Pages

Sunday, August 4, 2013

Mirchi - தெலுங்கு விமர்சனம்

மிர்ச்சி 





பிரபாஸ் ,அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யா ,சத்யராஜ் ,நதியா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இந்த மிர்ச்சி.

இத்தாலியில் ஆரம்பாகி ஹைதராபாத்தில் முடிகிறது படம்...

ஆரம்பமே பிரபாஸ் -அனுஷ்கா என்ட்ரி...
கிடாரோடு வரும் ஹீரோ ஹீரோயினை வில்லன்களிடமிருந்து காப்பாத்துகிறார்.....சண்டை எல்லாம் போடல்லப்பா..வாயாலே பயம் காட்டி...அப்ப பாருங்களேன்.


ஹீரோயின் லவ் பண்ண இந்த காரணம் போதுமே...ஹீரோவும் வழியுறார்....அப்புறமா ஹீரோயின் ஊருக்கு போயிட்றார் ஹீரோயின் அண்ணா பிரெண்டா..


அது ஒரு கிராமம்..ஹீரோயின் குடும்பமே மோசமானவங்க..அண்ணன், அப்பா சித்தப்பா, பெரியப்பான்னு எல்லாமே அருவாளோடு அலையும் ஆட்கள் ...அது ஹீரோயினுக்கு அலேர்ஜி.கவலை...


அப்பிடி இருக்கிறவங்களை ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா அரிவாளை தூக்கிப் போட  வைக்கும் அளவுக்கு மாத்துறார்..எல்லோரும் நல்லவங்களா மாறி ஹீரோவை ஹீரோயினுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க.



ஆனா ஹீரோ வேணாம்கிறார்...
அங்க இருக்கு டுவிஸ்டு...

ஹீரோயின் குடும்பத்தின் பரம எதிரியான பக்கத்து ஊரு சத்யராஜ் பையன்தான் ஹீரோ...ஊர் பிரச்சினையில் சத்யராஜ் - நதியா பிரிஞ்சு போக அம்மாகூட சிட்டியில் வளருறார் ஹீரோ...அப்பாவை பார்க்க ஊருக்கு வரும்போது முறைப்பொண்ணு அனுஷ்காகூட லவ் வளருது..



கல்யாணம் பண்ற நேரம் வில்லனுக என்டர்...ஹீரோ எல்லோரையும் கொன்னுபோட்டு வைக்க அதில் அம்மா நதியா இறந்திடறாங்க...அதுக்கு ஹீரோதான் காரணம்னு நினைத்து பிரபாசை ஊரைவிட்டு அனுப்பிடுறார் அப்பா சத்யராஜ்...

கதை முடியும் நேரம் வில்லன்களுக்கு தெரியுது பிளாஸ்பேக்...
அப்புறம் என்ன நடந்தது?? யாருகூட ஹீரோ சேர்ந்தார் என்றதுதான் மிச்ச சொச்ச கதை...


படம் அழகா இருக்கு...எல்லோரும் அழகாவே இருக்காங்க....அனுஷ்கா அவ்வளவு கியூட்....

பிரபாஸ் இன்னும் ஹான்ட்சம்மா ஸ்டைலிஷா கலக்கிறார்...



நதியா அதே குறையாத அழகு.....சத்யராஜும் சூப்பர் இந்தப் படத்தில்...


பிரம்மானந்தம் காமெடிகள் கலக்கல்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பல பாடல்களில் மிர்ச்சி பாட்டு கேட்கலாம்..


மொத்தத்தில் படம் பார்க்கலாம்.

####################################

Saturday, August 3, 2013

The Proposal - ஆங்கில சினிமா


அன்பு இல்லாமல் தவிப்பவர்கள், அன்பு எங்காவது கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் நம்முடன் கூடவே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தேவை என்ன என்பது நமக்குத் தெரிந்திருப்பதில்லை.... தங்களின் பலவீனங்களை மறைத்துக் கொள்ள கடினமான முகமூடியை போட்டுக்கொள்பவர்கள் இவர்கள்.
#######################################

நீண்ட நாட்களுக்குப் பிறகு யதார்த்தமான அழகான ஆங்கில சினிமா பார்க்கக்கிடைத்தது..


ரெயன் ரெனோல்ட்ஸ், சன்ட்ரா பலக் நடித்து 2009இல் வெளிவந்த படம் இது...


புத்தக பதிப்பக நிறுவனமொன்றின் எடிட்டர் மாக்ரட். அவங்க அசிஸ்டன்ட் அன்ட்ரூ...தனிமையில் வாழும் இந்த எடிட்டர் ரொம்பவும் பொல்லாதவங்க...கனடாவை சேர்ந்த இந்த எடிட்டர் அமெரிக்க கம்பனியில் வேலைபார்க்கமுடியாமல் வீஸா பிரச்சினை வரும்போது எடிட்டர் கனவில் இருக்கும் நாயகனை தன்  வருங்காலக் கணவன் என்று அறிமுகப்படுத்தி அவனுடன் ரகசிய ஒப்பந்தம் பேசுகிறார் மாக்ரட்..


சட்ட சிக்கல்களைத் தவிர்க்க முறையான திருமணம் தேவைப்படுகிறது..அதற்காக நாயகனின் ஊர் சிட்காவிற்கு (அலாஸ்கா) ஒன்றாக செல்கிறார்கள்...அன்ட்ரூ குடும்பத்துடன் ஒரு வாரம் தங்குகிறார் மாக்ரட்...இருவரும் பின்னர் காதல் வயப்பட்டனரா?? திருமணம் செய்தனரா??? ஹீரோவின் எடிட்டர் கனவு நிறைவேறியதா என்பதே  படம்...


அறிமுக காட்சியிலே ஹீரோயினின் கடின முகம் அந்த அலுவலக காட்சியில் அழகாக காட்டப்படுகிறது..அலுவலர்களின் பதட்டம், ஒளியும் பாங்கு, ரகசிய மெசேஜில் அவங்க ரூமிலிருந்து வெளிவருவதை பகிர்வது என்று எடிட்டர் அம்மாவின் குணம் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது..


அன்ட்ரூவின் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரங்களில் குறிப்பாக அன்ட்ரூ பாட்டியுடன் மாக்ரட் இருக்கும் நேரங்கள் அவரின் குடும்ப ஏக்கத்தை தெளிவுபடுத்துகிறார்கள்...


ரெயென்  ரெனோல்ட்ஸ், சன்ட்ரா பலக் செமிஸ்ட்ரி சொல்வதற்கில்லை..



சண்ட்ராவிடம் முதுமை தெரிகிறது. ஆனால் காதாபாத்திரங்கள் கதைக்கேற்பவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது..


குடும்பத்துடன் இருந்து பார்க்கக்கூடிய நல்ல படம்....ஒரேயொரு காட்சி மட்டும் கொஞ்சம் உறுத்தல்...


#############################################################