Pages

Thursday, August 16, 2012

Ala Modalaindi -தெலுங்கு விமர்சனம்


"நான் ஈ" படத்தைப்பார்த்த பிறகு நான் நானி மேல் கவரப்பட்டேன்.அதன் பிறகு  நானியின் படங்களை தேடியபோது பார்த்த படம்தான் இந்த
"அலா  மொடலைண்டி"

நிஜமாவே ஜாலியான ஒரு காதல் கதை.


காதலில் தோற்ற கெளதம் மற்றும் நித்யா ஒரு திருமணவிழாவில் சந்தித்து,நட்பாகி,பின்னர் காதலர்களாகுவதுதான் கதை.


குடும்பத்தோடு உட்கார்ந்து ஜாலியா பார்க்ககூடிய பீல்குட் படம்தான் இது.நானி -நித்யா மேனன் ஜோடி சூப்பர்.ரெண்டு பேருக்குமே பக்கத்து வீட்டு பையன்,பொண்ணு போன்ற தோற்றம்.அழகா கதையோடு பொருந்தி நடித்திருக்கிறார்கள்.


"நான் ஈ" படத்திலேயே நிறைய பொண்ணுங்க "நானி" ரசிகைகள் ஆகிட்டாங்க.இந்தப்படம் 2011இல் வெளிவந்த படம்.ஆனா எனக்கு இந்தப்படத்தில்தான் நானி ரொம்ப அழகா இருக்கிறார்.


நாயகன் அம்மாவாக ரோகினி இயல்பா வந்து போகிறார்.


கிளைமாக்ஸ் கல்யாண கலாட்டாவும்,குடிகாரனின் நடிப்பும் செம.
ஹட்ச் டோக்  சான்சே இல்லை.கியூட்.


இது போன்ற முக்கோணக்காதல் கதைகள் நீங்கள் பலவற்றை பார்த்திருந்தாலும் இது புதுசு.


சினேகா உல்லால் அழகான தமிழ் பெண்ணா வந்தாலும் 
ஜொலிப்பதென்னவோ நித்யா மேனன்தான்.


பேசும் அந்தக் கண்களே நித்யாவிற்கு கொள்ளை அழகு.


அரைத்த மசாலாவையே அரைக்காமல் இயல்பாக நரேட்டிவ் ஸ்டைலில் படத்தை கொண்டு செல்வது இயக்குனரின் வெற்றி.


இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு ஒரு சபாஷ்!!!!


அழகான,ஜாலியான காதல் இந்த கதை.


கதாபாத்திரங்களும் அருமை. 


பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
###########################################

Tuesday, August 14, 2012

Nenu Naa Rakshashi -தெலுங்கு விமர்சனம்

"லீடர்" ராணாவின் மாஸ் படம்.
அறிமுகப்படத்திலே அலட்டலில்லாத அளவான நடிப்பால் மனம் கவர்ந்தவர் ஹீரோ  ராணா .தெலுங்குப் படவுலகின் அசத்தல் அழகி இலியானாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் இந்த படம்.படத்திற்கு கூடுதல் பிளஸ் இயக்குனர்  பூரி ஜகன்னாத்.



அபிமன்யு ஒரு ப்ரொபிஷனல் கில்லெர்.தன் மொபைலுக்கு  வரும் எம்எம்எஸ் மனித முகங்களை கேள்விஎதுவுமின்றி கொல்லும் மனிதன்.


தற்கொலை செய்ய விரும்பும் மனிதர்களின் தற்கொலைகாட்சிகளை படமெடுத்து,அதனை பதிவேற்றி வெப்சைடாக நடத்துபவர் மீனாட்சி.இவர்கள் இணையும் கோடும்,காதலும்தான் இந்த படம்.



இலியானா தற்கொலை செய்வதாக விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தை,திரைக்கதை மோசம் செய்துவிடுகிறது.ரானாவிற்கு உடலை முறுக்கேற்ற தெரிகிறதே தவிர நடிப்பை காணோம்.சாருக்கு அழவே தெரியல.பெரிய இடத்து பசங்கல்லாம் அழுவாங்களா என்ன??இலியானா அதே காமாலைக்கண்ணோடு வந்து போகிறார்.ஒரு பிரெஷ்ணஸ் இல்லவே இல்லை.




முமைத்கானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமோ?அங்கங்கு வந்து போகிறார்.
பிரம்மானந்தம் இருந்தும் பிரயோசனமில்லை.வெனிசுக்கு போறாங்க.இந்தியா வாறாங்க..ஒன்னும் புரியல..மொத்தத்தில தயாரிப்பாளர் செலவில் நல்லா ஊர் சுத்தியிருக்காங்க.பாவம் மனுஷன்.


பூரி ஜெகன்னாத்திற்கு என்று தெலுங்குப்படவுலகில் ஒரு தனி இடம் இருக்கிறது.
அதை மனிதன் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
அசத்தலாக ஆரம்பித்து சொதப்பலாக முடிந்திருக்கிறது படம்.
இசையும் ஏமாற்றிவிட்டது.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.




துப்பாக்கியை ஆளாளுக்கு கையிலெடுத்து ரசிகர்களை ஏமாற்றிவருகிறது இந்த சினிமா நிலவரம்.


பாக்காதவங்க தப்பிச்சுப்போங்கப்பா.....
#######################################################

Sunday, July 22, 2012

ஹிந்தி சினிமா -Department

இந்திய சினிமாவில் ராம்கோபால் வர்மாவிற்கென்று தனியிடமே இருக்கு.அவரோட திரைக்கதைக்கும்,அந்த ஸ்டைலுக்கும் படம் பார்க்கிறவர்களே அதிகம்.ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய படைப்பு இந்த டிப்பாட்மென்ட்.


எனக்கு ராம்கோபால்வர்மா படங்கள் பிடிக்காது.அவரின் படங்களில் இருக்கும் வன்முறையும்,ரணகளமும்,எல்லைமீறிய கவர்ச்சியும் எனக்கு எரிச்சல் தருபவை.இந்தப்படத்தை "ராணா"விற்காக மட்டும் பார்த்தேன்.

ராம்கோபால்வர்மாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட தாதாக்களும்,போலீசும்தான் திரைக்கதை..
தீவிரவாதத்தை ஒழிக்க தனியான ஒரு போலீஸ்படை அமைக்கப்படுகிறது.அந்த அமைப்பை பிரபல தாதாவின்  கையாள்  எப்படி கையாள்கிறான் என்பதே கதை.முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் அவை கொஞ்சமே.தன் பாணியில் அவற்றை வித்தியாசமாக படைத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.

அமிதாப்பச்சன் கலக்கியிருக்குறார்.யாரையோ நையாண்டி செய்வதுபோன்ற பாத்திரம்.

சஞ்சய் தத்திற்கு சுடுவதை தவிர வேலையில்லை.சும்மா வந்து சுட்டிற்று போகிறார்.

ராணாவிற்கு நடிக்க களம் இல்லை.
முகத்தில் எந்த எக்ஷ்பிரஷனும் இல்லை.
உடம்பைத்தவிர வேறு பிளஸ் இல்லை.
சுட்டிற்றே இருக்கார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.


மதுஷாலினி அநியாயத்திற்கு அவ்வளவு கவர்ச்சி.


வில்லிஎன்றாலே கவர்ச்சியான காரெக்டர் என்று எழுதிவைத்துவிட்டார்கள்.


டுவிஸ்டு இருக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்காங்க.இருந்தும் பயனில்லை.இப்பிடி சுட்டிற்றே இருக்கும் சினிமா கலாச்சாரத்தை எப்போ ஒழிக்கப்போறாங்களோ தெரியல.உண்மையை சொன்னா படத்தில் சுவாரசியமே இல்லை.

இந்த அண்டர்வேல்ட் படங்கள் பார்த்துப் பார்த்து சலித்துப்போன சினிமா ரசிகனுக்கு எப்போ விடுதலை கொடுக்கப்போறாங்களோ இந்த இயக்குனர்கள்??

#############################################

Saturday, June 16, 2012

மகதீராவின் மறுஜென்மம்

காதல் வாழ்க்கையில் அனைவரும் கடந்து செல்லும் ஒரு பகுதி..சிலர் எப்பிடியோ அதை  தவறவிட்டிருப்பாங்க..
அவங்களுக்காக கடவுள் கொடுக்கும் இறுதி வாய்ப்புதான் திருமணம்.அதையும் தவறவிட்டா சொல்வதற்கில்லை.


நிறையப்பேருக்கு கனவுத்தொழிற்சாலையா இருக்கும் காதல் சிலருக்கு மனநலமருத்துவமனையாவும் மாறியிருக்கு.எல்லாக் காதலும் திருமணத்தில் முடிச்சிடப்படுவதில்லை..முடிவதில்லை 

சில காதல் வாழும்,சில காதல் சாகும்..
சில காதல் வாழ்வதும் சாவதும் ஒண்ணுதான்.
காதலில் சொதப்புபவர்கள் கல்யாணத்தில் சொதப்பமாட்டாங்க..


காதலும்,திருமணமும் ஒன்றோடு ஒன்று ரொம்ப நெருங்கியது..எல்லாரும் என்னதான் காதலிச்சாலும் கணவன் - மனைவி காதல்தான் எப்பிடியும் இறுதிவரை பயணிப்பது.


ஆனா அந்த திருமணத்திலும் சொதப்புபவர்கள் இருக்கத்தான் செய்றாங்க.
நடிகர்கள் நல்லா நடிப்பாங்களோ இல்லையோ,நிஜத்தில் ரொம்பவும் ஓவர்அக்ட் பண்ணிப்பாங்க.அவங்க வாழற வாழ்க்கை சம்பாதிக்கவும்,பப்ளிசிட்டிக்காகவும் மட்டும்தான் செலவு செய்யப்படும்.வாழ்க்கையையும் பிஸ்னசாகப்  பார்க்கும் உலகில் திருமணத்த அடவு வைத்து வாழ்வை இழந்தோர் பலர்..சிலர் கண்காணாமலேபோயிட்டாங்க. 


சில ஹீரோக்களைப்பார்த்தால் சூப்பெரா இருப்பாங்க.நல்லாவும் நடிப்பாங்க..அவர்களுக்கென்று ஒரு கூட்டம் அதுவும் பெண் ரசிகைகள் அளவில்லாம இருப்பாங்க.எந்த மகராசியை கல்யாணம் பண்ணிப்பானோன்னு நெனைக்கிற நேரம் சுப்பம்மாவையோ குப்பம்மாவையோ கட்டிக்கிட்டு வந்து நிப்பாங்க.காதல் இளவரசன் பிரஷாந்த் இப்பிடித்தான் பண்ணி நாசமாப்போனாரு.



தெலுங்கு ஹீரோக்கள் எல்லாமே சமீபகாலமா டும்டும் வாங்கிட்டு இருக்காங்க.

என்டிஆர் - லட்சுமி பிராணாதி 

அழகும் அழகும் சேர்ந்தால் பேரழகு.சிலருக்கு அமையுது.பலரை ஏங்க வைக்குது.

அல்லு அர்ஜுன்  - சினேகா ரெட்டி

இப்போ ராம்சரன்தேஜா.அப்பலோ மருத்துவமனை தாபகரின் பேத்தி உபசானாவை திருமணம் செய்திருக்கிறார்.

கல்யாண செட்டாம் 

கல்யாண சீதனம் நூறு கோடியாம்.அல்லு அர்ஜுனோடு போட்டி போட்டு வாங்கியிருக்கார்.பொதுவாவே இந்த தெலுங்கு கனவான்களோட கல்யாணம் அவங்க படங்களைப்போலவே கலர்புல்லா இருக்கும்.ரொம்ப ஆடம்பரமா,ரொம்ப ஜொலிஜொலிப்பாபண்ணுவாங்க.

என்டிஆர் கல்யாண விழா 

ஹீரோக்களைப்போலவே அவங்க சம்சாரங்களும் சூப்பெரா இருப்பாங்க.அவங்க இமேஜை காட்டுவதாய் இருக்கும் அவர்கள் கல்யாணம்.

அல்லு அர்ஜுன் திருமணம் 

ராமசரண் மனைவி உபசானா மட்டும் கொஞ்சம் விதிவிலக்கா பேசப்படுறாங்க.பணம் இருக்கும் இடத்தில் அழகும் இருக்கும்.ஆனா இங்க என்னவோ சொதப்பல்..

ராம்சரண் தேஜாவின் மனைவி உபாஸ்னா காமினேனி

பொண்ணு அலங்காரம்கூட ஏதோ மாதிரியா இருந்தது.நாங்க பணக்காரங்க..என்னவோ பண்ணிக்கிறோம் போல..என்னவேணா  பண்ணிப்போம்.. (நாங்கல்ல பார்க்கிறது??)


பணத்துக்காக அடமானம் வைத்தாரா?அந்தஸ்துக்காக அடமானம் வைத்தாரா?அப்பா ஆசைக்காக அடமானம் வைத்தாரா?


வாழ்க்கையும் நடிப்புன்னா எப்பிடி வாழ்றது?????

என்டிஆர் மனைவி -லக்ஷ்மி

அல்லு அர்ஜுன் மனைவி - சினேகா ரெட்டி,


ராம்சரண் மனைவி -உபாஸ்னா 

அவசரத்தில் முடிவெடுத்திற்று அப்புறமா யோசிச்சு ஒரு பயனுமில்ல..சரி.சரி..இனி என்னதான் பண்றது?மனமொத்து வாழவேண்டியதுதான்..


வாழ்க பல்லாண்டு !!!!!!


###########################################################

Monday, April 23, 2012

சுவரு சூப்பர் சுவரு....பவரு சூப்பர் பவரு

என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு?எனக்கே தெரியலையே..தெரியலையே...(யாரும் அதுக்காக லூசுன்னு நினைச்சுக்கிறதில்ல)
என்ன விஷயம்னா நா நல்லாத்தான் இருக்கேன்..
ஆனா என்ன ழுதத்தான் முடியல.அதால கொஞ்சமா கவலை.

மத்தப்படி நீங்க நினைக்கிறமாதிரி எதுவுமே இல்லங்க.(இது நல்ல விஷயம்தானே?நீங்க எழுதலன்னு யாரு கவலைப்பட்டான்னு கேக்கிறதில்ல.நாங்களும் எங்க எழுத்துப்பணிய செய்து  நாலு பேருக்கு தலையிடிய கொடுக்க வேணா?)

ரெண்டு மாசமா இந்தப்பக்கமே வரல.இப்போ வந்திருக்கேன்...
(ஒலகம் உருப்பட விட்டிருவமா??கெம்பிட்டமில்ல..)

பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே.!!!! 

##############################################
ஐபிஎல் சீசன் சூடு பிடிச்சிருச்சு..அக்கினி பகவான் கொளுத்துறதவிட நம்ம அண்ணனுங்க கொழுத்துறத பார்க்க அப்பிடியொரு கூட்டம்...
அவன் சிக்சர் அடிப்பானா?இவன் பவுண்டரி அடிப்பானா என்றதைவிட அர்ச்சனா எப்பிடி கிரவுண்ட்சுக்கு வாறாங்க என்பதைப்பார்க்கவே தவம் கிடக்கிறானுங்க.அதுவும் அர்ச்சனா புடவையில வந்தா விளங்கிடும்..
(பாவங்க காமன்ட்ரேடர்ஸ்......அந்தம்மா இடுப்ப பாப்பானுங்களா...இல்ல....கிகிகி)


அதுவும் டானியல்மொரிசன் சேர்ந்திட்டாருன்னா??
ஜொள்ளுக்கு ஜொள்ளு..லொள்ளுக்கு லொள்ளு...ஐபிஎல் கலக்குது..


ஐபிஎல் வரைக்கும் சுவரு பவருன்னு யாருக்குமே தெரியல..இப்ப பாத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அடி பின்னுறாங்க..டிராவிட்,கங்குலி,சச்சின் அந்தநாள் கூட்டணியில பின்னவர் மட்டும் மிசிங்..
பூனேயும் பூந்து விளையாடுது..



மூணு பேரிலும் ஐபிஎல்லுக்கு போர்ம்ல இருக்கிறவர் டிராவிட்தான்னு வாக்கெடுப்பில சொல்லுறாங்கோ..
(சுவரு சுவருதான் அது சூப்பர் சுவருதான்....)


டெக்கன் சார்ச்சர்ஸ் - நோ சார்ஜெர்ஸ் 
நல்ல ப்ளேயர்ஸ் இருந்தும் தொடர் தோல்வி..சங்கா என்ன பண்றீங்க?
கோச் டரன் லீமன் கம்ப்ளைன்ட் பண்றார்..பீல்டிங் முடியல சாமி..
(எல்லாரும் கேர்ல் பிரெண்டோட வந்தா எப்பூடி??டேல் ஸ்டெயின் இருந்தும்..ம்ஹ்ம்ம்ம்???)


=========================================================
இந்தப்பக்கம் ஐபிஎல் அந்தப்பக்கம் கால்பந்து....சூடு பறக்க நடந்திட்டிருக்கு..அதுவும் செல்சியா,எவர்டன்,மஞ்சஸ்டர் போட்டிகள் அனல் பறக்குது..

=============================================================
விஜய் டிவி டிஆர்பி ஏறிட்டே இருக்கு...அமெரிக்கன காப்பியடிக்கிறதிலே குறியா இருக்காங்க...
அதுவும் சூப்பர் சிங்கர் ஜூனியர் - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி மோதிக்கிட்டிருக்கு...
புத்தாண்டு ஸ்பெஷல் தூள் பறக்குது...


சிரிச்சு சிருச்சு வாரான் சிவகார்த்திகேயன்னு பார்த்தா அழுறாரு...சிவா உண்மையில உயரம் தாண்டுகிறார்...ஆனா இப்போ அவரு தனக்கான பாதைய கரெக்டா தேர்ந்தெடுத்தா இன்னும் முன்னேற இடமுண்டு..
தனுஷ் பொண்டாட்டிதான் சிவாவ "மூணு" ல முடக்கிட்டாங்கன்னு பார்த்தா புருஷன் வெட்டவே பார்க்கிறார்..

கொலைவெறி பாட்டுக்கு சிவகார்த்திகேயன டான்ஸ் ஆடக் கேட்டோம் ...
"நான் இப்போ ஹீரோ..எப்பிடி கும்பலோட ஆடுறது...சாரி..." அப்பிடின்னு சொன்னாருன்னு தனுஷ் பேட்டியே கொடுக்கிறார்...
(சிவா முகத்த பார்க்கணுமே....டேக் கேயார் சிவா...
இவனுங்க ரொம்ப கெட்டவனுங்க....)


கோபி ஸ்ட்ராங்னு நினைத்தால் அங்க ஓவர் பீட்டர் மட்டும் மிதமிஞ்சிப்போய்....


ஆனா இந்த சூப்பர் சிங்கர் கொஞ்சம் இடிக்குது..
"செல்லக்குரலுக்கான தேடல்" - செல்வக் குரலுக்கான தேடல் போல தோணுது...

அமெரிக்கப்பொண்ணு பிரகதிக்கு ஓவரா பில்டப் கொடுக்கிற மாதிரி பீலிங்..அதுவும் அம்மாவும் பொண்ணும் ஒரே கலர்ல உடுக்கிறதென்ன?ஆடுறதென்ன?சித்ரா மேடம் வாயெல்லாம் பல்லா வாழ்த்துதென்ன???(சம்திங் ராங்..அவங்க அம்மாக்குத்தான் ரொம்ப மவுசு...)


பொண்ணு ஹீரோயினாவே ஆகிடும்... அடுத்த திரிஷா -உமா கிருஷ்ணன் ஜோடி ரெடி.
===========================================================
சிறுவன் தில்ஷன் கொலைவழக்கு ரொம்பவுமே பாதிச்ச விஷயம்..
நீதித்துறை இன்னும் மாறவேண்டியிருக்கு...சிறுவன் குடும்பத்துக்கு என்னதான் இரங்கல் சொன்னாலும் தில்ஷன் இழப்பு....பரிதாபம்...
(பாதாம் கொட்ட திருடினதுக்கு கொலன்னா.....கற்ப திருடுறவனுங்க,உயிரை திருடிறவனுங்க?மனிதாபிமானத்த திருடிறவனுங்க???......).

===========================================================
இந்த சூடான சமாச்சாரங்களுக்கிடையில் புரட்சிப்போராட்டங்களும் வெடிக்கின்றன...

(பிரபு தொண்ட கிழிய கூப்பிடறாருங்கிறதுக்காக யாரும் போயிடாதிங்க..
பொடா..தடான்னு தூக்கிடுவானுங்க...)

அட்சய திருதியை வருதாமில்ல..தங்கம் வாங்கினா பெருகுமாமில்ல...(வரதட்சனைக் கொடுமைக்கு பதிலா அட்சய திருதிய அன்னைக்கு கணவன்மாரை படுத்தி எடுக்கிறது யாருங்கோ??கிளப்பிட்டமில்ல..)


================================================================
வரட்டா!!!