ரொம்ப ஸ்பீடாத்தான் போகுது வாழ்க்கை.
ஒவ்வொரு நாளும் எப்பிடித்தான் ஓடுதோ தெரியல.நாமளும் அந்த ஸ்பீடிற்கேற்ப ஓடுறோம்.நம் வேலையும் ஓடுது.நேரமும் ஓடுது.வயசும் ஓடுது.ஓடி ஓடி ஓட்டம் முடிஞ்ச பிறகுதான் அந்த ஓட்டத்தின் வேகம் தெரியுது.சில நேரம் ஸ்ட்ரைட்டா போயிற்றே இருப்போம்.சில நேரம் திருப்பங்கள்,ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் எல்லாம் தாராளமா வந்து நம் வேகத்தைக்குறைக்கும்.எது எப்பிடியோ ஓடியே ஆக வேண்டிய சூழல்.நாமும் அததற்கு கட்டுப்பட்டோ கட்டுப்படாமலோ,விரும்பியோ விரும்பாமலோ ஓடிற்றே இருக்கிறோம்.எம் கால்கள் ஓயும்வரை..எம்மால் ஓட முடியும்வரை...
நாம் இளைஞர்கள்.எமெக்கென ஆசைகள்...விருப்பங்கள்...இலட்சியங்கள்...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமானவை.ஆனாலும் எல்லோருக்கும் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதோவொரு ஆசை இருக்கத்தான் செய்கிறது.அந்த ஆசை கொண்ட இலட்சியத்தை அடைய நாம் காலத்துடன் ஓட வேண்டியிருக்கிறது.எவ்வளவு விரைவாக ஓடுகிறோமோ அவ்வளவு சீக்கிரம் எம் வெற்றி எம் கையில்.கொஞ்சம் கால் வலிக்கிறதே என்று தாமதித்தாலும் அடுத்த ட்ரெயினுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.
காலம் ஓட ஓட எமக்கான வேகத்திலும் நாம் நிதானமாக இருக்க வேண்டும்.ஓவர் ஸ்பீடா ஓடி உடம்புக்கு ஏதாவது ஆனால் எமக்கான வெற்றியுடன் உடலும்,வாழ்க்கையும் கூட போய்விடலாம்.திட்டமிட்டு காய் நகர்த்தினால் நிச்சயம் முடியும்.ஒரு வயதிற்கு மேல் பெற்றவர்களுக்கு நாம் சுமையாக இருக்க முடியாது.எம் காலில் நாம் நின்று அவர்களின் சுமையை குறைக்க வேண்டும்.முடிந்தளவு அந்த சுமையை எம் தோள்களுக்கு எடுக்க வேண்டும்.பெற்ற நாள் முதல் எத்தனை கஷ்டங்களை சுமந்து எம்மை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.உயர்ந்த கல்வி தருவது அல்லது சிறப்பான கல்வி வசதியைத் தருவது அவர்களின் கடமையாக இருக்கலாம்.அந்தக் கடமையை நாம் முடித்ததும் எமெக்கென பல கடமைகள் காத்திருக்கின்றன.பிறகும் அவர்களையே கடமை செய்யே வைப்பது நல்ல மகனுக்கோ / மகளுக்கோ அழகல்ல.
ஆண்மகன்தான் பெற்றவர்களின் சுமையை தாங்க வேண்டும் என்றொரு கருத்தும் எம்மவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.ஏன்?பெண் பிள்ளையை அவர்கள் வருந்திப் பெறவில்லையா?உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளையே மிகவும் கஷ்டப்பட்டு பஞ்சு மெத்தையில் வருத்தம் தெரியாமல் வளர்க்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண் பிள்ளை என்ன செய்கிறது?படித்து முடித்து,ஒரு தொழிலையும் எடுத்துக்கொண்டு பெற்றவர்களைப் பார்க்க அண்ணா அல்லது தம்பி இருக்கிறான்தானே என்ற நினைப்பில் அழகாக திருமணம் செய்து கொண்டு தனக்கான குடும்பத்தை சீக்கிரமே அமைத்துக் கொள்கிறது.தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அந்தப் பெற்றோரை கொஞ்ச காலம் சுகமாக வைத்துப் பார்க்காமல் அவர்களுக்கு சீதனம் எனும் பெரிய சுமையை கொடுத்து திருமணத்தை ஏற்கிறது.ஆனால் ஆண்பிள்ளை பிள்ளையாக இருக்கிறான்.
ஆண் / பெண் எனும் வேறுபாடு இதில் தேவையென எனக்குத் தெரியவில்லை.நமக்கான சுகங்களை நாம் அனுபவிக்கும் போது கஷ்டப்பட்ட நம் பெற்றோரை சுகப்படுத்த வேண்டியது நம் கடமை.அதில் ஆணென்ன?பெண்ணென்ன?எம்மால் உழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்த பிறகும் தகப்பன் காசில் உண்ணுவது உண்மையில் பெருமைக்குரியதல்ல.பிள்ளைதானே என்று தகப்பன் தரலாம்.ஆனால் செலவழிக்கும்போது நமக்கு கூசாது?சமூகக் கட்டுக்கோப்பில் திருமணம் இதில் தடை போடுகிறதே என்று சொல்வதில் நியாயம் இல்லை.நீ நினைத்தால் முடியாததில்லை.முயற்சி செய்.
பெற்றவர்களே எமக்கு உண்மையில் கடவுள்கள்.உயிர் தந்து,உடமை தந்து,கல்வி தந்து,வாழ்க்கையும் தருகிறார்கள்.எமெக்கென தம் சுக துக்கங்களை மறந்து கஷ்டப்படுபவர்கள்.தம் உயிரைக்கொடுத்தேனும் எம்மை வாழ வைக்க முயற்சிப்பவர்கள்.அவர்களை பாதுகாப்பது எம் கடமையில்லையா?அவர்களை சுகமாக வாழ வைப்பது எமக்குரிய பொறுப்பில்லையா?அளவில்லா சொத்துக்களையும்,சுகங்களையும் தந்த நம் தாய்,தகப்பனுக்கு சந்தோஷத்தை கொடுப்பது எம் பொறுப்பில்லையா?அண்ணா செய்வான்.தம்பி பார்த்துக்கொள்வான் என்று நினைத்து நீ பாவத்தை தேடிக்கொள்ளாதே.அவங்களுக்கு நான் மணமாகி,பிள்ளைகளுடன் இருப்பதே சந்தோஷமாம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டு வாழ முயற்சிக்காதே.குடும்பம் உனக்குத்தேவைதான்.பெற்றோரைக் காட்டிலும் அப்படியொரு தனிப்பட்ட குடும்பம் தேவைக்குரியதல்ல.விருப்பத்திற்குரியதும் அல்ல.
உனக்காக நீ வாழ்..உன் பெற்றோருக்காக வாழ்.

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி வாழ்.அவர்களின் ஆசியோடு,அவர்கள் கால் நிழலில் உன் பாதுகாப்பில் வாழ வை.
நல்ல மகளாக வாழ்!நல்ல மகனாக வாழ்!
4 comments:
nice & i want more
ஆண் பெண் என்ற வேறுபாடு இதில் மட்டும் பார்க்க கூடாது என்பது சரியான வாதம் அல்ல, இன்றைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளிலும் பெண்கள் வெற்றிகரமாக வெளி வருகின்றனர்..
@prakalathan
நன்றி
@suryajeeva
ஆனாலும் கட்டுப்பாடுகள் இருக்கிறதே..
Post a Comment