Pages

Sunday, May 11, 2014

QUEEN - சினிமா விமர்சனம்


QUEEN!



தலை நகரங்களில் படித்து உழைக்கும் பெண்ணாய் வாழும் நமக்கு கட்டுப்பெட்டித்தனமாய் வாழும் பெண்களின் நிலையும், அவர்களின் மனக்குமுறல்களும், அவலங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...ஆனாலும் தெருவிலோ, உறவிலோ அப்படியொரு பெண்ணை சந்திக்கையில் அந்தப் பெண்ணின் இயல்பும், பழக்கவழக்கங்களும் நமக்கு புதுமையாய் யோசிக்கவைக்கும்.

சில நேரம் நமக்கொரு கவலை, வீட்டில் "பொம்பிளைப்பிள்ளையாய் அடக்க ஒடுக்கமா இருக்கவேணாமா" என்ற கேள்விகள் முளைக்கையில் நாமும் சிந்திக்கிறோம்......

"பொண்ணுன்னா சும்மாவா????" இந்த ஆண்கள்தான் நம்மை தலைமை தாங்க வேணுமா? பெண் என்பவள் ஆணை சார்ந்து நிற்பவள் என்பது பல வருடகாலமாய்...ஏன் பல தசாப்தங்களாய் நிலைத்துநிற்கும் ஒன்று..

#################################################################################


ஓர் திருமண வீடு.....

நெடுநாள் காதலர்கள் மணம் புரிய இருக்கும் வேளை...

பெண்வீட்டில் எல்லோரும் ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு காதலன் காதலியிடம் சொல்கிறான் நாம் திருமணம் பண்ணமுடியாது!!!

லண்டன் போய் படித்து உழைக்கும் ஆணுக்கு இப்போ இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை பிடிக்கவில்லையாம்.....
"நான் உனக்கேற்றபடி மாறுகிறேன்,நீ சொல்லும்படியெல்லாம் கேட்கிறேன் "என்று கெஞ்சி கதறுகிறாள் நாயகி...

பயனில்லை...

திருமணம் நின்றது!!!!


தன் கணவனோடு தான் போய்ப் பார்க்கவிரும்பிய அந்த அழகான நகரத்திற்கு ஹனிமூன் டிக்கெட் எடுத்துவைத்திருந்த நாயகியின் மனம் டிக்கெட்டிலே உழன்றது. தன் நெடுநாள் ஆசையின்படி தான் ஹனிமூனிற்கு போக ஆசைப்பட்ட டிக்கெட்டில் பாரிஸ் போகிறாள்.

கலாசாரத்தோடும், குடும்பக் காவலிலும் அடைபட்ட பெண் வெளியூர் காற்றை சுவாசிக்கிறாள்....



மற்றவர்கள் நம்மை பார்த்துக்கொள்ள இருக்கிறார்கள் என்ற நிலை மாறி தன் காலில் நிற்க முற்படும்போது வரும் தைரியம் எதற்கும் துணியும்..புது மனிதர்களையும், அவர்கள் பழக்கங்களையும் பார்க்கும் நாயகிக்கு தைரியம், வாழ்வின் நிதர்சனம் புரிகிறது...



ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் கங்கனா ரனாவத்...



சில பல காட்சிகள் கமெர்சியல் சினிமா...

 தேவையற்றவைகள் புகுந்திருந்தாலும் திரைப்படம் அருமை.....



நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம்.....
பெண்கள் பார்க்கவேண்டியதும்கூட.....


#####################################################################

Friday, May 9, 2014

The Lucky One



அழகான காதல் கதை ..... THE LUCKY ONE !


கணவனைப்பிரிந்து தன்   மகனுடனும், பாட்டியுடனும் வாழும் பெண் தனக்கான ஓர் ஆடவனை விதிவசத்தால் சந்திப்பதும், எதிர்நோக்கும் சவால்களும் நிறைந்ததே இந்தப்படம்.


பொலீஸ் கணவன், மாமானார் நீதிபதி.....ஆனாலும் தனித்த வாழ்வு....அண்ணன் இராணுவத்தில் உயிரிழக்கிறார்...
போர்க்களத்தில் அண்ணன் தொலைத்த நாயகியின் படத்தை  எடுக்கச்செல்லும் நாயகன் அதிசஸ்டவசத்தால் உயிர் பிழைக்கிறார்.
தன் உயிரைக் காப்பாற்றக் காரணமான படத்துடன் நன்றிசொல்ல நாயகியை தேடிவரும் ஹீரோ கண்டதும் காதல் கொள்கிறார்.




சினிமாவிதிகளின்படி முதல்கணவன் எதிரியாகிறார்....பிரச்சினைகள் எழுகின்றன......பின்னர் என்ன நடந்தது என்பதை அழகாக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


குழந்தைகளுக்காகவே வாழ்வில் பலதை தியாகம் செய்கிறார்கள் தாய்மார்.....பெற்றோரின் பிரிவுகளில் பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் மன அழுத்தங்கள் என்று அழகான, அருமையான கதை.

ஹீரோ புதுமுகம்.....பாத்திரத்தோடு பொருந்திப்போகிறார்.....பல இடங்களில் அதே உம்மூஞ்சியோடு இருப்பதுதான் கொஞ்சம் நெருடல்.....



பாட்டியும், சுட்டிப்பையனும் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.....குறைவான பாத்திரங்களோடு நிறைவாக செய்திருக்கிறார்கள்.




பார்க்ககிடைத்தால் நீங்களும் அதிஸ்டசாலியே!!!!