Pages

Thursday, December 22, 2011

உதட்டாலே உழைப்பாஆஆஆ!

ஒரு சிலருக்கு எல்லாமே அழகா இருக்கும்...சிலருக்கு ஏதாவது அழகாக சிறப்பா இருக்கும்....சிலர் எல்லாவற்றையும் அழகா மாத்திப்பாங்க...இதில் எல்லாவற்றிற்கும் பொருத்தமானவர் பிரியங்கா சோப்ரா....



 பொலிவூட்டை கலக்கிகொண்டிருக்கும் இந்த நடிகை நம்ம தமிழில்தான் அறிமுகமானாங்க..

"தமிழன்" படத்தில நாட்டுக்கட்டையா வந்து இழிச்சிட்டுப்போன இந்த பிரியங்காவை அப்போ எவனுமே கண்டுக்கிட்ட மாதிரி தெரியல...

இப்போ பிரியங்காவிற்கு அஞ்சலினா ஜோலியவிட ரசிகர்கள் அதிகம்..ஏன்னு கேக்கமாட்டிங்கன்னு தெரியும்...

ஆனாலும் தெரியாத அப்பாவிங்களுக்காக சொல்லிக்கிறன்...ஏன்னா அவங்க உதட்டுக்கு அப்பிடி டிமாண்டாம்...உதட்டழகியா வலம் வந்த அஞ்சலினா ஜோலிய இப்பெல்லாம் காணவே முடியல..ஆனா பிரியங்கா கலக்கிட்டிருக்காங்க... (உதட்டிலையே அழகியாமில்ல....)



 2000ஆமாம் ஆண்டின் உலக அழகி...

(உலகழகியா இருந்தப்ப இவங்க அப்பிடியொரு அழகியா இருக்கல்ல..அவங்களுக்கு அப்பிடியொரு ரசிகர்கூட்டமும் இருக்கல..)

எல்லா நடிகைகளையும் போலவே சில வருடங்களில் தன்னை ரொம்பவும் அழகா மாத்திக்கிட்டாங்க பிரியங்கா...எப்பிடி இவங்களால மட்டும் இப்பிடியெல்லாம் முடியுதோ?
(சொன்னா நாங்களும் ஜொலிச்சிடுவம்னு பொறாமைதான்....)

தன் சினிமா மார்க்கெட்டையும் மாத்திக்கிட்டாங்க..மாறுபட்ட வேடங்களில் நடிக்க தொடங்கினாங்க..முன்னணியில் வந்துகொண்டிருந்த கரீனா கபூரை ஒரு சில இடைவெளியில் முந்திக்கொண்டாங்க.



 எனக்கு அப்பெல்லாம் பிரியங்காவை பிடிக்காது..

 "அஞ்சானா அன்ஜானி" பார்த்தப்போ ரொம்பவும் அழகா இருந்தாங்க..
ரன்பீரை விட்டிற்று பிரியங்காவையே பார்க்கவச்சாங்க..

அதுவரைக்கும் குட்டைப் பாவாடைனா அது ஜெனிலியாவிற்கு மட்டுமே அழகு என்பது என் எண்ணம்..ஆனா பிரியங்காவிற்கும் அது அழகுதான் என்பது அப்போ தெரிஞ்சுது...

ரொம்பவும் மெலிஞ்சு போய் சைஸ் ஜீரோ கணக்கில் சின்னப்பொண்ணா கொள்ளை அழகா இருந்தாங்க பிரியங்கா சோப்ரா..
(எத்தனை நாளைக்குத்தான் பசங்களையே பாக்கிறது????)



முக்கியமான ஹீரோக்களோடு எல்லாம் டூயட் பாடிய பொண்ணா மாறினாலும் சாஹிட் கபூருடன்தான் நிஜமாவே டூயட் போட ஆசைப்படுறாங்க..
(ஆனா அவரு ரொம்ப பொண்ணுங்களோட டூயட் போடுபவரு.....பாவம் பிரியங்காஆஆ)

இவங்க இப்போ பணக்கார பொலிவூட் நடிகை..பொலிவூட் நடிகைகளில் அதிக வருமான வரி கட்டும் நடிகைன்னா இவங்கதானாம்..

(எப்பிடில்லாம் காட்டிக்காட்டி உழச்சதோ???சாரி..கட்டிக்காத்து உழச்சதோ....அநியாயமா கட்ட வேண்டியிருக்கு...)


இவங்க உதட்டைப்போலவே இவங்க கூந்தலுக்கும் டிமாண்ட் இருக்கு...அதனாலே விளம்பரங்களிலும் ஜொலிக்கிறாங்க...


விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஜெனிலியா,அசின்,பிரியங்கா மூணுபேருக்குமிடையில் கூந்தலில் ஒரு பனிப்போர் நடக்குதோ??
(நம்ம கீரக்கட்டுகள????ம்ஹ்ம்!!!!!)




ஆனா புடவையில் இவங்களை பார்க்கும்போது கொஞ்சம் அழகு குறைவாவே இருக்குது.....மற்றைய நடிகைகளுக்கு புடவையில் கிடைக்கும் வரவேற்பைவிட இவங்களுக்கு  கொஞ்சம் குறைவுதான்...

(யாருக்கும் அப்பிடி தோணுது???)


இப்போ "டான் -2" இவங்களின் புது வரவு...இன்றைக்கு ரிலீசாகுது...

ஆனா இந்தப்படத்தை நான் ஷாருக் கானிற்காகத்தான் பார்க்கப்போறன்.......நீங்க????

அதிலும் அழகாக இருக்காங்க...இவங்க நடிக்கிற நடிகையான்னு எனக்கு தெரியல...? (அதெல்லாம் எங்க நாம பாக்கிறம்????)

எப்பிடி இருக்காங்க...என்ன உடுக்கிறாங்க..என்ன ஹெயார் ஸ்டைல்....இதுதானே நமக்கு தேவ???என்ன நான் சொல்றது???

(பசங்கள பத்தி தெரியலப்பா)

ரொம்ப நல்லா பாடுவாங்களாம் பிரியங்கா...

தமிழனில் பெரிசா எடுபடல்ல.. அதிலும் கவனம் செலுத்தினால் அப்புறம் நீங்க ராணிதான் போங்க!




எப்பிடியோ கட்டிக் காத்து?? / காட்டிக் காத்து???வாழட்டும்.....



பிரியங்காஆஆ  சோப்ராஆஆ!!!!!!



######################################

Tuesday, December 13, 2011

Zindagi Na Milegi Dobara - ஹிந்தி விமர்சனம்

ஹிர்திக் ரோஷன பிடிக்காத பொண்ணுங்க ரொம்பவும் குறைவாத்தான் இருப்பாங்க.எனக்கும் ஹிர்திக்க ரொம்பப் பிடிக்கும்..

ஹிர்திக் ரோஷனோட எல்லாப் படங்களும் பார்த்தாலும் நான் ரொம்ப விரும்பிப் பார்த்தது "ஜோதா அக்பர் "....ரொம்பவும் நல்ல படம்..

ஹிர்திக்கோட டான்ஸ் மற்றும் அந்த மேனரிசத்திற்காகவே ஒரு கூட்டம் இருக்கு...

இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானது...


Zindagi Na Milegi Dobara 



மூன்று நண்பர்கள் - பள்ளித் தோழர்கள் ..
 (ஹிர்திக் ரோஷன் - அர்ஜுன் ,அபய் தியோல் -கபீர், பார்ஹான் அக்தர் -இம்ரான்)

மூன்று பெரும் மூன்று இடத்தில்....மூணு பேருமே ஒன்றாய்  ட்ரிப் போகணும்கிறது இவங்களோட ஆசை...


நாலு வருசத்திற்குப் பிறகு அந்த ஆசை நிறைவேறுது..

கபீர் நடாசாவ நிச்சயம் பண்றாரு...அப்புறமா பச்சிலர் ட்ரிப் ஒன்னு ஸ்பெயினுக்குப் போக அர்ஜுன கூப்பிடுறார்....

வேலை...வேலை..பணம்...பணம்னு லண்டனில் பிசியா வாழும் பினான்சியல் ப்ரோக்கர் அர்ஜுன் முதலில் மறுத்தாலும் அப்புறம் ஓகே சொல்றார்...மூணு பெரும் ஸ்பெயினுக்கு போறாங்க...ரொம்பவும் என்ஜாய் பண்றாங்க...


அந்த ட்ரிப்பில் ஒருத்தர் அவருக்கு விருப்பமான திரிலிங் விளையாட்ட தெரிவு செய்வாரு....அத மற்ற இரண்டு பெரும் கட்டாயம் விளையாடனும்..இது அவங்க பள்ளிக்காலத்தில எடுத்த முடிவு...

கபீர்(அபய்) சீ டைவிங் தெரிவு செய்வார்..
தண்ணினாலே அர்ஜுனுக்கு(ஹிர்திக்) பயம்...

அதனால ஒரு டைவிங் இன்ஸ்ட்ரக்டர தெரிவு செய்வாங்க...அவங்கதான் ஹீரோயின் கத்ரீனா கைப்(லைலா).

லைலாவால டைவிங்க காதலிக்குராறு ஹிர்திக்.. 


இதுக்கிடையில் ஸ்கைப்பில் அபய்,நடாசாக்கூட பேசும்போது....அங்கு லைலா வர....அவங்க காதலில் பிரச்சினை வருது....உடனே நடாஷா ஸ்பெயின் வந்திடறாங்க...அப்புறம் அவங்க ட்ரிப் அவ்வளவுதான்...


இப்பிடியா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான விளையாட்டை தெரிவு செய்ய மற்றவங்க அத எப்பிடி சமாளிக்கிறாங்க என்றதும்....அந்த பாச்சிலர்ஸ் ட்ரிப்பில் அவங்க என்ன விதமான பிரச்சனைகளை சமாளிக்கிறாங்க என்றதும்தான் படம்...ரொம்ப சுவாரசியமா நகரும் கதையில் காமெடிக்கு பஞ்சமே இல்லை..

இந்த ட்ரிப்பில் வாழ்க்கைய ஈசியா வாழற லைலாக்கும்,பணம்..பணம்னு வாழற ஹிர்திக்கும் காதல் வந்திருது......அதுவும் வித்தியாசமாவே வருது....


பரபரப்பான நேரம் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறாங்க....

ஹிர்திக் ரோஷன்,அபய் தியோல்,பார்ஹான் அக்தர் கூட்டணி செம கலக்கல்....
ஆரம்பத்தில் ஹிர்திக்,இம்ரான வெறுக்கும் காட்சிகள் ஹிர்திக்கின் பணத்திமிர் என்று நினைத்தால் அப்புறம் அதற்கு வேறு ஒரு நியாயம் வந்து கிடைக்குது...படம் பார்க்கும்போது  நமக்கும் ஊர் சுத்தக் கிளம்பனும்னு ஆசை வருவதை தடுக்க முடியல..


ஸ்பெயினோட அழகை அழகா காடியிருக்காங்க...


டோமாட்டினோ பெஸ்டிவெல்(தக்காளித் திருவிழா),
அப்புறமா புல் ரன்(காளைச்சண்டை) என்று ஸ்பெயின் களை கட்டுது...


ஹிர்திக் அழகா தன் வேலைய செய்றார்...சீ டைவிங் காட்சிகளில் அழகு..


ஸ்கை டைவிங் காட்சிகளும்,இம்ரானின் நடிப்பும் நல்லாவே இருக்கு...
இம்ரான் அந்த விலை கூடின ஹான்ட் பாக்கிற்கு பார்வதின்னு பேர் சொல்லி லைலாக்கு அறிமுகப்படுத்துவது கல கல...


கத்ரீனா கைப் -எப்ப பாரு அந்நியமுகமாய்...
இங்கும் பாதி அமெரிக்கன்..பாதி இந்தியனாவே காட்டப்படுறாங்க...ஆனாலும் கதைக்கு பொருத்தமான தெரிவு....


ஸ்பெயின் பொண்ண இம்ரான் காதலிக்கும் காட்சிகளில் நல்லாவே சிரிக்க முடியுது....


இப்பெல்லாம் ஹொலிவூட்டின் ஆதிக்கம் பொலிவூட்டில் ரொம்ப ரொம்ப ரொம்பவும்தான்....இங்கும்....
நம்ம தமிழ் சினிமாவிலே உதட்டோடு உதடு முத்தம் சிம்பிளா வந்திட்டுப்போகுது....

கமல் கண்டெடுக்க சிம்பு தொடர்கிறார்....குடும்பத்தோடு பார்க்கமுடியாத சீன்கள நிறையப் பேர் செய்றாங்க....
இதில் சூர்யாக்கு என்னவோ முதல் இடம் கொடுக்கலாம்...
கவுதம் மேனன் நல்ல இங்கில்ஷ் பேச வைக்கிறார்....நல்லா கொண்டு போறாங்க.......

ஆங்கில மோகம் இருந்தது மாறி ஆங்கில வாழ்க்கையே இப்போ வந்தாச்சு.....




.
முடிவில் அர்ஜுன் - லைலா திருமணத்தில் நிறைவுறுகிறது படம்...


மொத்தத்தில் யூத்துக்கள் விரும்பிப் பார்க்ககூடிய படம்.....


ஜாலியான பாச்சிலர்ஸ் ட்ரிப்பிற்கு நீங்களும் தயாராகலாம்....
################################################

Monday, December 12, 2011

Mr.Perfect - இவன் பெர்பெக்ட்தான்..

தெலுங்குப் படங்களிலும் எனக்கு ஆர்வம் இருக்கு...விரும்பிப் பார்ப்பேன்...தெலுங்கில் எல்லாமே ஆக்ஷன்தான் என்று சொல்றதுக்கில்ல..

அப்பப்போ அத்தி பூத்தாப்போல வேறுமாதிரியும் படங்கள் வந்திற்றுத்தான் இருக்கு...

மகேஷ் பாபுவால எனக்கு தெலுங்குப் படங்களில் ஆர்வம் வந்தது...

அப்புரி  ரவியின் படங்கள் பிடிக்கும்..காரணம் பொம்மரில்லு...

Mr.Perfect 


எல்லா விஷயங்களிலும் தான் பெர்பெக்ட் என்று நினைக்கும் நாயகன் விக்கி (பிரபாஸ்) 
எதற்காகவும் அனுசரிச்சுப் போகக்கூடாது, யாருக்காகவும் விட்டுக்கொடுத்தால் நாம் தோத்துத்தான் போவோம்....என்று நம்பி அதையே தன் பொலிசியாக வைத்திருக்கும் நாயகன்....அவுஸ்திரேலியாவில் சாப்ட்வேயார்எஞ்சினியர்..அவங்க அப்பா நாசர்...




தன் தங்கை திருமணத்திற்காக இந்தியா வாறார் ஹீரோ..
அவருக்கு அவரோட சின்னவயசு பள்ளித்தோழி (இப்போ டாக்டர்)ப்ரியா (காஜல் அகர்வால்)திருமணம் செய்து வைக்க விரும்புறார் அப்பா நாசர்...

சின்ன வயசிலே ப்ரியாக்கும்,விக்கிக்கும் ஒத்துவராது...
சண்டையில ஆரம்பிச்சு ஹீரோவும்,ஹீரோயினும் நட்பா பழகுறாங்க...ஹீரோயினுக்கு ஹீரோ மேல காதல் வருது..

விக்கிக்காக தன் விருப்பு,வெறுப்புக்கள மாத்திக்கிறாங்க...ஆனா அதுவே ஹீரோவே வெறுக்கவைக்கப்போகுதுன்னு அந்த அப்பாவிப்பொண்ணு க்கு தெரியல..சந்தோஷப்பட்டு திருமணத்த நிச்சயம் செய்ய பெற்றோர்கள் இருக்கும் நேரம்,தனக்கும் ப்ரியாக்கும் ஒத்துவராது என்று சொல்லி ப்ரியாவ மறுக்குறார் விக்கி..

அப்புறம் அவுஷ்திரேலியா போயிடுறார்...



கட்ஸ்பேரி சொக்லட் "மேட் போர் ஈச் அதர்" போட்டி வைக்கிறாங்க...

விக்கியும்,மகியும் (தாப்சி பன்னு) தெரிவாகிறாங்க.
மீட் பண்றாங்க..
காதலிக்கிறாங்க..

கல்யாணம் பண்ண இருக்கும் நேரம், உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுன்னு சொல்லி  மகியோட அப்பா(பிரகாஷ் ராஜ்)தடுக்கிறார்.

ஏற்கனவே பிரகாஷ் ராஜிற்கும்,அவர் நண்பர் ஷாயாஜி ஷிண்டேக்கும் விக்கியோடான முதல் சந்திப்பே மோசமா நடந்திருந்தது..ஒரு சாலெஞ் கொடுக்கிறார் பிரகாஷ் ராஜ்...விக்கி ஒத்துக்கொள்கிறான்...


விக்கி சலேஞ்சில் ஜெயித்தானா?மகியை மணந்தானா???விக்கியை காதலித்த ப்ரியாக்கு என்ன நடந்தது??? என்பதுதான் படம்....


########################
திருமணத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது விட்டுக்கொடுப்பு.....
ஒருத்தொருக்கொருத்தர் அனுசரிச்சுப்போறது...எல்லா விஷயங்களிலும் 
கணவன் மனைவி ரெண்டு பேருமே ஒத்துப்போக முடியாது...ஒரு தடவை கணவன் விட்டுக்கொடுத்தால்,மறுதடவை ஏதோவொன்றில் மனைவி விட்டுக்கொடுக்கணும்...ஒருத்தரே விட்டுக்கொடுத்துப்போனா அந்த வாழ்க்கை அர்த்தம் அற்றது...ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ்றதில்தான் வாழ்க்கையோட சுவாரசியமே அடங்கியிருக்கு...அதில்தான் அன்பும் பெருகுது....உங்க வாழ்க்கையில நீங்க இத உணர்ந்திருப்பிங்க...அல்லது உங்க பெற்றோர் வாழ்க்கையைப் பார்த்து தெரிஞ்ச்சிருப்பிங்க....


இந்தப் படமும் இததான் சொல்லுது.....

#########################

பிரபாஸ் -என்ன ஹைட்டு!!!!இவரோட ஹைட்டுக்கு காஸ்டியூம்ஸ் வேற சூப்பெரா.....கலக்குறார்....


காஜல் அகர்வால் - காஸ்டியூம் டிசைனர பாராட்டியே ஆகணும்...காஜல் அழகா இருக்காங்க...குளிர்ச்சியான அழகு....


தாப்சி பன்னு வழமையான பண்ணுதான்....


ஒளிப்பதிவு நல்லா இருக்கு....



பெண்களுக்கு பிடிச்ச படமாக இந்தப் படம் இருக்கும்...


Mr.Perfect - Perfect

#########################

ஒஸ்தி - இது நாஸ்தி....

ரொம்ப பில்டப்புடன் ஒட்டுமொத்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளிவந்த படம்தான் இந்த ஒஸ்தி.சிம்பு போலிஸ் வேடம் ஏற்று நடிக்கும் படம் என்பதும்,தரணியின் இயக்கம் என்பதும்,ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான "டபாங்" படத்தின் ரீமேக் என்பதும் படத்தின் மேல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.மல்லிகா ஷெராவத்தின் கலசலா ஆட்டத்திற்காகவே யூத்துகள் பெரிதும் எதிர்பார்த்த படம் இந்த ஒஸ்தி.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் அந்த எதிர்பார்ப்பிற்கு மரியாதை இருக்காதே?

அதனாலேயே ஒஸ்தி மாமு சறுக்கிடிச்சு மாமு!!!!!!!!!!!!!!!!


கொஞ்சமே லாஜிக் இல்லாத இந்த ஒஸ்தி எனெக்கென்னவோ காமெடிப்படம் மாதிரியே இருந்துச்சு...டைரெக்டர் தரணிக்கு இப்போ என்னதான் ஆச்சு..சிம்புவ கோவிச்சு பயனில்ல.அவருக்கு மல்லிகாவையும்,ரிச்சாவையும் பார்க்கவே நேரம் சரியா இருந்திருக்கும்...டிரெக்டர் சார் யார பாக்குறாரு??

(ஆரம்பத்திலே இப்பிடி சொன்னா நீங்க பின்னாடி வாசிப்பிங்க??அவ்வ்வ்வ்!!!)


ரேவதியோட பையன் சிம்பு..நாசரோட பையன் ஜித்தன் ரமேஷ்...சிம்புக்கு ரமேஷ் தம்பி..இப்போ சிம்புக்கு நாசர் என்ன முறை?
அப்பா....ஐ மீன் ரேவதியோட செகண்ட் ஹஸ்பன்ட்தான் நாசர்..

சிம்புவிற்கு அப்பா நாசரையும் தம்பி ரமேஷையும் பிடிக்காது...அந்தப்பக்கமும் அப்பிடியே...எப்பபாரு சண்டை சச்சரவு...இவங்க சண்டையில ரேவதி பாடு திண்டாட்டம்தான்...

சின்ன வயசில நல்ல புள்ளையா இருந்த ரமேஷ் உருப்படாம நிர்மலா( சரண்யா மோகன்)பின்னாடி சுத்தி திரியுறாரு...தறுதலையா இருந்த சிம்பு இன்ஸ்பெக்டர் ஆகிடுறார்...

அப்புறம் டண்டணக்கா.....டனக்க நக்கா.......


பொக்செர் சோனுசூட் இடைத்தேர்தலில் ஜெயிக்க தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்றாரு..அதை ஒஸ்திவேலன் முறியடிக்கிறாரு...

ஒஸ்திவேலன ஜெயிக்கிறதுக்காக அண்ணன் -தம்பி சண்டையில மூக்கை நுழைத்து எரியிற எண்ணெயில நெருப்பை மூட்டிவிடுராறு சோனுசூட்..

அப்புறம் வழக்கமான திருந்தல் படலம்தான்....


எல்லாம் ஓகே...ஹீரோயின விட்டுட்டிங்களே என்று யாரவது கேட்டால்??
ஹீரோயின் ரிச்சா...அதிஸ்டக்காரப்பொண்ணு..."மயக்கம் என்ன" தனுஷ் ஹீரோயின் என்றதாலே சிம்பு தன் பக்கம் இழுத்துக்கிட்டாரு...பொண்ணுக்கு இடுப்ப காட்டுறதுதான் வேலை...கொடுத்த வேலைய நல்லா காட்டி  காட்டி  காட்டி செய்திருக்கு...
வேற என்ன?பார்க்க அழகாவும் இருக்கு...உதடும்,கண்ணும் பிளஸ்தான்..பொளச்சுக்கும்......

தனுஷ்கூட நடிச்ச பொண்ணு இங்க நாலுவார்த்தை பேசிட்டுப் போகுது...


படத்தில பிடிக்காத விஷயங்கள் ஒண்ணா ரெண்டா சொல்றதுக்குக்கு..இருந்தாலும் சிலது...

சிம்பு ஒரு லா....போட்டா போதாதா..எத்தனை லா....எரிச்சல்தான் வருது....
சில நேரம் அவருக்கேயுரிய வில்லங்கமான பேச்சுக்களுக்கும் குறைவில்ல..ஸ்ட்ரிக்டான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு பதிலா சிரிப்பு போலீசா நடிச்சிருக்கிறாரு...முடில...

ஜித்தன் ரமேஷ்...இன்னும் அப்பிடியே.....பையனுக்கு நடிப்பு வருமா வராதா?கொஞ்சமும் நடிச்ச மாதிரியே தெரியல...இனி இப்பிடிஎதும் மொக்க சான்ஸ் வந்தாதான் உண்டு....

சந்தானம் நகைச்சுவையில் மட்டுமே படம் ஓடியிருக்கு...அதிலும் சில இடங்களில் முடியலடா டேய்.....கவுண்டமணிய பின்பற்றுறார்..


வாடி வாடி என் கியூட் பொண்டாட்டி பாட்ட ரொம்ப எதிர்பார்த்தா......
(யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டர்???)


சிம்பு வழமை போலவே ஹீரோயின ரொம்ப ரசிச்சிருக்காரு.....



கலசலா ரொம்ப முக்கியமான பாட்டுன்னு மல்லிகாக்க்கு கோடிக்கணக்கில கொடுத்து ஆடவச்சா....
இந்தப்பாட்டுக்கா அந்த பில்டப்பு....(முடியலடா சாமி..)
ஆனாலும் சிம்புக்கு ரொம்ப நல்ல மனசு...வில்லனோட மல்லிகாவ ஆடவைக்க ஒரு நல்ல மனசு வேணாமா?


ஆனாலும் காக்கி யூனிபோர்ம இப்பிடி கேவலப்படுத்தியிருக்கவேணாம்....


ரிச்சா அப்பா எதுக்கு செத்துப்போறாரு??இப்பிடில்லாம பொண்ணுங்க அப்பாக்கள சாகடிக்கப்போறானுங்க???(நல்லா யோசிக்கிறாங்கப்பா...)


சிம்பு கண்ணாடிய சேர்ட் கொலருக்கு பின்னாடி மாட்டியிருப்பதும்,அதுக்கு சொல்ற ரீசனும் ரொம்ப ஓவருஊஊஊஊ....

விஜயகுமார் வந்திட்டுப் போறாரு...நிறையப் பேரு வந்து வேஸ்டாகியிருக்காங்க...(பாவம் பய புள்ளைக......நம்பி ஏமாந்திட்டுதுக...)

சிம்பு தனுஷோட நல்லுறவ விரும்பிறாரா???இல்ல கிண்டல் பண்றாரா??
"யாத்தே யாத்தே " பாடல் வருது...ரமேஷ் அந்தப் பாட்டுக்கு ஆடுறது என்ன??..(ஏதும் காமெடி பண்றாரோ???)





ரேவதி -எப்பிடி இருந்த ரேவதி இப்பிடியிருக்காங்க?பாவம்...ரொம்ப மோசமான மாதிரி இருக்கு...நாசர் - சிம்பு  சீன் டச்சிங்....
இந்தப் படத்தில ஹீரோயின் ரிச்சா இடுப்புல ஒரு தங்கக் கயிறு மாதிரி கட்டியிருப்பாங்க..


நம்ம சில்க் சுமிதா இத அப்பவே கட்டிற்றாங்க...இப்ப ஹிந்திலகூட இந்த பாஷன் வந்திருச்சு...இனி நம்ம பொண்ணுங்ககிட்டையும் பாக்கலாம் போல...



சிம்புவ பொதுவா பொண்ணுங்களுக்கு பிடிக்காது..."விண்ணைத் தாண்டி வருவாயா" வில் நல்ல பிள்ளையாகி சிலர் மனதில் இடம் பிடித்தார்...
இப்போ மறுபடியும் புத்திய காட்டிற்றார்...அவரா இவரு???இவரா அவரு???


மொத்தத்தில் ஒஸ்தி நாஸ்தி....


#######################

Tuesday, December 6, 2011

Mere brother ki dulhan -ஹிந்தி விமர்சனம்


Mere brother ki dulhan 


"ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்" தான் நான் பார்த்த இம்ரான் கானின் முதல் படம்.அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது..இம்ரான் கானின் கியூட்னசும் பிடிச்சிருக்க இந்தப் படத்தை பார்க்கும் ஆவல் வந்து படத்தையும் பார்த்திட்டன்..


குஷ் அக்னிஹோத்ரி ஒரு அசிஸ்டன்ட் டிரெக்டர்(இம்ரான் கான்).
லவ் அக்னிஹோத்ரி (அலி சபார்)லண்டனில் வாழும் இந்தியன்..

லவ் மற்றும் பியாலிக்கிடையிலான (டாரா டீ சோசா)ஐந்து வருட காதல் ப்ரேக் அப்ஆக லவ் இந்தியப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பி பொறுப்பை தம்பி குஷ்ஷிடம் ஒப்படைக்கிறார்..

குஷ் அண்ணன் லவ்வுக்கு பெண் தேடி அலைந்து திரிந்து ஒரு பெண்ணை கண்டெடுக்கிறார்..அந்தப் பெண் ஏற்கனவே குஷ்ஷுக்கு ஒரு முறை அறிமுகமானவள்...


டிம்பிள்(கத்ரீனா கைப்)லண்டனில் பிறந்து இந்தியாவில் வாழும் ரொம்பவும் அட்வான்சான பெண்.

சிகரட்,குடி என்று ஆர்ப்பாட்டமாக வாழும் பெண்..அந்தப் பெண்ணை அண்ணனுக்கு பேசி,நிச்சயமாகி,கல்யாணம் வரை போகும்போது நம்ம ஹீரோக்கு ஹீரோயின்மேல லவ்ஸ் வந்திடுது..
ஹீரோயினுக்கும் அதே..அப்புறமா குடும்பத்தை பகைக்காம தங்கள் காதலில் இந்த ஜோடி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை..ரொம்பவும் காமெடியா சொல்லியிருக்கிறார் இயக்குனர்...


இம்ரான் கான் - எப்பவும் பார்த்த மாதிரியே இருக்கிறார்..கண்கள் பேசுதோ? ...


கத்ரீனா கைப் நடிச்சிருக்காங்க..


கத்ரீனா கைப் "தனு வேட்ஸ் மனு" கங்கனா ரனாவத்தை அடிக்கடி ஞாபகமூட்டினார்...கொஞ்சம் அதேமாதிரி கதையும் கூட..


அலி சபாரும் நல்ல தெரிவு..எல்லாரையும்விட கத்ரீனா கைபே கவர்கிறார்..நடிக்கிறார்..


படம் காமெடி கலந்த காதல்...அடிக்கடி சல்மான் கானையும் வம்புக்கிழுத்த மாதிரி இருந்துச்சு..ரசிக்கக்கூடிய படம்...

மேரே ப்ரதர் கி டுல்ஹான் (அண்ணனுக்கான மணப்பெண்)


அண்ணனுக்கான மணப்பெண் தேடல் தனக்கான மணப்பெண் தெரிவில் முடிகிறது...
###########################################