நாம் எல்லோரும் தினமும் சாலைகளில் நடந்து செல்கிறோம்..பாதைகளைக் கடக்கிறோம்...வாகனங்களில் பயணிக்கிறோம்...வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம்...எப்பிடி எப்பிடியோ சாலைகளும்,வாகனங்களும் எம்மோடு நெருக்கமான தொடர்பினை பேணிக்கொண்டிருப்பவை..
படத்தில் கமெரா அழகாக நகர்ந்திருக்கிறது.கமெராமென் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை..கமெராமென் வேல்ராஜ் படத்தின் பிளஸ்.பஸ்கள் பயணத்திற்கு தயாராகமுன் அவற்றை காட்சிப்படுத்திய விதம்,பயணிக்கும் காட்சிகள்,இறுதியில் அந்த விபத்து..நிஜமாக பார்த்த உணர்வு..கம்பியூட்டர் கிராபிக்சும் வேலை செய்திருக்கிறது..
இன்றைய பெண்களின் பிரதிநிதி அஞ்சலி.ஜெய்க்கு அஞ்சலி "ஐ லவ் யு" சொல்லும் விதம் ரசனை.தன்னை நேசிக்கும் ஜெய்யை அஞ்சலி நடத்தும் விதம் நிஜமாக இருக்கிறது.யதார்த்தம்.ஆணை அடக்கி ஆளும் பெண்.காதலியாக வெட்கம்,கூச்சம் என்றில்லாத நாயகி.ஓரிடத்தில் அஞ்சலி "கட்டிக்கோ" என்று சொல்ல ஜெய் "கல்யாணத்துக்கு அப்புறம்க " என்பார். அதற்கு "நீ கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ....நான் இப்ப கட்டிக்கிறன்" என்று அஞ்சலி ஜெய்யை அணைக்குமிடம் அழகிய காதல் கவிதை..இறுதிக்காட்சியில் அஞ்சலி தன் நடிப்பை நிரூபித்திருக்கிறார்..
சர்வானந் -அனன்யா
ஐ.டி இளைஞனாக தெலுங்கு நடிகர் சர்வானந் ஸ்டைலாக இருக்கிறார்..
தனியாக சாலைகளில் நடக்கும்போது அமைதியாக நடக்கிறோம்..ம்ஹூம்..செல்போன்களுடன் அரட்டையடித்து நடக்கிறோம்.நண்பிகளுடன் /நண்பர்களுடன் வீதிகளில் அலட்டிக்கொண்டு அலட்சியமாக அசைந்து செல்கிறோம்.அவசரத்தில் இஷ்டப்படி வீதிகளைக் கடக்கிறோம்.கதையின் சுவாரசியம் எம்மை வீதியின்மீதோ வாகனங்கள் மீதோ அதிக கவனத்தை ஏற்படுத்துவதில்லை.எல்லா நாளும் ஒரே நாளாக அமையாது என்பது அனுபவிக்கும்வரை தெரிய வாய்ப்பில்லை.
தினமும் விபத்துக்கள் பல்வேறு வடிவங்களில் நடந்துகொண்டே இருக்கிறது..உயிர்களும் கதறுகின்றன..கரைகின்றன..பத்திரிகைகளிலும்,வானொலியிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்திற்று,கேட்டிற்று நம் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ம்ம்ம்ம்.பாவம்...இது மட்டுமே அந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் உன்னத பணி.நமக்கோ,நம் உறவிற்கோ விபத்து நடக்கும்வரை ஆ!அப்பிடியா!ஹையோ பாவம்..
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ஒரு பயணம்..ஒரு விபத்து...பலத்த அழுகை..மலர்ந்த காதல்..மடிந்த காதல்..
ஹாலிவுட் பட நிறுவனம் பாக்ஸ் ஒபிஸ், இயக்குனர் முருகதாசோடு இணைந்து தயாரித்திருக்கும் படம்.புகழ்பெற்ற பாக்ஸ் ஒபிஸ் இந்தப்படம் மூலம் தமிழ் பட உலகில் கால்பதித்திருக்கிறார்கள்..முதல் படத்திலே தங்கள் கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக்கியிருக்கிறார்கள்..அழகான இரு ஜோடிகள் பயணித்திருக்கும் பஸ் பயணம்.இயல்பான தெரிவுகள்..கதையோடு அழகாக பொருந்திப்போகிறார்கள்.இயல்பான நடிப்பு..
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து + திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து .ஜெய்,அஞ்சலி,சர்வானந் ஒரு பேருந்தில் பயணிக்க அனன்யா மற்றையதில் பயணிக்கிறார்.இரண்டு பேருந்துகளும் ஓரிடத்தில் மோதிக்கொள்கின்றன. அதிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு முன்,ஆறு மாசத்திற்று முன் என்று ஜெய் - அஞ்சலி ,சர்வானந் -அனன்யா ஆகியோரின் காட்சிகள் நகர்கின்றன.இடையில் விபத்து நடக்கிறது..பேருந்து பயணிக்கிறது ..புதிய உத்தியில் காட்சிகள்..இயக்குனர் ரசிக்கவைக்கிறார்.யாருக்கு விபத்து நடக்கும் என்பது ஊகிக்க முடியாத பயணம்.
ஜெய் - அஞ்சலி
ஜெய் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.
இனசென்ட் ஹீரோவாக இயல்பாக காதலித்திருக்கிறார்.
அஞ்சலிக்கு கற்றது தமிழ்,அங்காடித்தெருவிற்குப் பிறகு ஒரு மைல்கல்.
இன்றுவரை நான் பார்த்த தமிழ் சினிமாவில் இவர்களின் காதல் வித்தியாசமான காதல்.இனசன்ட் ஜெய்.அஞ்சலியை வாங்க.போங்க என்று அழைப்பது,சம்பளக்கவருடன் துணிக்கடையில் துணிஎடுப்பது,காபி சொப்பில் காப்பி கூலா இருக்குது என்று சொல்வது..இன்னும் பல.ஜெய்யின் மனேரிசங்கள் கலக்கல்.
சர்வானந் -அனன்யா
நிஜமாகவே பயணித்திருக்கிறார்கள்..ஷெயார் ஓட்டவாக இருக்கலாம்..பஸ்ஸாக இருக்கலாம்..அன்றாடம் பார்க்கும்,பயணிக்கும் சக பயணிகளே.எம்மையும் அவர்களுடன் பயனிக்கவைத்துவிட்டார்கள்.
வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு நிற்கிறது "எங்கேயும் எப்போதும் ".அடிதடி சண்டைகள்.அரை குறையாக டூயட்,ஓவர் செண்டிமென் இல்லாத பயணம்.சில உரையாடல்கள் சிறப்பாக இருக்கிறது.சில காட்சிகள் இயல்பான நகைச்சுவை.பாடல்கள் சூப்பர்...நா.முத்துக்குமாரின் வரிகள் அருமை.கோவிந்தாப்பாடலும்,சென்னையை ஒரு புதுப் பொண்ணு பார்க்கும் காட்சிகள் சூப்பர்..
சென்னைப் பெண்ணுக்கும்,சென்னைக்கு புதுப்பொண்ணுக்கும் பல இடங்களில் கற்பு வேறுபட்டு நிற்கிறது.பஸ்ஸில் அனன்யாவுடன் பயணிக்கும் பெண் காதலுடன் கதைத்துக்கொண்டு,அப்பா கால் பண்றார்..கட் பண்ணு என்று சொல்லி இன்னொரு ஆணுடன் கதைப்பது...ஒரு பெண்ணிடம் ஆடையின் குறையை சுட்டிக்காட்டி..கிராமத்துப் பெண்ணென அனன்யா பெயர் வாங்குவது..அருமை..
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
இயக்குனர் சரவணனுக்கு பாராட்டுகள்.
கமெராமென் வேல்றாஜிற்கும் பாராட்டுகள்.
இசையமைப்பாளர் சத்யாவிற்கும் பாராட்டுகள்..
எடிட்டர் ஆண்டனிக்கு பாராட்டுகள்.
பயணித்த ஜெய்,சர்வானந்,அஞ்சலி,அனன்யாக்கும் பாராட்டுகள்..
அந்த வாகன சாரதிகளுக்கும் (ஸ்டன்ட்) பாராட்டுகள்..
=================================================
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு யதார்த்த சினிமா.
படம் பார்த்த பிறகு வீதியில் பஸ்களைக்கண்டால் ஒரு கணம் தோன்றும் பயம் இயக்குனரின் வெற்றி..






