அன்பு இல்லாமல் தவிப்பவர்கள், அன்பு எங்காவது கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் நம்முடன் கூடவே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தேவை என்ன என்பது நமக்குத் தெரிந்திருப்பதில்லை.... தங்களின் பலவீனங்களை மறைத்துக் கொள்ள கடினமான முகமூடியை போட்டுக்கொள்பவர்கள் இவர்கள்.
#######################################
நீண்ட நாட்களுக்குப் பிறகு யதார்த்தமான அழகான ஆங்கில சினிமா பார்க்கக்கிடைத்தது..
ரெயன் ரெனோல்ட்ஸ், சன்ட்ரா பலக் நடித்து 2009இல் வெளிவந்த படம் இது...
புத்தக பதிப்பக நிறுவனமொன்றின் எடிட்டர் மாக்ரட். அவங்க அசிஸ்டன்ட் அன்ட்ரூ...தனிமையில் வாழும் இந்த எடிட்டர் ரொம்பவும் பொல்லாதவங்க...கனடாவை சேர்ந்த இந்த எடிட்டர் அமெரிக்க கம்பனியில் வேலைபார்க்கமுடியாமல் வீஸா பிரச்சினை வரும்போது எடிட்டர் கனவில் இருக்கும் நாயகனை தன் வருங்காலக் கணவன் என்று அறிமுகப்படுத்தி அவனுடன் ரகசிய ஒப்பந்தம் பேசுகிறார் மாக்ரட்..
சட்ட சிக்கல்களைத் தவிர்க்க முறையான திருமணம் தேவைப்படுகிறது..அதற்காக நாயகனின் ஊர் சிட்காவிற்கு (அலாஸ்கா) ஒன்றாக செல்கிறார்கள்...அன்ட்ரூ குடும்பத்துடன் ஒரு வாரம் தங்குகிறார் மாக்ரட்...இருவரும் பின்னர் காதல் வயப்பட்டனரா?? திருமணம் செய்தனரா??? ஹீரோவின் எடிட்டர் கனவு நிறைவேறியதா என்பதே படம்...
அறிமுக காட்சியிலே ஹீரோயினின் கடின முகம் அந்த அலுவலக காட்சியில் அழகாக காட்டப்படுகிறது..அலுவலர்களின் பதட்டம், ஒளியும் பாங்கு, ரகசிய மெசேஜில் அவங்க ரூமிலிருந்து வெளிவருவதை பகிர்வது என்று எடிட்டர் அம்மாவின் குணம் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது..
அன்ட்ரூவின் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரங்களில் குறிப்பாக அன்ட்ரூ பாட்டியுடன் மாக்ரட் இருக்கும் நேரங்கள் அவரின் குடும்ப ஏக்கத்தை தெளிவுபடுத்துகிறார்கள்...
ரெயென் ரெனோல்ட்ஸ், சன்ட்ரா பலக் செமிஸ்ட்ரி சொல்வதற்கில்லை..
சண்ட்ராவிடம் முதுமை தெரிகிறது. ஆனால் காதாபாத்திரங்கள் கதைக்கேற்பவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது..
குடும்பத்துடன் இருந்து பார்க்கக்கூடிய நல்ல படம்....ஒரேயொரு காட்சி மட்டும் கொஞ்சம் உறுத்தல்...
#############################################################

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)

0 comments:
Post a Comment