இந்திய சினிமாவில் ராம்கோபால் வர்மாவிற்கென்று தனியிடமே இருக்கு.அவரோட திரைக்கதைக்கும்,அந்த ஸ்டைலுக்கும் படம் பார்க்கிறவர்களே அதிகம்.ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய படைப்பு இந்த டிப்பாட்மென்ட்.
எனக்கு ராம்கோபால்வர்மா படங்கள் பிடிக்காது.அவரின் படங்களில் இருக்கும் வன்முறையும்,ரணகளமும்,எல்லைமீறிய கவர்ச்சியும் எனக்கு எரிச்சல் தருபவை.இந்தப்படத்தை "ராணா"விற்காக மட்டும் பார்த்தேன்.
ராம்கோபால்வர்மாவிற்கு மிகவும் பழக்கப்பட்ட தாதாக்களும்,போலீசும்தான் திரைக்கதை..
தீவிரவாதத்தை ஒழிக்க தனியான ஒரு போலீஸ்படை அமைக்கப்படுகிறது.அந்த அமைப்பை பிரபல தாதாவின்
கையாள் எப்படி கையாள்கிறான் என்பதே கதை.முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் அவை கொஞ்சமே.தன் பாணியில் அவற்றை வித்தியாசமாக படைத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.
அமிதாப்பச்சன் கலக்கியிருக்குறார்.யாரையோ நையாண்டி செய்வதுபோன்ற பாத்திரம்.
சஞ்சய் தத்திற்கு சுடுவதை தவிர வேலையில்லை.சும்மா வந்து சுட்டிற்று போகிறார்.
ராணாவிற்கு நடிக்க களம் இல்லை.
முகத்தில் எந்த எக்ஷ்பிரஷனும் இல்லை.
உடம்பைத்தவிர வேறு பிளஸ் இல்லை.
சுட்டிற்றே இருக்கார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.
முகத்தில் எந்த எக்ஷ்பிரஷனும் இல்லை.
உடம்பைத்தவிர வேறு பிளஸ் இல்லை.
சுட்டிற்றே இருக்கார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.
மதுஷாலினி அநியாயத்திற்கு அவ்வளவு கவர்ச்சி.
வில்லிஎன்றாலே கவர்ச்சியான காரெக்டர் என்று எழுதிவைத்துவிட்டார்கள்.
டுவிஸ்டு இருக்கணும்கிறதுக்காகவே வச்சிருக்காங்க.இருந்தும் பயனில்லை.இப்பிடி சுட்டிற்றே இருக்கும் சினிமா கலாச்சாரத்தை எப்போ ஒழிக்கப்போறாங்களோ தெரியல.உண்மையை சொன்னா படத்தில் சுவாரசியமே இல்லை.
இந்த அண்டர்வேல்ட் படங்கள் பார்த்துப் பார்த்து சலித்துப்போன சினிமா ரசிகனுக்கு எப்போ விடுதலை கொடுக்கப்போறாங்களோ இந்த இயக்குனர்கள்??
#############################################





