவது???

1 comments:

நிவாஸ் said...

என்ன நண்பா இப்டி சொல்றீங்க,

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், போதி தர்மர் போனது கிபி 500 அதுக்கப்புறம் தமிழ்நாட்ல களரி இல்லன்னு யாருங்க சொன்னா?

இன்னைக்கும் கேரளத்துல களரியும், வர்மமும் கொஞ்சம் கொஞ்சம் உயிரோட இருக்குங்க.

இது முழுக்க முழுக்க வரலற்றுப் படம் இல்லைங்க, எப்டி இருக்க வேண்டிய நாம இப்ப எப்படி இருக்கோம்ன்னு காட்ட இப்ப டமில் பேசுற பொண்ணுகதான அதிகம். அத சொன்னது தப்பா?

தமிழ் சேவைன்னு சொல்லி எத்தனையோ நாடகம் நடக்குது, இலவசமா கூட காட்றாங்க நாம் எத்தனை பேறு மதிக்கிறோம்? செருப்பா இருந்தாகூட அமெரிக்க கோடி போட்டிருந்தா பெருமையா நெனைக்கிரவங்கதான் இப்போ அதிகமா இருக்கிறோம் இல்லையா? அது ஏன்?

நண்பா இன்றைக்கு உலகின் சிறந்த தற்காப்பு கலை குங்பு, மத்ததெல்லாம் அதிலிருந்து வந்ததுதான், அப்படி பட்ட ஒரு கலைய கண்டுபிச்சு அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தது ஒரு தமிழன்னு சொன்ன அது உங்களுக்கு பெருமையா இல்லையா?

அமெரிக்க கொடி போட்ட செருப்புக்கு இருக்குற மரியாத இந்த விசியத்துக்கு இல்லையா?

உண்மையான விசயம் தான் பாரதியையும், சுவாமிநாத ஐயரையும் ஈடு இணை சொல்ல முடியாது, அதற்காக இதில் தமிழ் உணர்வு இல்லை, ஒரு மறைந்த தமிழனின் பெருமை இல்லை என்கிறீர்களா? இத்தனை தமிழரில் யாரும் இதை செய்ய வில்லையே, முருகதாசைத் தவிர? பாரதியையும், சுவாமிநாத ஐயரையும் தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆனால் இப்பொழுது போதி தர்மர் யார் என்று கேட்டால், தமிழ் நாட்டில் மூளை முடுக்கில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியும் இதனால் பெருமை இல்லையா?

பாரதியை போல கவிதை எழுதினால்தான் பெருமையா? தமிழன் ஒருவன் நாளிக்கு ஒரு அறிவியல் கடிபிடிப்பு கண்டுபிடத்தால் அது தமிழனுக்கு பெருமை இல்லையா? அதுபோல்தான் இதுவும்?

கவிதை எழுதினால்தான் தமிழுக்கு பெருமை என்றால், எல்லாரும் கவிங்காரக இருக்க வேண்டிதான். அது ஒருவகை பெருமை இது இன்னொருவகை பெருமை,

சிவாஜி மூலமாக, எப்படி ராஜராஜ சோழனையும், பாரதியையும், கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், தெரியுமோ அதுபோல் தான் இதுவும் அதனால் சிவிஜயல் தமிழனுக்கு பெருமை இல்லை என்று சொல்வீர்களா என்ன ?

DNA வை தேட வேண்டாம், நான் தமிழினம் நாங்கள் உலகுக்கு நாகரீகம், வணிகம், வீரம் கற்றுதந்தவர்கள் என்பதை உணர்ந்தாலே போதும்.

Post a Comment