Pages

Monday, December 12, 2011

Mr.Perfect - இவன் பெர்பெக்ட்தான்..

தெலுங்குப் படங்களிலும் எனக்கு ஆர்வம் இருக்கு...விரும்பிப் பார்ப்பேன்...தெலுங்கில் எல்லாமே ஆக்ஷன்தான் என்று சொல்றதுக்கில்ல..

அப்பப்போ அத்தி பூத்தாப்போல வேறுமாதிரியும் படங்கள் வந்திற்றுத்தான் இருக்கு...

மகேஷ் பாபுவால எனக்கு தெலுங்குப் படங்களில் ஆர்வம் வந்தது...

அப்புரி  ரவியின் படங்கள் பிடிக்கும்..காரணம் பொம்மரில்லு...

Mr.Perfect 


எல்லா விஷயங்களிலும் தான் பெர்பெக்ட் என்று நினைக்கும் நாயகன் விக்கி (பிரபாஸ்) 
எதற்காகவும் அனுசரிச்சுப் போகக்கூடாது, யாருக்காகவும் விட்டுக்கொடுத்தால் நாம் தோத்துத்தான் போவோம்....என்று நம்பி அதையே தன் பொலிசியாக வைத்திருக்கும் நாயகன்....அவுஸ்திரேலியாவில் சாப்ட்வேயார்எஞ்சினியர்..அவங்க அப்பா நாசர்...




தன் தங்கை திருமணத்திற்காக இந்தியா வாறார் ஹீரோ..
அவருக்கு அவரோட சின்னவயசு பள்ளித்தோழி (இப்போ டாக்டர்)ப்ரியா (காஜல் அகர்வால்)திருமணம் செய்து வைக்க விரும்புறார் அப்பா நாசர்...

சின்ன வயசிலே ப்ரியாக்கும்,விக்கிக்கும் ஒத்துவராது...
சண்டையில ஆரம்பிச்சு ஹீரோவும்,ஹீரோயினும் நட்பா பழகுறாங்க...ஹீரோயினுக்கு ஹீரோ மேல காதல் வருது..

விக்கிக்காக தன் விருப்பு,வெறுப்புக்கள மாத்திக்கிறாங்க...ஆனா அதுவே ஹீரோவே வெறுக்கவைக்கப்போகுதுன்னு அந்த அப்பாவிப்பொண்ணு க்கு தெரியல..சந்தோஷப்பட்டு திருமணத்த நிச்சயம் செய்ய பெற்றோர்கள் இருக்கும் நேரம்,தனக்கும் ப்ரியாக்கும் ஒத்துவராது என்று சொல்லி ப்ரியாவ மறுக்குறார் விக்கி..

அப்புறம் அவுஷ்திரேலியா போயிடுறார்...



கட்ஸ்பேரி சொக்லட் "மேட் போர் ஈச் அதர்" போட்டி வைக்கிறாங்க...

விக்கியும்,மகியும் (தாப்சி பன்னு) தெரிவாகிறாங்க.
மீட் பண்றாங்க..
காதலிக்கிறாங்க..

கல்யாணம் பண்ண இருக்கும் நேரம், உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு சொல்லி  மகியோட அப்பா(பிரகாஷ் ராஜ்)தடுக்கிறார்.

ஏற்கனவே பிரகாஷ் ராஜிற்கும்,அவர் நண்பர் ஷாயாஜி ஷிண்டேக்கும் விக்கியோடான முதல் சந்திப்பே மோசமா நடந்திருந்தது..ஒரு சாலெஞ் கொடுக்கிறார் பிரகாஷ் ராஜ்...விக்கி ஒத்துக்கொள்கிறான்...


விக்கி சலேஞ்சில் ஜெயித்தானா?மகியை மணந்தானா???விக்கியை காதலித்த ப்ரியாக்கு என்ன நடந்தது??? என்பதுதான் படம்....


########################
திருமணத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது விட்டுக்கொடுப்பு.....
ஒருத்தொருக்கொருத்தர் அனுசரிச்சுப்போறது...எல்லா விஷயங்களிலும் 
கணவன் மனைவி ரெண்டு பேருமே ஒத்துப்போக முடியாது...ஒரு தடவை கணவன் விட்டுக்கொடுத்தால்,மறுதடவை ஏதோவொன்றில் மனைவி விட்டுக்கொடுக்கணும்...ஒருத்தரே விட்டுக்கொடுத்துப்போனா அந்த வாழ்க்கை அர்த்தம் அற்றது...ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ்றதில்தான் வாழ்க்கையோட சுவாரசியமே அடங்கியிருக்கு...அதில்தான் அன்பும் பெருகுது....உங்க வாழ்க்கையில நீங்க இத உணர்ந்திருப்பிங்க...அல்லது உங்க பெற்றோர் வாழ்க்கையைப் பார்த்து தெரிஞ்ச்சிருப்பிங்க....


இந்தப் படமும் இததான் சொல்லுது.....

#########################

பிரபாஸ் -என்ன ஹைட்டு!!!!இவரோட ஹைட்டுக்கு காஸ்டியூம்ஸ் வேற சூப்பெரா.....கலக்குறார்....


காஜல் அகர்வால் - காஸ்டியூம் டிசைனர பாராட்டியே ஆகணும்...காஜல் அழகா இருக்காங்க...குளிர்ச்சியான அழகு....


தாப்சி பன்னு வழமையான பண்ணுதான்....


ஒளிப்பதிவு நல்லா இருக்கு....



பெண்களுக்கு பிடிச்ச படமாக இந்தப் படம் இருக்கும்...


Mr.Perfect - Perfect

#########################

1 comments:

arasan said...

சொல்லிட்டிங்க பார்த்துடுறோம்...
நல்ல தெளிவா சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

Post a Comment