நீண்ட நாட்களுக்குப் பின் வலையுலகில் பிரவேசிக்கிறேன்...தொடர்ந்த சில கால இலக்கற்ற வாழ்வில் இயந்திரமாய் ஓடிக்களைத்து இப்போ கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விடுவதாய் உணர்கையில் மீண்டும் இந்தப்பக்கம் ஒரு எட்டிப்பார்த்தல்..
இந்த வருடத்தின் என் முதல் பதிவு....
இன்றுதான் இந்தப்படம் பார்த்தேன்..படம் சொல்லிக்கொள்ளும்படி எதையும் சாதிக்காவிட்டாலும் நன்றாக சிரிக்கவைத்தது...
உங்களுக்கு எப்படியோ நான் நன்றாக சிரித்துக் களைத்தேன்...என் மனநிலைக்கு அப்படி சிரிப்பது தேவைப்பட்டதாககூட இருந்திருக்கலாம்..வேதனையில் அலுத்துக் களைத்த மனது சிரித்தது...
உங்களை போரடிக்காமல் படத்திற்கே செல்கிறேன்....
.........................................................................................................
எனக்குப் பிடித்த இம்ரான் கான், மற்றும் அனுஷ்கா ஷர்மா..அதுவே படம் பார்க்க என்னைத் தூண்டியது...இம்ரான் கான் படங்கள் எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும்...அது போல அனுஷ்கா ஷர்மா படங்களும் சிரிக்கவைக்கும்...(ரப் நே பனாடி ஜோடி விதிவிலக்கு) மற்றும்படி அவரது பெரிய வாயும்,சிரிப்பும் கூடவே அந்தக் குறும்பும் என்னை ஈர்த்துவிடுகின்றன..
படத்தை ஒரு எதிர்பார்ப்போடுதான் பார்த்தேன்...ஆனால் பார்க்கும்போதே படம் காமெடியை மட்டும் கொண்டு கொஞ்சம் கதையத் தூவியிருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது..
விவசாயத்தையே நம்பி வாழும் சமூகம் தங்கள் எஜமானானின் கீழ் கட்டுண்டு விடுதலைக்கு போராடுவது நகைச்சுவையோடு இணைந்து பயணிக்கிறது...கூடவே கொஞ்சம் காதல்..ஆனால் காட்சிகள்தான் இல்லை...
ஆனாலும் ஓரிடத்தில் இயக்குனரை பாராட்டியே ஆகணும்...கதாநாயகியை அறிமுகப்படுத்துகையில் எருமைகளோடு ஒரு குளத்தில் அறிமுகப்படுத்துவார் பாருங்கள்...அங்க இருக்கு...சாரோட திறமை...இப்படி இதுவரை எந்த இயக்குனரும் செய்திருக்கமாட்டார்...
நீண்ட கால இடைவேளையின் பின் பங்கஜ் கபூரை பார்த்தது அதுவும் காமெடியில் பார்த்தது நன்றாகவே இருந்தது..."ரோஜா" படத்தில் வில்லனாகப் பார்த்ததற்கும் இதில் வயோதிபராக பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு...அனாலும் ஷாகிட் கபூரின் அப்பாவா இவர் என்று வியக்கத்தான் முடிகிறது....
சபானா ஆஸ்மி இப்படித்தான் நடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாரா என்ன? ஒரு மாதிரியாகவே வந்து போகிறார்....
அனுஷ்கா ஷர்மாவிற்கு நிச்சயக்கிப்பட்ட அந்த மாப்பிளை லூசு நன்றாகவே காமெடியாகிருக்கிறது..அதைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது...
லேகா வாஷிங்டன் கௌரவத் தோற்றத்தில் தனக்கேயுரிய மேலைத்தேய எழிலில் கலக்கிவிட்டு சென்று விடுகிறார்...
காதலன் காதலி காதல் காட்சிகள் இழையோடாவிட்டாலும் ஒரு லிப் டு லிப் காட்சியை வைக்க மட்டும் தவறுவதேயில்லை இந்த பொலிவூட்காறர்கள்....
தயாரிப்பாளருக்கு செலவு கொஞ்சம்கூட வைக்கவே இல்லையே என்று இயக்குனர் கவலைப்பட்டிருப்பார் போல...அதனால் ஆபிரிக்கப் பழங்குடியினர் பன்னிரண்டு பேரை நன்றாக ஆடவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்...
கொஞ்சநேரம் சிரித்து மகிழலாம்..
####################################



.jpg)


.jpg)
.jpg)
1 comments:
welcome back boss. intha padam eppo release achu?
Post a Comment