பெண் ஒரு மென்மையான ஜென்மமாக பலராலும் நோக்கப்பட்டாலும் அந்த மென்மைக்குள் எத்தனை துயரங்களும்,கண்ணீர்க்கறைகளும்,வாய்விட்டு கூறமுடியா,அழமுடியா சம்பவங்களும் சமாதியாகியிருக்கின்றன என்று யாருக்குமே தெரிவதில்லை.ஒரு பெண்ணின் ஜனனம் இன்னொரு பெண்ணின் அழுகையிலே ஆரம்பிக்கிறது.அதே போல மற்றயவளின் துயரம் ஆரம்பமாகிறது.பெண் வெளிப்படையாக அழுவாளோ இல்லையோ மனசுக்குள் அவள் நிச்சயம் அழுவாள்.அவளின் தலையணை ஈரமே அவளின் சோகத்திற்கு சாட்சி சொல்லும்.
பிறந்தபோது எதுவுமே தெரியாமல் விளையாட்டோடும்,சிரிப்போடும் நகரும் நாட்கள்தான் அவளின் சிறந்தநாட்களாக இருக்க முடியும்.ஆனால் என்ன அந்த நாட்கள் அவளின் நினைவுகளில் நிற்பது அதிசயமே.அதன் பிறகு அவள் வாழும் நாட்கள் கொஞ்சம் சிக்கலானவையே.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.பள்ளிப்பருவத்திலிருந்து கட்டுக்காவல்களுடன் அவள் வாழ்க்கை நகர்கிறது.தகப்பனின் கட்டுப்பாட்டிற்கு கடமைப்பட்டவளாக அவள் வாழ்கிறாள்.குடும்பம் அதன் குலம்,கோத்திரம்,சம்பிரதாயம் என்பவற்றிற்கு அடங்கியே அவளின் ஆசைகளும்,வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.அண்ணா,தம்பி போன்ற உறவுகளும்கூட அவளின் இலட்சியங்களில் விளையாடுகின்றன.அக்கா,தங்கை உறவுகள் அவளின் வாழ்க்கையிலே காய் நகர்த்துகின்றன அவர்களும் பெண்ணாக இருந்தும்.

அந்தக் காவலிலிருந்து வெளியேறினால் அது இன்னும் கொஞ்சம் சிக்கலுக்குரிய கடமைகள் கூடிய காவலைத் தருகிறது.திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.சொர்க்கங்கள் நரகங்களைத் தராவிட்டாலும் சுமைகளை நிச்சயம் தந்தே தீரும்.ஒரு குழந்தையாக,சிறுமியாக,யுவதியாக வாழும் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது மனைவியாக வாழும் வாழ்க்கை.மனைவியாக வாழும்போது அவள் கட்டுப்படவேண்டிய நபர்களும்,நிகழ்வுகளும் அதிகம்.ஓய்வற்ற,தூக்கமற்ற,நிம்மதியற்ற வாழ்க்கை அவளின் தலையெழுத்து.
என்ன இது?எல்லாருக்கும் இதேதானே எழுதப்பட்ட வாழ்க்கை.இவங்க என்ன இப்பிடி புலம்புறாங்க என்று நீங்கள் யோசிக்கலாம்.ஏன்?இவங்க சந்தோஷமா இல்லையா என்றும் யோசிக்கலாம்.எல்லோரும் இதைத்தானே சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்கலாம்.ஆனால் ஒரு சின்ன சம்பவம் அவளின் வாழ்க்கையின் முறையை,கடமையை யோசிக்க வைக்கலாம்.அல்லது வாழும் வாழ்க்கையை விளங்க வைக்கலாம்.சோகம் இல்லாத மங்கை நிச்சயம் அதிஷ்டம் செய்தவள்.
பெண் காவலில் வாழ்வது அவளின் பாதுகாப்புக்கருதியே.அவளின் மணவாழ்வு அவள் விரும்பி ஏற்றுக்கொள்வதே.தாயெனும் புனித ஸ்தானத்தை அவளுக்கு கொடுப்பது அந்த மனைவியெனும் பதவியும்,அதன் வாழ்க்கையுமே.தந்தை,அண்ணா,தம்பி என ஒரு வேலிக்குள் வாழ்ந்த அவளை பின்னர் பாதுகாப்பது கணவன் எனும் காவலனே.எல்லாம் சரி.எல்லாம் தீர்மானிக்கப்பட்டவை.எல்லாம் நிதர்சனமான உண்மைகள்.ஆனால் என்ன?பெண்ணைப்பற்றி கொஞ்சம் மற்றையவர்கள் யோசிக்கலாம்,அவளின் ஆசைகளையும்,சுதந்திரங்களையும் கருத்தில் கொள்ளலாம்.பெண்ணின் கடமைகளில் கொஞ்சத்தை பொறுப்பேற்கலாம்.கொஞ்சம் நிம்மதியாக சுவாசிக்கவிடலாம்.
உரிமைகளையும்,சுதந்திரங்களையும் பேசுபவர்கள் கடமைகளை செய்யத்தானே வேண்டும் என்று எல்லோரும் கேட்கலாம்.கேள்வி நியாயமானதே.கடமைகளின் கஷ்டத்தை உணர்ந்தவராக நீங்கள் இருந்தால் பேசமாட்டீர்கள்.
0 comments:
Post a Comment