Pages

Sunday, August 19, 2012

Ishq -தெலுங்கு விமர்சனம்


நிதின் -இப்போ எனக்குப் பிடித்த தெலுங்கு ஹீரோக்களுள் இவரும் ஒருவர்.



மகேஷ் பாபுவிற்குப் பிறகு எனக்கு ரொம்ப பிடிச்ச தெலுங்கு ஹீரோ.அதுவும் இந்தப்படத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவு கியூட்.ரொம்ப ஹாண்ட்சம்மாவும் இருக்கிறார் நிதின்.அவரின் தொடர்ச்சியான பல தோல்விகளை தூக்கி சாப்பிட்டிருக்கிறது இஷ்க்.இந்த வருடத்தில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் இது.


விக்ரம் கே குமார் இயக்கத்தில் நிதின்,நித்யா மேனன்,அஜய்,சிந்து துலானி,ரோகினி நடித்திருக்கும் படம்தான் இஷ்க்.


சிம்பிளான கதை பொருத்தமான நடிகர்கள்,இயல்பான நடிப்பு,சிறந்த ஒளிப்பதிவால் பலம் பெறுகிறது.

பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என்றால் சொல்லவும் வேணுமோ?காட்சிகள் அவ்வளவு அழகும்,குளுமையும்...


விமான நிலையம் செல்லும் வழியில் நாயகியை பார்க்கிறார் நாயகன்.கண்டதும் காதல்..அதே போல் நாயகனையும் கவனிக்கிறார் நாயகி.அவரின் தொப்பியைத்தான் அவரால் இனம் காண முடிகிறது.முகம் மிஸ்ஸிங்.


இருவரும் ஹைதராபாத் போகும் விமானாத்திற்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.இருவருக்கும் உரசல் ஏற்பட்டுக்கொள்கிறது.தவிர்க்கமுடியாத காரணத்தால் விமானம் ஹைதராபாத் செல்லாமல் கோவாவில் தரையிறக்கப்படுகிறது.மீண்டும் ஹைதராபாத் போகவேண்டிய இடைப்பட்ட நேரத்தில் இருவரும் நட்பாகி,காதலராகிறார்கள்(இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..ஆனா சொல்ல வேண்டியது கடமையோன்னோ?)


ஹைதராபாத்திற்கு காதலர்களாக செல்லும் ஜோடி நித்யாவின் அண்ணன் அஜயை கண்டவுடன் டுவிஸ்டுடன் திரும்புகிறது.ஏனெனில் நிதின் - அஜய் இருவருக்கும் ஏற்கனவே பகை.காரணம் நிதின் அக்கா சிந்து துலானி.
என்ன பகை?எப்படி பகையை முறியடித்தார்?நிதின் எப்படி அஜய் மனதை மாற்றினார்?நித்யா மேனனை கைப்பிடித்தார் என்பதே படம்.


நிதினுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம்.துள்ளலா,சுறுசுறுப்பா ஜாலியா சுத்திட்டே இருக்கார்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.நித்யா மேனனிடம் வழியும் காட்சிகளிலும்,அஜயோடு தில்லாலங்கடி செய்யும் காட்சிகளிலும் நிதின் ஸ்கோர் செய்திருக்கிறார்.


நித்யா மேனன்.சொல்லவே வேணாம்.அவ்வளவு அழகு.அந்தக் கண்களே போதும்.ஜோ இடத்தை நிரப்ப இவர் போதும்.  நித்யா மேனன் காஸ்டியூம்ஸ் அழகோ அழகு.


சித்தார்த் -180,நானி -வெப்பம்,அலா மொடலைண்டி,நிதின் -இஷ்க் என்று இவர் யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அந்த நடிகருடன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவது இவருக்கு மிகப்பெரிய பிளஸ்.


நித்யா மேனன் இனசன்ஸ்,துள்ளல்,சிரிப்பு எல்லாமே அழகு.இப்போதைக்கு எனக்குப் பிடித்த அழகான நடிகை.கியூட்டான நடிகை.செக்சியா உடுக்காட்டியும் கிளாமரான நடிகை.


நிதினுக்கும் -இவருக்குமிடையே உயரம்தான் கொஞ்சம் மைனஸ்.ஆனால் அதுவும் ஒரு அழகு.


இசையும் படத்திற்கு பிளஸ்சாகவே அமைந்திருக்கிறது.இசையமைப்பாளர் அனூப் அரவிந்தின் பாடல்கள்,பின்னணி இசை இனிமை.


குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய பீல் குட் மூவிதான் இஷ்க்.


######################################################

Thursday, August 16, 2012

Ala Modalaindi -தெலுங்கு விமர்சனம்


"நான் ஈ" படத்தைப்பார்த்த பிறகு நான் நானி மேல் கவரப்பட்டேன்.அதன் பிறகு  நானியின் படங்களை தேடியபோது பார்த்த படம்தான் இந்த
"அலா  மொடலைண்டி"

நிஜமாவே ஜாலியான ஒரு காதல் கதை.


காதலில் தோற்ற கெளதம் மற்றும் நித்யா ஒரு திருமணவிழாவில் சந்தித்து,நட்பாகி,பின்னர் காதலர்களாகுவதுதான் கதை.


குடும்பத்தோடு உட்கார்ந்து ஜாலியா பார்க்ககூடிய பீல்குட் படம்தான் இது.நானி -நித்யா மேனன் ஜோடி சூப்பர்.ரெண்டு பேருக்குமே பக்கத்து வீட்டு பையன்,பொண்ணு போன்ற தோற்றம்.அழகா கதையோடு பொருந்தி நடித்திருக்கிறார்கள்.


"நான் ஈ" படத்திலேயே நிறைய பொண்ணுங்க "நானி" ரசிகைகள் ஆகிட்டாங்க.இந்தப்படம் 2011இல் வெளிவந்த படம்.ஆனா எனக்கு இந்தப்படத்தில்தான் நானி ரொம்ப அழகா இருக்கிறார்.


நாயகன் அம்மாவாக ரோகினி இயல்பா வந்து போகிறார்.


கிளைமாக்ஸ் கல்யாண கலாட்டாவும்,குடிகாரனின் நடிப்பும் செம.
ஹட்ச் டோக்  சான்சே இல்லை.கியூட்.


இது போன்ற முக்கோணக்காதல் கதைகள் நீங்கள் பலவற்றை பார்த்திருந்தாலும் இது புதுசு.


சினேகா உல்லால் அழகான தமிழ் பெண்ணா வந்தாலும் 
ஜொலிப்பதென்னவோ நித்யா மேனன்தான்.


பேசும் அந்தக் கண்களே நித்யாவிற்கு கொள்ளை அழகு.


அரைத்த மசாலாவையே அரைக்காமல் இயல்பாக நரேட்டிவ் ஸ்டைலில் படத்தை கொண்டு செல்வது இயக்குனரின் வெற்றி.


இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு ஒரு சபாஷ்!!!!


அழகான,ஜாலியான காதல் இந்த கதை.


கதாபாத்திரங்களும் அருமை. 


பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
###########################################

Tuesday, August 14, 2012

Nenu Naa Rakshashi -தெலுங்கு விமர்சனம்

"லீடர்" ராணாவின் மாஸ் படம்.
அறிமுகப்படத்திலே அலட்டலில்லாத அளவான நடிப்பால் மனம் கவர்ந்தவர் ஹீரோ  ராணா .தெலுங்குப் படவுலகின் அசத்தல் அழகி இலியானாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் இந்த படம்.படத்திற்கு கூடுதல் பிளஸ் இயக்குனர்  பூரி ஜகன்னாத்.



அபிமன்யு ஒரு ப்ரொபிஷனல் கில்லெர்.தன் மொபைலுக்கு  வரும் எம்எம்எஸ் மனித முகங்களை கேள்விஎதுவுமின்றி கொல்லும் மனிதன்.


தற்கொலை செய்ய விரும்பும் மனிதர்களின் தற்கொலைகாட்சிகளை படமெடுத்து,அதனை பதிவேற்றி வெப்சைடாக நடத்துபவர் மீனாட்சி.இவர்கள் இணையும் கோடும்,காதலும்தான் இந்த படம்.



இலியானா தற்கொலை செய்வதாக விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தை,திரைக்கதை மோசம் செய்துவிடுகிறது.ரானாவிற்கு உடலை முறுக்கேற்ற தெரிகிறதே தவிர நடிப்பை காணோம்.சாருக்கு அழவே தெரியல.பெரிய இடத்து பசங்கல்லாம் அழுவாங்களா என்ன??இலியானா அதே காமாலைக்கண்ணோடு வந்து போகிறார்.ஒரு பிரெஷ்ணஸ் இல்லவே இல்லை.




முமைத்கானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமோ?அங்கங்கு வந்து போகிறார்.
பிரம்மானந்தம் இருந்தும் பிரயோசனமில்லை.வெனிசுக்கு போறாங்க.இந்தியா வாறாங்க..ஒன்னும் புரியல..மொத்தத்தில தயாரிப்பாளர் செலவில் நல்லா ஊர் சுத்தியிருக்காங்க.பாவம் மனுஷன்.


பூரி ஜெகன்னாத்திற்கு என்று தெலுங்குப்படவுலகில் ஒரு தனி இடம் இருக்கிறது.
அதை மனிதன் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
அசத்தலாக ஆரம்பித்து சொதப்பலாக முடிந்திருக்கிறது படம்.
இசையும் ஏமாற்றிவிட்டது.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.




துப்பாக்கியை ஆளாளுக்கு கையிலெடுத்து ரசிகர்களை ஏமாற்றிவருகிறது இந்த சினிமா நிலவரம்.


பாக்காதவங்க தப்பிச்சுப்போங்கப்பா.....
#######################################################

Sunday, July 22, 2012

ஹிந்தி சினிமா -Department

இந்திய சினிமாவில் ராம்கோபால் வர்மாவிற்கென்று தனியிடமே இருக்கு.அவரோட திரைக்கதைக்கும்,அந்த ஸ்டைலுக்கும் படம் பார்க்கிறவர்களே அதிகம்.ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய படைப்பு இந்த டிப்பாட்மென்ட்.


எனக்கு ராம்கோபால்வர்மா படங்கள் பிடிக்காது.அவரின் படங்களில் இருக்கும் வன்முறையும்,ரணகளமும்,எல்லைமீறிய கவர்ச்சியும் எனக்கு எரிச்சல் தருபவை.இந்தப்படத்தை "ராணா"விற்காக மட்டும் பார்த்தேன்.

ராம்கோபால்வர்மாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட தாதாக்களும்,போலீசும்தான் திரைக்கதை..
தீவிரவாதத்தை ஒழிக்க தனியான ஒரு போலீஸ்படை அமைக்கப்படுகிறது.அந்த அமைப்பை பிரபல தாதாவின்  கையாள்  எப்படி கையாள்கிறான் என்பதே கதை.முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் அவை கொஞ்சமே.தன் பாணியில் அவற்றை வித்தியாசமாக படைத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.

அமிதாப்பச்சன் கலக்கியிருக்குறார்.யாரையோ நையாண்டி செய்வதுபோன்ற பாத்திரம்.

சஞ்சய் தத்திற்கு சுடுவதை தவிர வேலையில்லை.சும்மா வந்து சுட்டிற்று போகிறார்.

ராணாவிற்கு நடிக்க களம் இல்லை.
முகத்தில் எந்த எக்ஷ்பிரஷனும் இல்லை.
உடம்பைத்தவிர வேறு பிளஸ் இல்லை.
சுட்டிற்றே இருக்கார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.


மதுஷாலினி அநியாயத்திற்கு அவ்வளவு கவர்ச்சி.


வில்லிஎன்றாலே கவர்ச்சியான காரெக்டர் என்று எழுதிவைத்துவிட்டார்கள்.


டுவிஸ்டு இருக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்காங்க.இருந்தும் பயனில்லை.இப்பிடி சுட்டிற்றே இருக்கும் சினிமா கலாச்சாரத்தை எப்போ ஒழிக்கப்போறாங்களோ தெரியல.உண்மையை சொன்னா படத்தில் சுவாரசியமே இல்லை.

இந்த அண்டர்வேல்ட் படங்கள் பார்த்துப் பார்த்து சலித்துப்போன சினிமா ரசிகனுக்கு எப்போ விடுதலை கொடுக்கப்போறாங்களோ இந்த இயக்குனர்கள்??

#############################################

Saturday, June 16, 2012

மகதீராவின் மறுஜென்மம்

காதல் வாழ்க்கையில் அனைவரும் கடந்து செல்லும் ஒரு பகுதி..சிலர் எப்பிடியோ அதை  தவறவிட்டிருப்பாங்க..
அவங்களுக்காக கடவுள் கொடுக்கும் இறுதி வாய்ப்புதான் திருமணம்.அதையும் தவறவிட்டா சொல்வதற்கில்லை.


நிறையப்பேருக்கு கனவுத்தொழிற்சாலையா இருக்கும் காதல் சிலருக்கு மனநலமருத்துவமனையாவும் மாறியிருக்கு.எல்லாக் காதலும் திருமணத்தில் முடிச்சிடப்படுவதில்லை..முடிவதில்லை 

சில காதல் வாழும்,சில காதல் சாகும்..
சில காதல் வாழ்வதும் சாவதும் ஒண்ணுதான்.
காதலில் சொதப்புபவர்கள் கல்யாணத்தில் சொதப்பமாட்டாங்க..


காதலும்,திருமணமும் ஒன்றோடு ஒன்று ரொம்ப நெருங்கியது..எல்லாரும் என்னதான் காதலிச்சாலும் கணவன் - மனைவி காதல்தான் எப்பிடியும் இறுதிவரை பயணிப்பது.


ஆனா அந்த திருமணத்திலும் சொதப்புபவர்கள் இருக்கத்தான் செய்றாங்க.
நடிகர்கள் நல்லா நடிப்பாங்களோ இல்லையோ,நிஜத்தில் ரொம்பவும் ஓவர்அக்ட் பண்ணிப்பாங்க.அவங்க வாழற வாழ்க்கை சம்பாதிக்கவும்,பப்ளிசிட்டிக்காகவும் மட்டும்தான் செலவு செய்யப்படும்.வாழ்க்கையையும் பிஸ்னசாகப்  பார்க்கும் உலகில் திருமணத்த அடவு வைத்து வாழ்வை இழந்தோர் பலர்..சிலர் கண்காணாமலேபோயிட்டாங்க. 


சில ஹீரோக்களைப்பார்த்தால் சூப்பெரா இருப்பாங்க.நல்லாவும் நடிப்பாங்க..அவர்களுக்கென்று ஒரு கூட்டம் அதுவும் பெண் ரசிகைகள் அளவில்லாம இருப்பாங்க.எந்த மகராசியை கல்யாணம் பண்ணிப்பானோன்னு நெனைக்கிற நேரம் சுப்பம்மாவையோ குப்பம்மாவையோ கட்டிக்கிட்டு வந்து நிப்பாங்க.காதல் இளவரசன் பிரஷாந்த் இப்பிடித்தான் பண்ணி நாசமாப்போனாரு.



தெலுங்கு ஹீரோக்கள் எல்லாமே சமீபகாலமா டும்டும் வாங்கிட்டு இருக்காங்க.

என்டிஆர் - லட்சுமி பிராணாதி 

அழகும் அழகும் சேர்ந்தால் பேரழகு.சிலருக்கு அமையுது.பலரை ஏங்க வைக்குது.

அல்லு அர்ஜுன்  - சினேகா ரெட்டி

இப்போ ராம்சரன்தேஜா.அப்பலோ மருத்துவமனை தாபகரின் பேத்தி உபசானாவை திருமணம் செய்திருக்கிறார்.

கல்யாண செட்டாம் 

கல்யாண சீதனம் நூறு கோடியாம்.அல்லு அர்ஜுனோடு போட்டி போட்டு வாங்கியிருக்கார்.பொதுவாவே இந்த தெலுங்கு கனவான்களோட கல்யாணம் அவங்க படங்களைப்போலவே கலர்புல்லா இருக்கும்.ரொம்ப ஆடம்பரமா,ரொம்ப ஜொலிஜொலிப்பாபண்ணுவாங்க.

என்டிஆர் கல்யாண விழா 

ஹீரோக்களைப்போலவே அவங்க சம்சாரங்களும் சூப்பெரா இருப்பாங்க.அவங்க இமேஜை காட்டுவதாய் இருக்கும் அவர்கள் கல்யாணம்.

அல்லு அர்ஜுன் திருமணம் 

ராமசரண் மனைவி உபசானா மட்டும் கொஞ்சம் விதிவிலக்கா பேசப்படுறாங்க.பணம் இருக்கும் இடத்தில் அழகும் இருக்கும்.ஆனா இங்க என்னவோ சொதப்பல்..

ராம்சரண் தேஜாவின் மனைவி உபாஸ்னா காமினேனி

பொண்ணு அலங்காரம்கூட ஏதோ மாதிரியா இருந்தது.நாங்க பணக்காரங்க..என்னவோ பண்ணிக்கிறோம் போல..என்னவேணா  பண்ணிப்போம்.. (நாங்கல்ல பார்க்கிறது??)


பணத்துக்காக அடமானம் வைத்தாரா?அந்தஸ்துக்காக அடமானம் வைத்தாரா?அப்பா ஆசைக்காக அடமானம் வைத்தாரா?


வாழ்க்கையும் நடிப்புன்னா எப்பிடி வாழ்றது?????

என்டிஆர் மனைவி -லக்ஷ்மி

அல்லு அர்ஜுன் மனைவி - சினேகா ரெட்டி,


ராம்சரண் மனைவி -உபாஸ்னா 

அவசரத்தில் முடிவெடுத்திற்று அப்புறமா யோசிச்சு ஒரு பயனுமில்ல..சரி.சரி..இனி என்னதான் பண்றது?மனமொத்து வாழவேண்டியதுதான்..


வாழ்க பல்லாண்டு !!!!!!


###########################################################