Pages

Monday, November 28, 2011

செக்டர் 7!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கக்கிடைத்த கொரிய மொழித் திரைப்படம் செக்டர் 7.


எனக்கு ஆங்கிலப் படங்கள் மேல் மிகுந்த ஈடுபாடு...உடனே வில்லங்கமா யோசிச்சிடாதிங்க...என் தம்பிக்குஆங்கிலப் படங்கள் மேல் ஆர்வம்...நிறைய கலெக்ஷன் சேர்த்து வைத்திருக்கிறான்.அவனோடு சேர்ந்து நான் ஆங்கிலப் படம் பார்ப்பதால் என்னோடு சேர்ந்து அவன் ஹிந்திப் படங்களைப் பார்ப்பான்..எங்களின் ஜென்டில்மேன் - ஜென்டில்வுமன் அக்ரிமென்ட் இது... 

லோர்ட் ஒப் த ரிங்க்ஸ்(Lord of the rings), ஹரிபோட்டர்(Harry Potter),பாஸ்ட் அண்ட் பியூரியஸ்(Fast & Furious),பிறேட்ஸ் ஒப் த கரிபியன்(Pirates of the Caribbean ) எங்களுக்குப் பிடிச்ச சீரிஸ்..எல்லாரும் விரும்பிப் பார்க்கக்கூடிய படங்களோடு சின்னப்பிள்ளத்தனமான படங்களும் எங்களுக்கு பிடிச்சது...மெயினா விரும்பிப் பார்ப்பது அக்ஷன் படங்களைத்தான்...ஒன்று பழைய கால கத்திச்சண்டை (ஸ்வோர்ட் மூவீஸ்) படங்களா இருக்கணும்..அல்லது ஆர்மி படமா இருக்கணும்..இதுதான் எங்க மூவி ஏரியா...

ஆனா இம்முறை நாங்க தேடி எடுத்து பார்த்தேதேல்லாம் சொதப்பிடிச்சு.....
127அவர்ஸ்(127 Hours),
கப்டன் அமெரிக்கா(Captain America),
ஸ்கைலைன்(Skyline),
டிஸ்ட்ரிக் 9(District9) என்று எல்லாப் படமும் ஏமாத்திடிச்சு...நல்ல படங்கள்...ஆனால் ரசிக்கமுடியா படங்கள்

அந்த ஏமாற்றங்களில் கொஞ்சம் ஆறுதல் தந்தது செக்டர்7 (Sector7)..கொரிய மொழிப் படம்...பார்க்கக்கூடிய படம்...  


ஜேஜு என்கிற தீவுப்பகுதியின் ஆழ்கடலில் மசகு எண்ணெய் எடுக்கும் தொழிலாளர் அந்தப் பகுதியில் எதிர்நோக்கும் சவால்கள்தான் செக்டர் 7.

எண்ணெய் எடுக்கணும்னு ஆசையா வேலை செய்றாங்க.ஆனா அந்தபகுதியில் அவங்களால் எண்ணெய் எடுக்க முடியல.ஏற்கனவே அந்த இடத்தில் ஆராய்ச்சி செய்த நபர்கள் மர்மமான முறையில் இறந்திட்டாங்க.

நாயகியின் அப்பாவும் அப்பிடித்தான் இறந்திருக்கிறார்..எண்ணெயும் எடுக்க முடியல.அதனால அந்தப்பகுதியில் வேலை செய்தவங்க திரும்பிப் போயிடுறாங்க.

ஆனாலும் கப்டன்,ஆராய்ச்சியாளர்,டாக்டர்,மற்றும் சில தொழிலாளர்கள் அங்கு வேலை செய்றாங்க..அந்த இடத்தில் தான் எப்பிடியாவது எண்ணெய் எடுப்பேன் என்று வேலை செய்றாங்க நாயகி.. எண்ணெய்க் குழாயை திருத்தம் செய்ய ஆழ்கடலுள் இறங்கும்போது நாயகியோடு இறங்கிய மற்றைய தொழிலாளி நண்பன் இறந்திடுறான்.


அப்புறமா ஆரய்ச்சியாளர்,டாக்டர் என்று மரணிக்கிறாங்க.சக வேலையாட்கள் தங்களோடு பணிபுரியும் ஒருத்தனை சந்தேகிக்க அவனும் இறக்கிறான்..சந்தேகம் வலுக்கும் நேரம் கடல் ராட்சசன் வெளிப்படுகிறான்..அவனை அழிக்கவே முடியல..அவனிடமிருந்து தப்ப பாடுபடும் குழுவினர் ராட்சசனை அழித்தனரா?எண்ணெய் எடுத்தனரா?என்பதே கதை..


விறுவிறுவென நகரும் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியல..ஆனாலும் கிளைமாக்சில் எதிர்பார்க்காத முடிவு.. 

ஹா ஜி வோன்,ஆன்ங் சுங் கி,  ஓ ஜி ஹோ நடிச்சிருக்காங்க..முக்கிய கதாபாத்திரம் ஹா ஜி வோனுக்கு...திறம்பட நடிச்சிருக்காங்க..பொண்ணு அழகாவும் இருக்கு...அதிரடியான துணிச்சலான பெண்ணா மிரட்டியிருக்காங்க...


செக்டர் 7 - பார்க்கக்கூடிய படம்!



################################################

Wednesday, November 23, 2011

மாத்தி யோசிங்க எழுத்தாளர் அம்மா !

இந்தக் காலத்து பொண்ணுங்கள எப்பிடி எப்படிஎல்லாமோ இன்றைய ஆண்கள் பிரிச்சு பிரிச்சு பார்த்துக்கிட்டாலும் ஒரு வரையறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவே இருக்கிறது...அது கண்ட கண்ட புத்தகங்களை வாசித்து தங்களை புத்தக ஆர்வலர்களாக காட்டிக்கொள்ளும் பெண்கள் எனும் வரையறையைக் கொண்டதே...இன்றைய கால கட்டத்தில் நிறைய நாவல்கள் வருது,நிறையப் பேர் கதைகள்,சிறுகதைகள் எழுதுறாங்க..புத்தகம் வாசிக்க நேரம் இல்லன்னாலும் ஏதோ வாசிக்கிறவங்க இருக்காங்கதான்..புத்தகங்களா எழுத முடியாதவங்க சிம்பிளா ப்ளொக்கில் எழுதி வெற்றி பெறுகிறார்கள்..


பொண்ணுங்களுக்கு பெரும்பாலும் ரொமான்ஸ் பிடிச்ச விஷயம்...காதல் சார்ந்த குளுகுளு நாவல்களை விரும்பி படிப்பாங்க..ஆனா சிலர் தங்களை புதுமைவாதிகளாக காட்டிக்கொள்வதற்காகவே புரட்சிகரமான நாவல்களை விளங்காட்டியும் படிப்பாங்க...ரொம்பப் படிச்ச பொண்ணுங்களா இருந்தா பெண்ணியவாதிகளாக காட்டிக்கொள்வாங்க.அதனால அப்பிடியான புத்தகங்களோட சுத்துவாங்க...சில கிரண் பேடிகள் துப்பறியும் நாவல்கள் வாசிச்சு துப்புத் துலக்குவாங்க...பெரும்பாலான பெண்கள் ரமணிச்சந்திரன் விசிறிகள்..


பொதுவா,வீட்டில இருக்கும் பெண்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்,இல்லத்தரசிகள்,இல்லத்தில் இல்லா ஆப்பீஸ் அரசிகள் பொதுவா படிக்கும் நாவல் ரமணிச்சந்திரன் நாவல்..

இப்பெல்லாம் "உலகிலே அதிகமான தமிழர்கள் படிக்கும் நாவல்" ."மனம் வருடும் இனிய நாவல்" இப்பிடில்லாம் அவங்க நாவல் வருது..

ரமணிச்சந்திரன் எப்போ இருந்து எழுதுறாங்கன்னு எனக்குத் தெரியாது..ஆனா நான் பள்ளி படிக்கும் காலத்திலேயே அவங்களின் ரசிக நெஞ்சங்கள் லைப்ரரியில் அலைமோதும் காட்சியை கண்டிருக்கிறேன்...யாரு புத்தகத்துக்கு இவ்வளவு கூட்டம் என்று எட்டிப்பார்த்தால்கூட எங்க லைப்ரரி அக்கா அப்பெல்லாம் எங்கள முறைச்சிப் பார்க்கும்..அந்த முறைப்பிலே வில்லங்கமா நாங்க அந்தப்பக்கம் போகமாட்டோம்...பள்ளிப் பருவத்திலே நான் சரித்திர நாவல்களோடு உட்கார்ந்திடுவேன்..

பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி வாழ்க்கைக்குத் தயாரான அந்த காலத்திலும் என் பொழுது நூலகத்திலே பெரும்பாலும் கழிந்தது...பள்ளி நூலகத்திற்கு விடை கொடுத்து பொது நூலகத்திற்கு மாறியபோதும் அதே ஆச்சரியம் எனக்கு...புத்தகங்களை இரவல் பெறும் பகுதியில் ரமணிச்சந்திரன் புத்தகங்களை பெற்றுக்கொள்ள பெண்களிடம் சச்சரவு நடக்கும்...எப்பவும் கூட்டம் இருக்கும்...நாமளும் வாசித்துப் பார்க்கலாம் என்று பார்த்தால் அவங்களின்  புத்தகங்கள் வைக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்காது...இப்பிடி போட்டியா என்று யோசித்துக்கொள்வேன்...அதனாலே எனக்கு அவரின் நாவல்களில் ஒரு ஈர்ப்பு உண்டாகியிருந்தது...

 நண்பிகள் எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றிக்கொள்வோம்..ஒரு நாள் என் நண்பி மூலம் எனக்கு ரமணிச்சந்திரன் புத்தகம் கிடைத்தது..நிறைய எதிர்பார்ப்புடன் வாசித்த அந்த நாவலை என்னால் மறக்க முடியாது...நான் வாசித்த ரமணிச்சந்திரனின் முதல் நாவல் "வளையோசை".எனக்குப் பிடித்திருந்தது அந்த கதை..தொடர்ந்து நான் வாசித்த நாவல்களும் எனக்குப் பிடித்திருந்தன. "ஊனமறு நல்லழகே" ,"அடிவாழை" ,"ஜோடிப்புறாக்கள்" ,"லாவண்யா" ....எல்லாம் எனக்குப் பிடித்திருந்தன...நானும் ரமணிச்சந்திரன் ரசிகையாகி அவங்க நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன்..


ஒரு பத்து நாவல்கள் வாசிச்சு முடிந்ததுமே அவங்க மசாலாத்தனம் விளங்கிப் போச்சு...
  • பணக்கார அழகான வாலிபன்..
  • வசதியில்லாத / நடுத்தர குடும்ப அழகிய நாயகி..
  • பணக்காரப் பையன விரும்பும் பணக்கார வில்லி..
  • ஏழைப்பொண்ண விரும்பும் முரட்டு வில்லன்..
  • மோதலில் ஆரம்பிக்கும் காதல்..
  • கிளைமாக்சில் நாயகி கடத்தல்..
  • ஹீரோ நாயகியை மீட்டல்..அப்புறம் சுபம்..
  • பாராட்டப்படவேண்டிய விஷயம் மருமகள் -மாமி சண்டையே இருக்காது..
இப்பிடியே எல்லா கதையும் போச்சு...கதை பரவால்ல..நாயகன்,நாயகி பெயர்கூடவா அப்பிடியே???

சுதாகர்,சதானந்தன்,தயானந்தன்,வித்யாதர்,தனஞ்சயன்,புவனன்,சித்தரஞ்சன் அவங்க பேவரிட் ஹீரோக்கள்....
அபரஞ்சி,வாணி,சௌமினி,தரங்கிணி ஹீரோயின்கள்...

எப்பிடியோ அந்தம்மாக்குன்னு கூட்டம்...நாவல்களுக்கும் நல்ல பிஸ்னஸ்....எப்பிடியோ ஒருவழியா போயிட்டு இருந்தாங்க...நாமளும் சரி பாவம் எழுதுறாங்க..யாராவது வாசிக்கணுமே என்ற நல்ல நோக்கத்துக்காக வாசிச்சோம்...ஆனா இப்ப என்னதான் பண்றாங்க?பேர்கள்தான் படாவதிப்பெயர்கள் என்றால் கதையும் பழசின் ரீரைட்டா வருது...

சில கதைகளை வாசிக்க ஆரம்பிச்சவுடனே தெரிஞ்சிடும் எங்க சுட்டதுன்னு..அப்பிடியே அதே கதைய கடைசில கொஞ்சம் மாத்தியிருப்பாங்க...இதுவரைக்கும் நூற்று நாற்பதுக்கும்  மேற்பட்ட அவங்க கதைகளை வேலை வெட்டியில்லாம நானும்  வாசிச்சிட்டன்...ஒரு முன்னேற்றமும் இல்ல..நல்லா ஓட்டுறாங்க..ஒரு வரிய எங்கையோ எடுத்து மறுவரிய எங்கேயோ கோர்ப்பாங்க..அதே உப்புச்சப்பில்லாத பழைய உப்புமாதான்...ஆனா பில்டப்பு ரொம்ப நீளம்...

உங்க கதையில என்ன இருக்கு????நாலு பேருக்கு என்ன கிடைக்குது??என்னென்ன படத்தெல்லாம் கொஞ்சமே லாஜிக் இல்லாம பார்க்கிறமாதிரி ஏதோ வாசிக்கிறம்....அவ்வளவுதான்..
எப்பிடியோ ரமணிச்சந்திரன் மேடம்...இனியாவது கொஞ்சம் மாத்த முயற்சி செய்யலாமே...கதைய மாத்தி யோசிக்கிற அளவு இல்லாட்டியும் பெயர்களையாவது கொஞ்சமா மாத்திப் பாருங்க...தெரியலன்னா டிவில நாலு சனல மாத்திப் பார்த்தா தெரிஞ்சிடும்...அதிலாவது கொஞ்சம் மாறினாதான் உண்டு...இப்பெல்லாம் நேரத்த ஓட்ட மட்டுமே உங்க நாவல எடுக்க வேண்டியிருக்கு....கிராக்கி குறைய முன்னாடி எழுத்தப் போட்டுடுங்க...

#############################################

Monday, November 21, 2011

ஜிந்தாக் கா ஜிதாக் ஜிதாக்!!!!

அழகு எல்லாருக்கும் பிடிச்ச அழகான விஷயம்..அழகைத் தேடித்தான் எல்லோர்  கண்ணும் அலைபாயுது..
ஆண்கள் மட்டும்தான் அப்பிடின்னு நான் சொல்ல மாட்டேன்...பொண்ணுங்க ஆண்களுக்கே தெரியாம  பார்ப்பதில் ரொம்பக்கெட்டிக்காரங்க...
(உடனே உங்க அனுபவமான்னு நொன்சென்ஸ் கேள்வில்லாம் கேக்கப்படாது...வெளிப்படையா சொல்றன்..அம்புட்டுதாங்கோ...)

பொண்ணுங்களுக்கு அழகா இருக்கிறதுன்னா ரொம்பப் *-டிக்கும்..அப்பிடில்ல..ஆண்களுக்கும் அழகா இருக்கிறதுதான் பிடிக்கும்..யாராவது அழகா இல்லாம இருக்க விரும்புவாங்களா???நிச்சயமா இல்ல..எல்லாரும் பளிச்னு இருக்கத்தான் விரும்புவாங்க...


அழகுன்னாலே பெயாரா?டஸ்கியா?என்று விவாதம் செய்ய நான் வரல்ல..அப்பிடின்னு மொக்கையா,லூசுத்தனமாக நவீனத்துவமான,புரட்சிகராமான,பகுத்தறிவுவாத சிந்தனைகளை சொல்ல சொல்ல நீயா?நானா? கோபிநாத்தாலதான் முடியும்...அந்தாளுக்கு பொண்டாட்டின்னு இருக்கிற அம்மணி என்ன பண்றாங்கன்னே தெரியல...இந்தாளு நிகழ்ச்சி நடத்துறாரா?இல்ல பொண்ணுங்கள சைட் அடிச்சிற்று ஓவரா பீத்திட்டு இருக்காரான்னே தெரியல..இப்ப ஏங்க அவரப் பத்தி பேசுறிங்கன்னு கேக்கிறிங்களா?டாப்பிக எடுத்தவுடனே சாரோட டாப்பிக் ஞாபகம் வந்திடுத்து..

நடிகைகளைப்பார்த்துதான் பொண்ணுங்க ட்ரெஸ் பண்ணுவாங்க..தலை கட்டுவாங்க..இப்பெல்லாம் எந்த ஹீரோயின் கட்டுறா..எல்லாம் லூஸ் ஹெயார்தான்..அதேமாதிரி அவங்க நடை,உடையையும் காப்பி பண்ணிப்பாங்க..பசங்க நடிகனைப்பார்த்து மாறிடுவாங்க..ஆனாலும் பொண்ணுங்க இதுல கொஞ்சம் ஓவர்தான்...ஹீரோயின்ஸ் நடிக்கும் விளம்பரங்கள் பொண்ணுங்களால்  கொஞ்சம் உன்னிப்பா கவனிக்கப்படும்..அப்புறம் அதே பேஷ் வோஷ்,கிரீம்,மொயச்டரைசிங்,சண் ப்ளாக்,கிளென்சர் என்று ஆரம்பமாகும் பான்சிக்கடை தேடல்....கடைக்காரன் எக்ஸ்ட்ராவா சொல்லும் பாஷன் தோடு,காப்பு,மாலைன்னு நீளும்....அப்புறம் பாக்,சில்பெர்னு அப்பா தலையில பச்ச மிளகாய அரைக்கிற வேலை நடக்கும்..சாரி...சாரி..இப்பெல்லாம் ஏங்க அப்பா?காதலன்...பாய் பிரெண்ட் என்று அம்பிடும் இளிச்சவாயன் பேஸ் காலியாகும்வரை அடுத்த ஹீரோயினாகும் முயற்சி நடக்கும்...இனிதே நடக்கும்...

எல்லாத்துக்கும் முக்கிய காரணம் இந்த ஹீரோயின்சோட பளிச் அழகுதான்...பள பளன்னு இருப்பாளுகளா.....எப்பிடி இவங்க முகமெல்லாம் இப்படி பளிச் பளிச்னு இருக்குன்னு தேடல் தொடங்கும்...அவங்க சைஸ் ஜீரோ அளவில இங்க வயிறு எரியும்.அப்புறம் பாய் பிரெண்ட் காசுக்கு வைக்கிற ஏற்றம் அப்பன்காரன் காசுக்கு இறங்கும்...டயட்டில காமாலை வந்த கேசா மாறுறதுதான் மிச்சம்...

அழகிகள் அழகிகளாவே பிறந்தாங்களா??இல்ல கோடீஸ்வரன் வீட்டு பொண்ணுங்களா பொறந்தாங்களா??இல்லையே...நம்மள மாதிரி..இல்லல்ல...கொஞ்சம் கீழவேதான்...அப்புறம் எப்பிடி???இப்பிடின்னு யோசிப்பேன்...மேக் அப்தான் முழுக்காரணம் என்று நம்ப முடியல...சட்டியில இல்லாம அகப்பையில வருமா என்ன??வருதுபோலதான்...காமெராவின் வெளிச்சம், தட்டுத் தட்டான முகப்பூச்சுக்கள் எல்லாம்  சேர்ந்து பிரம்மிப்பாக்கியிருக்கலம்.

சமீபத்தில அமலா பாலோட ஒரு படம் டுவிட்டேரில் பகிரப்பட்டிருந்தது...அதில அவங்க ரொம்ப மோசமா சகிக்கல...ஆனா அவங்க படங்களா கூகிளில் பார்த்தப்போ என்ன அழகு...அவ அழகு எனக்கு பிடிக்காட்டாலும் ரசிக்கும்படியாவே இருந்தது...ரெண்டுக்கும் பொருந்தவே இல்ல...

என்ன தப்பு நடந்துது???எங்க தப்பு நடந்துது???

குற்றம் நடந்தது என்ன???
விசாரணைக் கமிஷன் கூகிளில் ஆரம்பிக்கப்பட்டது....
சில நிமிட தேடல் பதிலைத் தந்தது...
ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச தேடல் பல புள்ளிகளைத்தந்தது.. 

எல்லாமே அதுதாங்க.....அதுதாங்க.....
############################################
ஹோலிவூட் 

அஞ்சலினா ஜோலி 
இலட்சக்கணக்கானோரின் கனவு தேவதை...பிரட் பிட்டின் துணை...ஆறு குழந்தைக்கு தாய்...


கிம் காடேஷியன் 
கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்ட புயல்...



பிரிட்னி ஸ்பியர்ஸ் 
பாட்டாலும்,நடனத்தாலும் கிறங்கடித்த பிரிட்னி...


மடோனா
பாட்டிலே போதை தரும் மடோனா...


###########################################
பொலிவூட்

பிரியங்கா சோப்ரா 
முன்னாள் உலக அழகி...
தமிழனில் விஜயுடன் நாட்டுக்கட்டையாக வந்தவர்..
பொலிவூட்டில் சிட்டிகட்டையாக மாறி சாஹிட்  கபூருடன் ஜோடியாகி முன்னணியில் இருப்பவர்..


தீபிகா படுகோன் 
விஜய் மல்லையாவின் வருங்கால மருமகள்....ரஜனியின் இப்போதைய ஜோடி..


கரீனா கபூர் 
கோடியில் சம்பாதிக்கும் சைஸ் ஜீரோ...சாஹிட் கபூரின் அன்றைய ஜோடி...சைப் அலிகானின் இன்றைய ஜோடி...


வித்யா பாலன் 
ஹோம்லி அழகை வைத்துக்கொண்டு நடிப்பில் நிரூபித்தவர்..டெர்ட்டி பிக்சரில் மற்ற அழகையும் காட்ட வருகிறார்...


கஜோல் 
பல காலம் குட்டைப்பாவாடையில் கனவுக்கன்னியாக வலம் வந்து,அஜய் தேவ்கானின் கரம் பிடித்த கஜோல்...


கத்ரீனா கைப் 
வெளிநாட்டிலிருந்துவந்து பொலிவூட்டை கலக்கி சல்மான் கான்,ரன்பீர் கபூர் என டேட்டிங் செய்யும் கைப்...


பிபாசா பாசு
கவர்ச்சிப் புயல்...ஜோன் ஆபிரகாமின் முன்னாள் காதலி...


சோனம் கபூர்
அனில் கபூரின் உயர்ந்த மகள்..ரன்பீருடன் வலம்வந்த ஒல்லி தேவதை...


ராணி முகர்ஜி
சில காலம் முன்னணியில்...சில காலம் பின்னணியில்...


மாதுரி டிக்ஷித் 
போலிவூட்டையே பல காலம் கட்டிப்போட்ட மாதுரி...


ஜூஹி சாவ்லா
அன்றைய ஸ்டார் நடிகை...


ஊர்மிளா
ரங்கீலாவால் கிறங்கடித்த கிளாமர்...


##################################################
இது நம்ம ஏரியா

திரிஷா


சினேகா


பாவனா


பிரியாமணி


தமன்னா


அசின்


அமலா போல் 
கொஞ்சம் மேக்கப்பிலும் இப்பிடி... 


###################################################

எல்லாம் மேக்கப் துணை....மேக் அப் இருக்க பயம்மேன்!

Sunday, November 20, 2011

போய்க்கிட்டே இருப்போம்!!!!



நாட்டில,உலகத்தில என்னென்னல்லாமோ நடந்திட்டு இருக்கு..அப்ப நீங்க நடக்கலையா? இல்ல..நாங்கதான் நடக்கலையா???இப்பிடில்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது...புரிஞ்சுதோ???ஒவ்வொரு நாளும் விலை கூடுது..குறையுதுன்னு சொல்ல ஆசை...ஆசை ஆசையாவே போகுது.... ஏதோ சட்டம் புதுசா வருது...பழசா இருக்கிறது போகுது....எத்தனையோ தினம் கொண்டாடுறோம்?என்னென்னவோ பார் க்கிறோம்..பேசுறோம்....மூணுவேளை தவறாம சாப்பிடறோம்...வாழ்க்கை போகுது...போய்க்கிட்டே இருக்கு.......

நாமளும் போய்க்கிட்டே இருக்கிறோம்............

####################################################################

வேலாயுதம் -ஏழாம் அறிவு வெற்றி - தோல்வி பிரச்சினைகளில் ஆரம்பிச்சு,சன் டிவி தரப்படுத்தல்,ஜெயா டிவி தரப்படுத்தல் அப்பிடி இப்பிடின்னேல்லாம் தொடர்ந்து ,போதி தர்மர் தமிழரா என்று போய்க்கிட்டே இருக்கு....

நம்ம சூப்பர் ஸ்டார்,அல்டிமேட் ஸ்டார் பப்ளிசிட்டி எல்லாம் அடங்கி இப்போ பவர் ஸ்டார் பேச்சா போய்க்கிட்டு இருக்கு...

அம்மா கலைஞர் கட்டினதெல்லாம் மாத்தி முடிச்சிட்டாங்க...இப்போ கலைஞர் கூட்டாததெல்லாம் கூட்டிற்று இருக்காங்க...பஸ் கட்டணம்,பால் விலைன்னு எல்லாம் உயரத்துக்கு போய்கிட்டு இருக்கு...

ஐஸுக்கு கர்ப்பம் எண்டு கண்டுபிடிச்சது..பிரசவமாகி,அந்த பொண்ணு வாழ்க்கையையும் நாசமாக்க ரெடியாகிட்டாங்க....ரஜனிக்கு ஜோடியாக்கி டூயட் பாட கூட்டிக்கிட்டு போய்கிட்டே இருக்காங்க...

சாரு நிவேதிதாக்கு சாட்டிங் குறஞ்சுதோ இல்லையோ,கேர்ள் பிரெண்ட் அம்பிட்டாங்களோ இல்லையோ,எக்செல் யாவராம் பிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கு...

நம்ம விஜய் டிவி ஹீரோ சிவகார்த்திகேயன் விஜய் டிவில  ஹீரோவா இருந்தது மாறி,இப்போ ஒவியாக்கு ஹீரோவா மெரினாவில நடந்து போய்க்கிட்டே இருக்காரு...

நீயா?நானா? கோபிநாத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தெரியாம மண்டை குழம்பிப்போய் பிகருங்கள பார்த்துக்கிட்டே பாதாளத்துக்கு போய்க்கிட்டு இருக்காரு...

விண்ணைத்தாண்டி வருவாயாக்கு அப்புறம் நல்லவானா இருக்கேன்னு காட்டிக்கிட்ட சிம்பு கெட்டவனா ஒஸ்தியா போய்க்கிட்டு இருக்காரு...

நயனோட கல்யாணம் அன்னிக்கு,இன்னிக்குனு நீண்டுகிட்டே போயிட்டு இருக்கு...

பேஸ் புக்கில தல -தளபதிய மோதவிட்டவனுங்க குழந்தை பசங்களோட விளையாடிக்கிட்டு தம்முக்கும்,சாராயத்துக்கும் ஓசில விளம்பரம் கொடுத்து சின்னப்பசங்க வாழ்க்கைய அழிக்கிற வேலைல மும்மரமா போய்க்கிட்டு இருக்கானுக..

கிங்பிஷேர் ஊத்திக்கொடுத்திட்டிருந்த இருந்த காலம் போய் ஊத்திக்கிட்டு,ஊதிக்கிட்டு போயிட்டு இருக்கு...

ஜோன் ஆபிரகாம் வருசக்கணக்கா அணைச்சுக்கிட்டு திரிந்த பிபாச பாசுவ அறுத்திட்டு...புதுசா பார்த்துக்கிட்டு பார்டிகளுக்கு போய்கிட்டு இருக்காரு..

சங்ககார அடிச்சு,அடிச்சு..பேரோடும்,புகழோடும்,முதல் ராங்கோடும் போய்க்கிட்டே இருக்காரு..

சச்சின் நூறு அடிப்பாரா,நூறு அடிப்பாரா என்று அவருக்கு டென்ஷன ஏத்திட்டாங்க...பாவம் மனுஷன்..தொண்ணூத்தொம்பது அடிச்சத மறந்தவனுங்கள பார்த்து ஓடுவாரா?அந்தப்பக்கம் டிராவிட்ட பார்த்து ஓடுவாரா....எப்பிடியோ போய்க்கிட்டே இருக்காரு...

மகிந்த தன் மக்கள் ஆட்சியில் அறுபத்தாறை கடந்தும் அயராது ஓடிக்கிட்டே வீரநடை போட்டு போய்க்கிடு இருக்காரு...

ராகுல் காந்தி நாப்பத்துஒன்னை கடந்தும் வெளிநாட்டுப்பக்கம் காதலியோட போகாம உபியில் உச்சிவெயில் பிரசாரமா நடையில போய்க்கிட்டு இருக்காரு...

ஜெனிலியாக்கு,ரிதேஷ் தேஸ்முக்கோட  மாச்சில கல்யாணமாம்..பொண்ணு அதே சிரிப்போட ஜோடியா விழாக்களுக்கு போய்க்கிட்டு இருக்கு...

###################################################################

எல்லாரும் எப்பிடி எப்பிடியோ போய்க்கிட்டு இருக்காங்க.....
நான் அதே காலேஜில்,அதே படிப்போடும்,அதே நோட்சொடும்.....போய்க்கிட்டே இருக்கேன்.....


#####################################################################

போய்க்கிட்டே இருப்போம்......என்னைக்கோ போறதுதானே வாழ்க்கை...

Thursday, November 17, 2011

Force -ஹிந்தி விமர்சனம்

நிறைய நாட்களுக்குப் பிறகு பார்க்கக்கிடைத்த ஹிந்திப் படம் "FORCE" 




எனக்கு ஹிந்திப் படங்கள் என்றால் மிகுந்த ஆர்வமும்,விருப்பமும்...தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருத்த எனக்கு அந்தப் படங்களில் இப்பெல்லாம் திருப்தியே இல்லை..என்னதான் அக்சன் படமா இருந்தாலும்,காதல் படமா இருந்தாலும்,காமெடிப் படமா இருந்தாலும் எனக்கு எல்லாமே காமெடிப்படமாகவே தெரியுது..இந்த திருப்தியின்மையே வேற்று மொழிப்படங்களை என்னை பார்க்கத் தூண்டியது..அப்பிடி பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஹிந்திப்படங்கள் மேல கொஞ்சம் கூடுதல் கவனம்....


அதிலும் எல்லா ஹிந்திப் படங்களும் பார்க்கமாட்டேன்...படங்களின் ட்ரெயிலர் என்னை பார்க்கத் தூண்டியிருக்கணும்...ஆனாலும் ஷாருக்கான் படங்கள் மேல் தனிக் கிறுக்கம்...ஹிந்திப் படம் பார்த்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று பார்த்தேன்..


பொதுவாக எனக்கு ஜோன் ஆப்ரஹாமின் படங்கள் பிடிப்பதில்லை..எப்பபாரு சட்டையை களட்டிவிட்டுக்கொண்டு அவரின் உடம்பைக் காட்டுவதிலே ஜோன் ஆபிரகாம் அக்கறையாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம்..
ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் "ஜூதா ஹை சா ஹீ" என்ற படம் பார்த்தேன்..எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது..வித்தியாசமான ஜோன் ஆப்ரஹாமை பார்க்கமுடிந்ததில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன்..

அந்த ஈர்ப்பில் இந்தப் படத்தை பார்க்க உட்கார்ந்திட்டன்..பார்க்க ஆரம்பிச்ச உடனே தெரிஞ்சுபோச்சு..படம் நம்ம "காக்க காக்க" படத்தோட ரீமேக்குன்னு..என்னாடா இது வம்பாப்போச்சு என்றிருந்தாலும் அந்த லூசுப்பொண்ணு ஜெனிலியாவின் சிரிப்பிற்காக உட்கார்ந்தாச்சு...பொதுவா எனக்கு ரீமேக் படங்கள் பிடிக்காது..பார்க்காத படத்த பார்க்கிறதில்தான் என்றும் ஈர்ப்பு..

அப்பிடியே காக்க காக்க" எந்த வித்தியாசமுமே இல்லை..என்னை அவங்கட மும்பை சூழலிற்கேற்ப மாத்தியிருக்காங்க..

ஹீரோ ACP "யஸ்வர்த்தன்" 


ஜோன் ஆபிரகாமின் பாடி அந்த கரக்டேருக்கு பொருந்தும்னு நினைத்திருப்பாங்க போல.ஆனாலும் அந்த வெயிட்டான மிரட்டும் பாத்திரம் ஜோன் ஆப்ரஹாமிற்கு அந்நியமாகவே தெரியுது.. சூர்யாவின் கண்களில் இருந்த அந்த மிரட்டல்,மீசையில் இருந்த வீரம் மிஸ்ஸிங்..மிஸ்ஸிங்...

சிலநேரம் வில்லனை துரத்திப் பிடிக்க ஜோன் ஓடும் காட்சிகளில் அந்த உடம்பை கஷ்ற்றப்பட்டு தூக்கிக்கொண்டு ஓடுவதுபோல இருக்கு..


ஹீரோயின் "மாயா"நம்ம ஜெனிலியா...


ஜெனியைப்பார்க்கும்போது ஜோதிகா கண்களுக்குள் வருவதை தவிர்க்க முடியவில்லை..இதிலிருந்தே ஜோதிகாவின் நடிப்பு எவ்வளவிற்கு சிறப்புன்னு தெரியுது...


மாயாவா வரும் ஜெனிலியா வழமை போலவே கியூட்டா சிரிக்கிறா...அழகா இருக்கிறா..நிறைய ரொமான்சிலும் கலக்கியிருக்கிறா...நடிச்சாவான்னு எனக்கு தெரியல...


ஜெனிலியா ஜோன் ஆபிரகாமோட நெருக்கமாத்தான் நடிச்சிருக்காங்க...கெமிஸ்ட்ரி நல்லாத்தான் இருக்கு...ஜெனி கிளாமராவும் நடிச்சிருக்காங்க..


வில்லன் விஷ்ணுவா "வித்யுத் ஜம்வல்"..


எனக்கு புதுகமாவாகவே தெரிந்தார்...ஆனா ஹீரோ களை இருக்கு..மிரட்டினார்.....


இசை ஹாரிஸ் ஜெயராஜா..அதே காக்க காக்க பாடல்கள் என்றாலும் சூப்பர்...

ஓமகசீயாப் பாடல் -இங்கு காமோ காமோ அப்பிடின்னு வருது...கேகே மற்றும் சுசித்ரா குமார் பாடியிருக்காங்க...நல்லா இருக்கு...

கசே கஹூ -கார்த்திக் மற்றும்,பாம்பே ஜெயஸ்ரீ பாடியது...
என்னுடைய இப்போதைய பேவரிட்...ரொமாண்டிக் பாடல்  சூப்பர்...



நிஷிகாந்தின் இயக்கம் பரவால்ல...
படம் ஏதோ விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தாலும் மனசில் ஒட்டல...ஒரு தரம் பார்க்கலாம்.....

இந்தப்படத்தை பற்றி ரொம்பவும் கேள்விப்படாட்டாலும் இந்த ஒரு விஷயத்தில கேள்விப்பட்டிருப்பிங்க...


இதிலும் யஸ்வர்தனுக்கும்,மாயாவிற்கும் கல்யாணம் நடக்கும்...சினிமாவிற்கப்பால் ஜெனிலியாவிற்கும்,ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் கல்யாணம் என்று பேச்சு வந்ததும்,படத்தில் கல்யாணத்தை நடத்திவைத்த ஐயர் என்னை சொன்னாரு தெரியுமா? 

"ஜோன் ஆபிரகாமும்,ஜெனிலியாவும் கல்யாணம் பண்ணிட்டாங்களே.....,உண்மையில உண்மையான மந்திரங்கள் சொல்லியே கல்யாணத்தை நடத்தினேன்...அவங்களும் அக்கினி வலம் வந்து,மாலை மாத்திக்கிட்டாங்க ...இது சினிமாக் கல்யாணம் இல்ல..உண்மைக்கல்யாணம்.."

என்னடா இது வம்பாப்போச்சு?அவங்களுக்கு இது சகஜம்தானே....

FORCE - லூஸ்

##########################################

Tuesday, November 15, 2011

என்னதான் பண்றது???

எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல...ஒரே படபடப்பா இருக்கு...என்ன நினைக்கவே பயம்மா இருக்கு...என்ன பண்றதுன்னே தெரியல....என்ன பண்றது????

பதிவு எழுத ஆசை...வந்து லப் டொப்ப எடுத்தாச்சு...ஆன் பண்ணியாச்சு...ஆனா என்ன எழுதுறது?தெரியலையே....நானெல்லாம் டைப்பண்ணத் தெரியும்கிறதுக்காகவே பதிவெழுத ஆரம்பிச்ச ஞான சூனியங்கள்..இதெல்லாம் வெளங்கிடும்னு யாரும் திட்டமாட்டிங்க என்றதால இப்பிடி...ஹப்பாடா!ஒரு பந்திய முடிச்சாச்சு...


எனக்கு என்ன செய்றது..இதவிட்டா வேற வழியே தெரியல.. நானும் என்னெல்லாமோ பண்ணிப்பார்த்திட்டன்..முடியலையே...எதையும் செய்யமுடியாத தவிப்போட,வேதனையோட இந்தப்பக்கம் வந்திருக்கேன்...யாரும் ஏமாத்திடாதிங்க..நல்ல உள்ளங்கள் கோவிச்சுக்காதிங்க..எப்பிடில்லாம் ஓட்டவேண்டியிருக்கு...இதெல்லாம் வீர வாழ்க்கையில சகஜம்தானுங்களே...

நானும் புத்தகம்தான் படிக்கலாம்னு நினைச்சன்...முதல்ல என் கையில அம்பிட்டது "உலகிலே அதிகமான தமிழர்கள் படிக்கும் நாவல் " அது என்னனு கேக்கிறிங்களா? ரமணிச்சந்திரன் நாவல்...அப்புறம் விளங்குமா?அந்தம்மாவே அரச்ச மாவ அரச்சிட்டு இருக்கு...அப்புறம் நாம என்னத்த?பேரைக்கூட அறப் பழசாவே வைக்குது..அதையாவது மாத்தினாலும் கொஞ்சம் பரவால்ல....அதனால நெக்ஸ்டு...


அதனால படம் பாக்கலாம்னு உக்காந்தேன்...முன்னெல்லாம் ராத்திரில கண்முழிச்சு பார்த்திட்டு,காலையிலும் பார்ப்பேன்..இப்ப என்னத்த சொல்றது...இரண்டரை மணித்தியாலப் படத்தை ஒரு மணித்தியாலத்தில் பார்க்கும் சாதனை என்னையே சேரும்...எதுவுமே சரியில்லைங்க..விஜய் ட்ரெயின நிப்பாட்டுறதென்ன? சூர்யா சிக்ஸ் பக்க காட்டுறதென்ன? தனுஷ் பாடுறதென்ன? ஹன்சிகா நடிக்கிறதென்ன?ஸ்ருதி டமிழ் பேசுரதென்ன? என்ன?என்ன?என்ன? நெக்ஸ்டு...


நெட்டில ஏதாவது நல்லதா பாக்கலானா....
  • ஐஸுக்கு அபிஷேக்கின் சிசேரியன்
  • தீபிகாவை அம்பானியிடம் அனுப்ப மல்லையா ஆலோசனை
  • கிரிக்கெட்டர்கள் பள்ளித்தோழியை மணப்பதன் பின்னணியில் பென்சில் சண்டை
  • ஆன்டிகளை மணப்பதில் யுத்துகள் தீவிரம் -நேரடி அலசல்

வெளங்குமா? நம்மள உருப்படவே விடாதுங்க ஒலகம்..

"இல்லன்னா...நீங்க உருப்பட்டுடுவிங்க...ம்கும்.."
மைன்ட் வொயிஸ் கேக்கிறாப்ல பீலின்க்...
நானெல்லாம் சுட்டு போட்டாலும் திருந்தமாட்டான்..ஸ்டாப்...அதென்ன சுட்டபிறகு திருந்திறது??சுட்டா செத்துடுவான்..இல்ல சுட்டவன் பழிவாங்க கிளம்பிடுவான்...புதுசா...புதுசா....புதுசாஆஆஆ...நானெல்லாம் அப்பா காச நெட் பில் கட்டி அழிச்சாலும் திருந்த மாட்டேன்..ஒத்துக்கிறன்..இதெல்லாம் வீர வாழ்க்கையில சகஜம்தானுங்களே????

யாரும் தப்பா எடுத்துக்கப்படாது...மனசே சரியில்...புலம்ப ஆளில்ல...அதான் கொஞ்சம் பொலம்பிட்டன்...கோவிச்சுக்காதீக மகா ஜனங்களே......


#########################################

Sunday, November 13, 2011

எனக்குப் பிடிக்குமா?இல்ல புடிக்குமான்னு கேக்கிறன்?

என்னங்க இது...லூசுத்தனமா அடியும் இல்லாம முடிவும் இல்லாம ஒரு கேள்வி கேக்கிறிங்க...எப்பவும் இப்பிடியா?இல்ல இன்னைக்குத்தான் இப்பிடியா?இல்ல...ஏதும் பிரச்சினையில இருக்கிங்களா?எதுவா இருந்தாலும் தெளிவா கேக்கணும்...எதையும் பிளான் பண்ணி யோசிச்சு கேக்கணும் அப்பிடின்னு சொல்றிங்களா?


இன்றுதான் ஞாயிற்றுக்கிழமை...அட!பொண்ணு கண்டுபிடிச்சிருச்சே...
புத்திசாலிதான்னு யாராவது மனசுக்குள்ள நினைக்கிறிங்களா?அட போங்க...எனக்கு தெரியும் ஞாயிறு இன்னைக்குன்னு....இந்தாம்மா!ஞாயிறு இன்னைக்கு மட்டும் புதுசில்ல...வாரத்தில ஒருநாள் ஞாயிறு வரத்தான் செய்யும்...புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பேசுறியே..அப்பிடின்னு நினைக்கிறிங்களா?நினைச்சுக்கோங்க...விஷயம் அடுத்த பந்திக்கு நகர்கிறது.....




விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை எல்லாரும் விரும்புவாங்க...நாம வித்தியாசமில்ல...அதனால எனக்கு புடிக்கவே புடிக்காத நாள் இந்த அருமையான ஞாயிற்றுக்கிழமைதான்..ஏன் தெரியுமோ?ஒரு நாளும் இல்லாத மாதிரி இன்றைய நாளில்தான் எனக்கு பிசியான நாள்...வழமையா ரொம்ப ரொம்ப வெட்டியா இருப்பேன்...காலேஜ்க்கு  அப்பப்பதான் போவேன் .. விருப்பமான நேரம் காலேஜ்குப்போய் அங்குவரும் பிசாசு வாத்தியாரம்மாகிட்ட  அப்பப்ப நல்லா சக்கரப்பொங்கல்,வடை,பாயாசம் எல்லாம் ப்ரீயா வாங்கிப்பேன்..மற்றும்படி மேடம் பிரீயாத்தான் இருப்பாங்க...டுவிட்டர்,பேஸ்புக் உலகில்தான் ரொம்ப வேலை இருக்கும்...மத்தபடி வெட்டியோ வெட்டி....

ஆனால்,இந்த ஞாயிற்றுக்கிழமை இருக்கே...என்ன சந்தோசமா வாழவிடுதா?எப்பபாரு என் லைனில் தேவையில்லாம என் லைனைக் க்ரோஸ் பண்ணுது..இருடி..ராஜாத்தி..ஒரு நாளைக்கு என்கிட்ட மாட்டாமையா போவ...அப்ப பாத்துக்கிறன்....எப்பிடில்லாம் வாழக்கூடாதுன்னு நினைக்கிறனோ அப்பிடில்லாம் என்ன வாழ விடுது இந்த நாள்...பொல்லாத ஞாயிறு....என் புளைப்பக் கெடுக்கும் ஞாயிறு...

எங்கப்பா நான் சட்டம் படிச்சு கிழிக்கிறது போதாதுன்னு,என்ன மனிதவள முகாமைத்துவக்கற்கையும் படிக்கச்சொல்லிட்டார்..பொண்ணு படிக்கிறதில அக்கறையுள்ள மனுஷன்..பொண்ணுக்கு பொறுப்பிருந்தால் பரவால்ல....ம்ஹூம்.....அதுவும் பெரியதொரு கல்லூரியில்...அங்க ஏகப்பட்ட சட்டதிட்டம்..அட்டெண்டன்ஸ் கொஞ்சம் மிஸ்ஸானாலும் ரிசல்ஸ் புஸ்வாணமாகிடும்.. நம்ம ஜின்க் ஜிக்கா வேலையெல்லாம் பண்ணமுடியுமா?இல்ல முடியுமா??
இல்லையே...அதுதானே இந்த பொலம்பல்...

இன்னைக்கு ஞாயிறு என்றதும் நேற்றிரவே எனக்கு லேசா வயித்துக்குள்ள என்னமோ பண்ணிச்சு...வழமையா பன்னிரண்டு மணிக்கு தூங்கி,மானிங் ஒன்பது மணிக்கெல்லாம் எந்திரிக்கிற பொண்ணு அலாரம் எல்லாம் வச்சுட்டு நேரத்துக்கு தூங்கியாச்சு.ஆனா பழக்கதோஷம் விடுமா விடாதே....
அலாரம ஆப் பண்ணிட்டு தூங்கிட்டா.என்னவோ நல்ல காலம் எழும்பி பார்த்தா ஏழு மணி..அரக்கப் பறக்க எழும்பி குளிப்பமுன்னு பார்த்தால்...அங்கயும் பிரச்சினை....தலைக்கு எண்ணையையை காட்டியே இராத பொண்ணு நேற்றுதான் என்னமோ ஆசையில தலைக்கு வச்சிருந்தது...அப்பிடியே குளிச்சிட்டு போக முடியுமா?இல்ல போக முடியுமா?த்ரீ குவாட்டரும், ஸ்லீவ்லெசுமா, விரிச்ச தலையுமா வரும்  பொண்ணுங்க எல்லாம் என்ன அப்புறம் "எங்கேயும் எப்போதும்" அனன்யாவ பார்க்கிறமாதிரி பார்க்கமாட்டாங்க???எல்லாம் என் ஞாயிறு விதி...

அப்புறமா தலைக்கு ஷம்போ  போட்டு அவசர அவசராமா குளிக்கவே அரைமணி நேரம் ஆச்சு ..எனக்கு தலைக்கு குளிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம்...நிறைய நேரம் ஷவருக்கு கீழே நின்னிடுவன்...அப்புறம் வெளிக்கிட்டால் எட்டுமணி பத்து நிமிஷம் கடந்திருந்தது...இதில ஒரு சிங்கிள் காப்பிகூட இல்ல..காப்பிக்கே வழியில்லாத நேரம் சாப்பாடு கிடைக்கும்???கிடச்சிட்டாலும்...தனிமை வாழ்க்கை கொடும...இப்பிடியான நேரம் கடுமை ..

அப்புறம் நடந்து போய் பஸ் எடுத்து அங்கிருந்து வகுப்புக்குபோய் சேர்ந்தால் ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கு..அப்பத்தான் மூச்சே விட்டிருப்பன்...சீரியசாத்தாங்க...

அப்புறம் பத்து அரைக்கு டீ ப்ரேக் ..பன்னிரண்டு மணிக்கு லஞ்ச் ப்ரேக்..அதில வீட்டில கொட்டிக்கிற மாதிரி கொட்டிக்க  முடியுமா?ஸ்டைலா ஒரு பேகர்..அதுவும் ரொம்பச் சின்னது...அப்புறம் மூணு மணிக்கு டீ ப்ரேக்...எல்லாம் சரிதான்...ஆனா உக்காந்திருக்கிறது இருக்கே கொடும சரவணா...எப்பிடித்தான் நம்மாளுங்க வேல பாக்கிறாங்களோ?நாலு மணிக்குதான் ரிலீஸ் பண்ணுவாங்க......


ஹப்பாடா..அப்புறம் பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்தா பொண்ணு களச்சு வந்திருக்காளேன்னு காப்பி கொடுக்க அம்மாவோட வீட்டிலா இருக்கோம்...வாளில தண்ணிய புடிச்சு,நம்ம கையால தண்ணி ஊத்தி குளிச்சு,நம்ம கையால தண்ணி வச்சு,காப்பி கலந்து குடிச்சாதான் உண்டு...அப்புறம் நாளைக்குத்தான் எந்திரிப்பேன்..பசிக்கிற நேரம் ஒரு மகி....அதுவும் நம்ம கையாலதான்..இதுக்கெலாம் வாடைக்கு கைய வச்சுக்க முடியுமா?


நீங்களே சொல்லுங்க....இப்பிடிப்பட்ட ஞாயிறு எனக்குப் பிடிக்குமா?பிடிக்கத்தான் செய்யுமா?

அடுத்த ஞாயிறு வராம ஸ்ட்ரெயிட்டா திங்கள் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்???


########################################################