Pages

Monday, February 20, 2012

ஆவின் பாலை மிஞ்சிய அமலாஆஆஆ பாஆஆஆல்!!!


இப்பெல்லாம் ஆவின் பாலோட முக்கியத்துவம் யாருக்கும் புரியுதோ இல்லையோ,அதப் பத்தி பேசுறாங்களோ இல்லையோ ஒரு பாலப்பத்தி பேசுறாங்க..

அதுதான் அமலாலாலாஆஆ பால்ல்ல்ல்ல்....

இது தான் இப்போதைய ஹொட் பால்... பாலோட சூடு ஆறமுந்தி பார்த்திடுவமா...


பால் பால்னு கூவாதவங்க எல்லாம் மைனான்னு கத்துறாங்க...அந்தளவுக்கு பட்சி பறக்குது...பட்சி காட்டில இப்போ ரொம்பக் காத்து...எந்த மரத்தில உக்காந்தாலும் கூடு கிடைச்சிடுது...


இந்த மைனா ரொம்ப சின்ன மைனாவா இருக்கா எல்லாருக்குமே பிடிச்சிடுத்து...

வழக்கமான அக்மார்க் சினிமா நாயகிகளிடமிருக்கும் சிவப்புத் தோல்,சைஸ் ஜீரோக்கள்,கிளாமர்னு எதுவுமே இல்லாம பட்சி ஜோரா வட்டமடிக்குது...



தமிழ்வேற கொஞ்சம் கொஞ்சம் வராம அக்சுவலி கொஞ்சம் கூடவே வருது...
இதில நடிக்குதாமில்ல?பசங்க ஏத்துக்கிட்டாங்க... (நிசமாலுமா???)

எனக்கென்னவோ பொண்ணு நம்ம பக்கத்துவீட்டு பொண்ணுபோலவே இருக்குதா...கேர்ல் இன் நெக்ஸ்ட் டோர்னு சொல்வாங்களே???அதுதான் பிளஸ்னு தோணுது...


அமலாங்கிற பேருக்காகவே அமலா பால் ரசிகரானவங்க நிறையப் பேரு...அமலா எங்க...இந்த பால் எங்க??அமலா ஒரு குளிர்ச்சியான அழகுக்கு சொந்தக்காரி..


இப்போதும் பார்க்கவைப்பவர்,ரசிக்கவைப்பவர்.....
புகழின் உச்சியில் இருக்கும்போதே நாகர்ஜூனாவின் கரம்பிடித்தவர்...ஒரு அம்மாவா இன்னும் அதே அழகுடன்....


இவங்க ராசியும் அப்பிடியோ..இப்போ இயக்குனர் விஜய்யோடு கிசுகிசுக்கப்படுறாங்களே .
இளமையான,திறமையான இயக்குனர் அவர்...

மதராசப்பட்டினம்,தெய்வத்திருமகள் என்று ஜெயித்துக்கொண்டிருப்பவர்...

தன் சரக்கு கொஞ்சம், அடுத்தவன் சரக்கு கொஞ்சம்னு யாருக்கும் தெரியாமல் கலந்து கட்டி விளையாடும் சூத்திரம் நல்லா தெரிஞ்சிருக்கு விஜய்க்கு!


வீரசேகரன்னு ஆரம்பமே சறுக்கலாத்தான் இருந்துச்சு அமலா பாலுக்கு......
சிந்து சமவெளின்னு பெரிய அவமானமே வந்தது..


சமவெளி படத்தில வாங்கி கட்டின பெண்மணிகள் சாபத்தை எல்லாம் பிரபு சொலமனின் மைனாவில் தூக்கி எறிஞ்சாங்க.....
அப்பிடியொரு படம் நடிச்சாங்கங்கிறதே இப்போ மறந்து போச்சு...மைனா மைனான்னு சொல்ற அளவு பேரெடுத்தாச்சு...


அப்புறம் பெரிய பெரிய ஹீரோக்கள்,டிரெக்டர்கள்னு சான்ஸ் வீடு தேடிவந்தது...

"தெய்வத் திருமகள்" படத்தில நடிச்சப்போ என்ன நடிப்புன்னு பேரெடுத்தாங்க....
ஆனா எனெக்கென்னமோ வந்துபோனமாதிரித்தான் இருந்துச்சு...
வந்தாங்களோ...போனாங்களோ...

விஜய் மனசில செயாரப்போட்டு உக்காந்திட்டாங்க போலிருக்கு..

                                                இப்போ நான் அழகா இல்லையா?

அப்புறம் ஆர்யா ஜோடியா வேட்டை...
பப்ப பப்பன்னு இவங்க கெமிஸ்ட்ரி,பயலோஜிதான் பம்பரமா சுத்திச்சு..ஆர்யாகூடவே ரவுண்டு போட்டாங்க... கிரிக்கெட் வரைக்கும் வந்து கொடி பிடிச்சாங்க...

                                             எப்பூடி எங்க பொருத்தம்????

இப்போ அதர்வா ஜோடியா "முப்பொழுதும் உன் கற்பனைகள்" ,சித்தார்த் ஜோடியா "காதலில் சொதப்புவது எப்படி" னு ரெண்டு படம் ஒரே நாள்ல வெளிவந்திருக்கு...

காதலில் சொதப்புவது எப்படிங்கிறது அதே நாளில் தெலுங்கில் "லவ் பெயிலியர்"னு வெளிவர ஒரே நாளில் மூணு படம்..எந்த ஹீரோயினுக்கும் இப்பிடியொரு லக் அடிக்காது...

                                        இன்னைக்கு இவன்தான் மாட்டியிருக்கான்...

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒரு ஹீரோயினின் படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படுகிறதுன்னு சொல்லாததுதான் குறை...

(காதலில் சொதப்புவது எப்பிடி? தவிர மீதி இரண்டும் ஊத்திக்கும் போலன்னுதான் பேசிக்கிறாங்கப்பா....
நோட் திஸ் போயின்ட்....பேசிக்கிறாங்க....)

                                      போட்டோகூட எடுக்கவரல்ல. இதில லவ் பண்றானாம்?

இப்போ இந்த ஓமனக்குட்டி அந்தப்பக்கமே போயாச்சாக்கும்..

                                         கடைசில இங்கதானே வந்தாகணும்

சினிமாவில் எப்பிடி ஜெயிக்கலாம்னு தெரிஞ்சுருக்கு பொண்ணுக்கு...ஒரு ஹீரோயினுக்கு நடிப்பு வருமோ இல்லையோ,படம் வெளியாகுமோ இல்லையோ கிசுகிசு கட்டாயம் வந்தாகணும்...அப்போதான் மார்க்கெட்ல நாலுபேர் மறக்காம ஞாபகம் வச்சிருப்பாங்க..அத கரெக்டா போலோ பண்றாங்க அமலாஆஆ.

                                                            அமலா ஆஆஆ                                         

சொதப்பாத அமலா பால்...

                                                    அமலா ஆஆஆ பாஆஆஆல்ல் 

நல்ல ஹீரோயினா வரலன்னாலும், விஜய் ஹீரோயினா ஆகிடுங்க!
###########################################                                    

Sunday, February 19, 2012

உனக்கு மட்டுமே நீ ரோல்மாடல்....

நீ நல்லவள்
நீ வல்லவள்
நீ ரொம்ப பெரியவள்
நீ ரொம்ப கெளரவமானவள்
உனக்கு நீதான் ரோல்மாடல்....

இப்பிடின்னு ஒவ்வொருத்தரும் நினைப்பதில் தப்பே இல்ல..இப்பிடித்தான் நாட்டில நிறையப்பேர் நினைத்துக்கொண்டு திரிகிறார்கள்...
நீங்க நினையுங்க...நல்லா நினையுங்க..
அதில எந்தப் பிரச்சினையும்  இல்ல...ஆனா மத்தவங்களும் இப்பிடிதான் நினைப்பாங்கன்னு நினைக்கிற உங்களோட நினைப்பு ரொம்ப முட்டாள்தனமானது...


இப்பெல்லாம் எல்லாரும் ரொம்பவும் படிக்கிறாங்க..நல்லா சம்பாதிக்கிறாங்க..கொஞ்சமா படிச்சாலே தலைக்குமேல ரொம்ப கனம் கூடிடுது..ரொம்பப் படிச்சா...ரொம்ப சம்பாதிச்சா...எவ்வளவு கூடும்???என் கால்ல நான் நிக்கிறன்..எனக்கு யாரு வேணும்?என்னால என்னப் பாத்துக்க முடியும்...அப்போ நான் கிரேட்தானேன்னு ஒரு எண்ணம் வந்திடும்...அதுதான் கனம் கனமா மாறும்... அப்புறமா தங்கள ஒரு ஸ்மார்ட் வுமென்னு /மென்னு நினைச்சுப்பாங்க...அதுதான் சிக்கலே..


நமக்கு எப்பவும் நாம நல்லவங்கதான்..நமக்கு எல்லாம் தெரியும்..நம்மளமாதிரி வருமான்னுதான் நாங்க நினைப்போம்...ஆனா நினைப்பெதெல்லாம் நிஜமாகிடுமா?

நீங்க உங்களுக்கு நல்லவங்களாவே இருங்க...அதப்பத்தி யாருமே கவலைப்பட மாட்டாங்க...ஆனா நீங்க மத்தவங்க பக்கம் உங்க பார்வைய திருப்பும்போதுதான் பிரச்சினையே...

என்னப் பாருங்க..நானும் உங்களமாதிரிதானே...நான் எப்பிடியிருக்கே ன்...
என்னப்பாத்து நடங்களேன்னு ஆரம்பிச்சு நம்ம குறைகள்,குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்  அடுக்கப்படும்...
அது நம்மளோட குறையில்ல...ஆனா நம்மளோட குறையா அவங்க நினைச்சுப்பாங்க...என்ன கொடும சரவணா இது???

இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் அதாவது நம்ம பெரியவங்க சொல்ற டயலாக்ஸ்னு நினச்சா அதுதான் தப்புங்கிறேன்...
இந்த யூத்துகள்தான் இப்பிடி...நம்ம பெரியவங்க ரொம்ப நல்லவங்க...

உங்களுக்கு நீங்க ரோல்மாடலாவே இருங்க..அது ரொம்ப நல்லது..ஆனா மத்தவங்களுக்கும் நீங்க ரோல்மாடலா இருக்கணும்னு நினைக்காதிங்க..அது அவங்களுக்காவே தோணனும்..உங்க நடத்தைகள் ஒவ்வொன்றுமே அதை தீர்மானிக்கும்...உங்க செயல்கள் செய்யவேண்டியத உங்க வார்த்தைகள் செய்தா அதுக்கு மரியாதையும் இல்ல..பலனும் இல்ல...ஆக நீங்க சொல்ற ஒவ்வொன்றும் உங்களை கீழ்தான் தள்ளிவிடும்....

நமக்கு நாம நல்லவங்களா இருப்போம்...மத்தவங்களுக்கு நல்லது செய்யணும்னா,செய்யமுடியும்னா செய்வோம்...
அது நல்லது..

அதைவிடுத்து  நல்லதுசெய்றதா காட்டி மத்தவங்கள காயப்படுத்துவது ரொம்ப மோசமான பாவ காரியம்..

நம்ம சின்னப் புன்னகையே மத்தவங்கள காயப்படுத்தக்கூடாதுன்னு சொல்ற நேரம் நாம வார்த்தைகளால் குத்திக் கிளறினால்?

வாய்க்கு வந்தபடி நாம கதைக்கிற வார்த்தைகளைப்போல வலிக்கச்செய்றது ஒண்ணுமே இல்ல...

அந்தக் கண்ணீர் தரும்  வலி தாங்கமுடியாதது...
அதை  நாம எதுக்கு மத்தவங்களுக்கு கொடுக்க நினைக்கிறோம்?

இனியாவது உங்களுக்கு நல்லவங்களா இருக்கிற நீங்க மத்தவங்களுக்கும் நல்லவங்களா இருக்கப்பாருங்க....

############################################




Saturday, February 18, 2012

பத்தில் தொடங்கி - ஒண்ணுல முடிஞ்சு - ஒண்ணுமே இல்லாமப்போகுதே!!!!

பத்தில தொடங்கி ஒண்ணுல முடியிறதுதான் கல்யாணம்னு சொல்லிக்கேட்டிருக்கேன்...

ஆனா அது ஒண்ணுமே இல்லாமப்போறது ஏன்னு புரிய மாட்டேங்குது...

பத்துப்பொருத்தம்,ஒன்பது கிரகங்கள்,எட்டுத்திசைகள் இப்பிடின்னு போய் ஈருடல்,ஒரு மனமா முடியிறதுதானாம் கல்யாணம்...

இடையில அந்த எண்களுக்குரிய விஷயங்கள் ஞாபகம் வரல..கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது.இரண்டு மனங்கள,இரண்டு குடும்பங்கள இணைக்கிற அந்த பந்தம் இப்பெல்லாம் அதற்குரிய முக்கியத்துவத்தை ,புனிதத்தை  இழந்திற்று..


நம்ம தமிழ் சமுதாயத்தில திருமணம் ரொம்பவும் புனிதமானதா,பெருமையானதா பார்க்கப்படுது..

இந்துக்கள் அதுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,அதனோடு தொடர்புபடுத்தி செய்யும்  சடங்குகளும் அதிகம்..கலாசாரமும்,மதமும் எங்க வாழ்க்கையோட இணைந்த நிலையில் திருமணத்தை நம்ம பெரியவங்க ஏழேழு ஜன்மத்துக்கும் தொடரும் உறவா பார்த்தாங்க...
ஆனா இப்பெல்லாம் அந்த உறவு ஏழு நாளைக்கு நீள்றதே கஷ்டமா இருக்கு.. 


திருமணம் பத்தியே யோசிக்காத நிலையில விவாகரத்துப்பத்தி எழுதிறன்..

கொஞ்ச நாளா நான் அதிகமா யார்மூலமாவது விவாகரத்துப்பத்தி கேள்விப்படுறேன்..அவங்க எனக்கு சம்மந்தமே இல்லாதவங்க..ஆனாலும் ஏன் இப்படி பண்றாங்கன்னு புரியல..அவங்களுக்கு என்ன பிரச்சினையோ??

வெளிய இருந்து பாக்கிறவங்க நாம..நமக்கு நாலு சுவர்களுக்குள் நடந்த எதுவுமே தெரியாது.
 அந்த வாழ்க்கைய வாழ்ந்தவங்களோட வலியும்,வேதனையும் நமக்குத் தெரியாது..
மனக்காயங்களோட வடுக்கள நம்மளால பார்க்கமுடியாது.

தலையிடியும்,காய்ச்சலுமே தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்ற நேரம்,ஒரு வாழ்க்கைய வாழ்ந்து அதால அவங்க அனுபவிச்ச துன்பங்கள நம்ம அனுபவிக்காம எப்பிடி வலிய அளவிடமுடியும்????



இப்போ விவாகரத்து சரியா?தவறா? ன்னு நான் பேச வரல.அளவிடமுடியாம பெருகிக்கொண்டிருக்கும் அதன் பின்னணியில் என்ன இருக்குன்னுதான் எனக்கு புரியல..


இன்றைய என் மனநிலையில் நான் வளர்ந்த விதத்தில் விவாகரத்து எனக்கு தவறாகவேபடுகிறது..

அப்பா -அம்மா,சித்தி -சித்தப்பா,மாமா -மாமின்னு நாம பார்த்த உறவுகள் திருமணத்தில் ஒருமனமா வாழும்போது விவாகரத்து சரின்னு சொல்றதுக்கு மனசு வருமா?அனுபவிக்கும்வரை நெருப்பு சுடும்கிறத நம்ப முடியிறதில்ல...


பொண்ணுக்கு ரொம்பத்திமிர் போல,
பையனுக்கு நிறைய கெட்ட பழக்கம்போல,
படிச்ச திமிர்,
பணத்திமிர்,
அகம்பாவம்,
மாமியார் கொடுமை,
வரதட்சணைக்கொடுமை....
இப்பிடின்னு நினைச்சிட்டு நம்ம பாட்டில போய்க்கிட்டே இருப்போம்...

விட்டுக்கொடுப்பும்,புரிந்துணர்வும் இல்லாதபோது,சகிப்புத்தன்மை ஜீரோ லெவெலுக்குவரும்போது ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கபடுவது மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய,ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை..


எத்தனையோ வருடங்களாக தவறாகப்பட்ட விவாகரத்து இப்போ ரொம்பவும் சகஜமாயிடுச்சு...

"சாரி...பிரிஞ்சுடலாம்"னு சிம்பிளா முற்றுப்புள்ளி வச்சிடறாங்க...என்னதான் நடக்குது?எங்கிருந்து பிரச்சினை மையம் கொள்கிறது?

திருமணம்கிற கோட்டைக்கு உள்ளே இருக்கிறவங்களுக்கு வெளியே வரத்தோணுது...ஆனா வெளிய இருக்கிறவங்களுக்கு உள்ளபோக பிடிக்குது...


இப்பெல்லாம் எல்லாருமே ரொம்பவும் படிக்கிறாங்க..
ரொம்ப சம்பாதிக்கிறாங்க..
தன் கால்ல தன் சம்பாத்தியத்தில வாழறாங்க...

என்னால தனியா வாழமுடியும்னு நினைக்கும்போது நான் ஏன் மத்தவங்களுக்காக மாறணும்னு நினைக்கும்போது விவாகரத்து பெருகுகிறது...

நம்ம ஊர்கள்ல இதன் தாக்கம் குறைவா இருந்தாலும் நகரங்கள்ல ரொம்பவும் உயரத்தில இருக்கு.அவசர வாழ்க்கையில கணவனும், மனைவியும் மனம்விட்டுப்பேச நேரமே இல்லாதபோது யாரு யார புரிஞ்ச்சுக்கிறது????

புரிதல் இன்றி ஏற்படும் சண்டைகள் இடைவெளிய ஏற்படுத்திடுது...கோவிச்சிட்டு பெட்டிய தூக்கவச்சிடும்...


சின்ன விரிசல் வந்தப்புறம் நான் முதல்ல பேசுறதா?
ம்ஹ்ம்...அவரே பேசட்டும்...
நான் என்ன போறது???அவரா வந்து கூப்பிடட்டும்.....
கோவிச்சிட்டுப்போனவள நான் என்ன போய்க்கூப்பிடுறது?

இப்பிடின்னு ஈகோ தலைதூக்கிடும்...அப்புறம் என்னதான் செய்றது???

தூரம் கூடுமே தவிர குறையாது..தூரம் கூட நாக்கின் வேகமும் கூடிடும்..என்ன பேசுறோம்னு அவங்களுக்கே ஞாபகம் இருக்காது...வார்த்தைய வீசி எறிஞ்சப்பிறகு  பொறுக்க முடியிறதில்ல... 


பையனும்சரி,பொண்ணும்சரி குடும்பத்தில இருக்கும்போது செல்லமா அன்போட வளர்றாங்க..என்னதான் நாம முரண்டு பிடிச்சாலும்,கோபப்பட்டாலும்,பிரச்சினை செய்தாலும் நமக்காக விட்டுக்கொடுத்தே போறாங்க பெத்தவங்களும்,சகோதரங்களும்...

கோபமா பேசாம இருந்தாக்கூட ஒரு வலி,வேதனையா இருக்கும்போது தானாடாட்டாலும் தன் சதையாடிடும்..ஆக பிரச்சினை அத்தோட மறந்திடும்..

ஆனா கல்யாண வாழ்க்கையில இது சரிப்படாது...என்னோட ஆசைகள் மத்தவங்களுக்கு வெறுப்பா இருக்கும்..என் பழக்கவழக்கங்கள் மத்தவங்களுக்கு முரணா இருக்கும்...அவங்களுக்கு ஏத்தமாதிரி நாம நம்மள மாத்திக்கிட்டா பிரச்சினைக்கே வழியில்ல..நான் இப்பிடித்தான்னு நினச்சா முதலுக்கே நட்டம் வந்திடும்...ஒரு வீட்டில வாடகைக்கு குடியிருக்கும்போது ,அந்த வீட்டில இருக்கப்போகும் கொஞ்சக்காலத்துக்கும் எந்தப் பிரச்சினையுமில்லாம இருக்கணும்னு வீட்டுக்காரருக்கு பிடிச்சமாதிரி நம்மள மாத்திக்கிட்டு நடக்கும்போது....காலகாலத்துக்கும் வாழப்போகும் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்து,புரிஞ்சு,சகித்து நடந்துக்கிட்டா சுமூகமா வாழ்ந்திடலாம்..


எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையில நிறைய காயப்பட்டிருக்காங்க..மனசளவில் மட்டுமில்லாம உடலளவிலும்கூட...போராட சக்தியில்லாம உயிரோட இருந்தாப்போதும்னு சட்ட ஆலோசகர்கள நாடின பெண்கள் எத்தனையோ எத்தனையோ...தன் குழந்தைய நல்லபடியா வளர்க்கணும்கிறதுக்காக தன் தாலிய களட்டினவங்க எத்தனையோபேர்...

இவங்க விஷயத்தில விட்டுக்கொடுப்பு,புரிந்துணர்வுக்கெல்லாம் இடமில்லை...
இங்கு விவாகரத்து சரியானது....


என் பேச்ச கேட்கிறாரில்ல...அவங்க தங்கச்சிக்கே எல்லாத்தையும் கொடுக்கிறார்..அவருக்கு எல்லாத்துக்கும் அவங்க அம்மாதான்....
நான் ஒண்ணு சொன்னா செய்றாளா அவ...எப்பபாரு ஊர்ர்க்கதயளக்கிறதே அவளுக்கு வேலையாப்போச்சு....நிம்மதியா டிவி பார்க்கமுடியல..எப்பபாரு சீரியல்....இப்பிடின்னு நடக்கிற விவகாரத்துகள்தான் பெருகுது....


என்னதான் சமூகம் பெண்கள் பக்கம் கருணைகொண்டு கணவன்களைத்திட்டினாலும் பெரும்பாலும் பிரச்சினைகள் மனைவியால்தான்...

வீட்டில் நிம்மதியில்லாதபோது கணவன் மனைவியிடம் நேசத்தைவிட கோபத்தையே காட்டுவான்...அதுக்காக ஆண்கள் எல்லோரும் சுத்தாத்மாக்கள் இல்ல..மனைவிய ஏமாற்றும் கணவன்களாலும் பிரச்சினைதான்...

விவாகரத்து சரியா???தவறான்னே ஒரு முடிவுக்கும்  வரமுடியல....
கணவன் -மனைவியெனும் வாழ்க்கைக் கண்ணாடி உடையும்போது கீறல்படுவது குழந்தைகளின் மனங்களே.....அத அந்த கணவன் -மனைவி புரிஞ்சுக்கிறதவிட தாயும்- தகப்பனும் புரிஞ்சுக்கிட்டா சுபம்...




##########################################################