Pages

Sunday, August 19, 2012

Ishq -தெலுங்கு விமர்சனம்


நிதின் -இப்போ எனக்குப் பிடித்த தெலுங்கு ஹீரோக்களுள் இவரும் ஒருவர்.



மகேஷ் பாபுவிற்குப் பிறகு எனக்கு ரொம்ப பிடிச்ச தெலுங்கு ஹீரோ.அதுவும் இந்தப்படத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவு கியூட்.ரொம்ப ஹாண்ட்சம்மாவும் இருக்கிறார் நிதின்.அவரின் தொடர்ச்சியான பல தோல்விகளை தூக்கி சாப்பிட்டிருக்கிறது இஷ்க்.இந்த வருடத்தில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் இது.


விக்ரம் கே குமார் இயக்கத்தில் நிதின்,நித்யா மேனன்,அஜய்,சிந்து துலானி,ரோகினி நடித்திருக்கும் படம்தான் இஷ்க்.


சிம்பிளான கதை பொருத்தமான நடிகர்கள்,இயல்பான நடிப்பு,சிறந்த ஒளிப்பதிவால் பலம் பெறுகிறது.

பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என்றால் சொல்லவும் வேணுமோ?காட்சிகள் அவ்வளவு அழகும்,குளுமையும்...


விமான நிலையம் செல்லும் வழியில் நாயகியை பார்க்கிறார் நாயகன்.கண்டதும் காதல்..அதே போல் நாயகனையும் கவனிக்கிறார் நாயகி.அவரின் தொப்பியைத்தான் அவரால் இனம் காண முடிகிறது.முகம் மிஸ்ஸிங்.


இருவரும் ஹைதராபாத் போகும் விமானாத்திற்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.இருவருக்கும் உரசல் ஏற்பட்டுக்கொள்கிறது.தவிர்க்கமுடியாத காரணத்தால் விமானம் ஹைதராபாத் செல்லாமல் கோவாவில் தரையிறக்கப்படுகிறது.மீண்டும் ஹைதராபாத் போகவேண்டிய இடைப்பட்ட நேரத்தில் இருவரும் நட்பாகி,காதலராகிறார்கள்(இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..ஆனா சொல்ல வேண்டியது கடமையோன்னோ?)


ஹைதராபாத்திற்கு காதலர்களாக செல்லும் ஜோடி நித்யாவின் அண்ணன் அஜயை கண்டவுடன் டுவிஸ்டுடன் திரும்புகிறது.ஏனெனில் நிதின் - அஜய் இருவருக்கும் ஏற்கனவே பகை.காரணம் நிதின் அக்கா சிந்து துலானி.
என்ன பகை?எப்படி பகையை முறியடித்தார்?நிதின் எப்படி அஜய் மனதை மாற்றினார்?நித்யா மேனனை கைப்பிடித்தார் என்பதே படம்.


நிதினுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம்.துள்ளலா,சுறுசுறுப்பா ஜாலியா சுத்திட்டே இருக்கார்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.நித்யா மேனனிடம் வழியும் காட்சிகளிலும்,அஜயோடு தில்லாலங்கடி செய்யும் காட்சிகளிலும் நிதின் ஸ்கோர் செய்திருக்கிறார்.


நித்யா மேனன்.சொல்லவே வேணாம்.அவ்வளவு அழகு.அந்தக் கண்களே போதும்.ஜோ இடத்தை நிரப்ப இவர் போதும்.  நித்யா மேனன் காஸ்டியூம்ஸ் அழகோ அழகு.


சித்தார்த் -180,நானி -வெப்பம்,அலா மொடலைண்டி,நிதின் -இஷ்க் என்று இவர் யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அந்த நடிகருடன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவது இவருக்கு மிகப்பெரிய பிளஸ்.


நித்யா மேனன் இனசன்ஸ்,துள்ளல்,சிரிப்பு எல்லாமே அழகு.இப்போதைக்கு எனக்குப் பிடித்த அழகான நடிகை.கியூட்டான நடிகை.செக்சியா உடுக்காட்டியும் கிளாமரான நடிகை.


நிதினுக்கும் -இவருக்குமிடையே உயரம்தான் கொஞ்சம் மைனஸ்.ஆனால் அதுவும் ஒரு அழகு.


இசையும் படத்திற்கு பிளஸ்சாகவே அமைந்திருக்கிறது.இசையமைப்பாளர் அனூப் அரவிந்தின் பாடல்கள்,பின்னணி இசை இனிமை.


குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய பீல் குட் மூவிதான் இஷ்க்.


######################################################

Thursday, August 16, 2012

Ala Modalaindi -தெலுங்கு விமர்சனம்


"நான் ஈ" படத்தைப்பார்த்த பிறகு நான் நானி மேல் கவரப்பட்டேன்.அதன் பிறகு  நானியின் படங்களை தேடியபோது பார்த்த படம்தான் இந்த
"அலா  மொடலைண்டி"

நிஜமாவே ஜாலியான ஒரு காதல் கதை.


காதலில் தோற்ற கெளதம் மற்றும் நித்யா ஒரு திருமணவிழாவில் சந்தித்து,நட்பாகி,பின்னர் காதலர்களாகுவதுதான் கதை.


குடும்பத்தோடு உட்கார்ந்து ஜாலியா பார்க்ககூடிய பீல்குட் படம்தான் இது.நானி -நித்யா மேனன் ஜோடி சூப்பர்.ரெண்டு பேருக்குமே பக்கத்து வீட்டு பையன்,பொண்ணு போன்ற தோற்றம்.அழகா கதையோடு பொருந்தி நடித்திருக்கிறார்கள்.


"நான் ஈ" படத்திலேயே நிறைய பொண்ணுங்க "நானி" ரசிகைகள் ஆகிட்டாங்க.இந்தப்படம் 2011இல் வெளிவந்த படம்.ஆனா எனக்கு இந்தப்படத்தில்தான் நானி ரொம்ப அழகா இருக்கிறார்.


நாயகன் அம்மாவாக ரோகினி இயல்பா வந்து போகிறார்.


கிளைமாக்ஸ் கல்யாண கலாட்டாவும்,குடிகாரனின் நடிப்பும் செம.
ஹட்ச் டோக்  சான்சே இல்லை.கியூட்.


இது போன்ற முக்கோணக்காதல் கதைகள் நீங்கள் பலவற்றை பார்த்திருந்தாலும் இது புதுசு.


சினேகா உல்லால் அழகான தமிழ் பெண்ணா வந்தாலும் 
ஜொலிப்பதென்னவோ நித்யா மேனன்தான்.


பேசும் அந்தக் கண்களே நித்யாவிற்கு கொள்ளை அழகு.


அரைத்த மசாலாவையே அரைக்காமல் இயல்பாக நரேட்டிவ் ஸ்டைலில் படத்தை கொண்டு செல்வது இயக்குனரின் வெற்றி.


இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு ஒரு சபாஷ்!!!!


அழகான,ஜாலியான காதல் இந்த கதை.


கதாபாத்திரங்களும் அருமை. 


பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
###########################################

Tuesday, August 14, 2012

Nenu Naa Rakshashi -தெலுங்கு விமர்சனம்

"லீடர்" ராணாவின் மாஸ் படம்.
அறிமுகப்படத்திலே அலட்டலில்லாத அளவான நடிப்பால் மனம் கவர்ந்தவர் ஹீரோ  ராணா .தெலுங்குப் படவுலகின் அசத்தல் அழகி இலியானாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் இந்த படம்.படத்திற்கு கூடுதல் பிளஸ் இயக்குனர்  பூரி ஜகன்னாத்.



அபிமன்யு ஒரு ப்ரொபிஷனல் கில்லெர்.தன் மொபைலுக்கு  வரும் எம்எம்எஸ் மனித முகங்களை கேள்விஎதுவுமின்றி கொல்லும் மனிதன்.


தற்கொலை செய்ய விரும்பும் மனிதர்களின் தற்கொலைகாட்சிகளை படமெடுத்து,அதனை பதிவேற்றி வெப்சைடாக நடத்துபவர் மீனாட்சி.இவர்கள் இணையும் கோடும்,காதலும்தான் இந்த படம்.



இலியானா தற்கொலை செய்வதாக விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தை,திரைக்கதை மோசம் செய்துவிடுகிறது.ரானாவிற்கு உடலை முறுக்கேற்ற தெரிகிறதே தவிர நடிப்பை காணோம்.சாருக்கு அழவே தெரியல.பெரிய இடத்து பசங்கல்லாம் அழுவாங்களா என்ன??இலியானா அதே காமாலைக்கண்ணோடு வந்து போகிறார்.ஒரு பிரெஷ்ணஸ் இல்லவே இல்லை.




முமைத்கானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமோ?அங்கங்கு வந்து போகிறார்.
பிரம்மானந்தம் இருந்தும் பிரயோசனமில்லை.வெனிசுக்கு போறாங்க.இந்தியா வாறாங்க..ஒன்னும் புரியல..மொத்தத்தில தயாரிப்பாளர் செலவில் நல்லா ஊர் சுத்தியிருக்காங்க.பாவம் மனுஷன்.


பூரி ஜெகன்னாத்திற்கு என்று தெலுங்குப்படவுலகில் ஒரு தனி இடம் இருக்கிறது.
அதை மனிதன் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
அசத்தலாக ஆரம்பித்து சொதப்பலாக முடிந்திருக்கிறது படம்.
இசையும் ஏமாற்றிவிட்டது.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.




துப்பாக்கியை ஆளாளுக்கு கையிலெடுத்து ரசிகர்களை ஏமாற்றிவருகிறது இந்த சினிமா நிலவரம்.


பாக்காதவங்க தப்பிச்சுப்போங்கப்பா.....
#######################################################