நாம் இவ்வுலகில் ஜனனம் எடுக்கிறோம்.ஜனனமே போராட்டங்களில் தொடக்கி அழுகையில் செயல்படத்தொடங்குகிறது.எத்தனையோ கருக்கள்.அந்த கருக்களோடு நாமும் ஒரு கருவாய் கருவறையில் முட்டி மோதி ஜெயிப்பதே எம் பிறப்பு.அன்றிலிருந்து சின்னச் சின்ன செயல்களிலும் முட்டி,மோதி பயணிக்கிறோம்.பிரம்மா படைக்கும் போது எப்படி அணுவணுவாய் அளவெடுத்து படைத்தானோ அதே போல துன்பங்களையும் அளந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறான்.கஷ்டம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் இதுவரை எழுதப்படவில்லை.லோர்ட் ஒப் த ரிங்க்சில் அரகோர்ன் கண்ட போராட்டங்களோ ,சாங்டமில் ஜோஷ் பட்ட துன்பங்களோ அனுபவிக்கவில்லை என்றாலும் எல்லாருக்கும் துன்பம் விதிக்கப்பட்ட ஒரு பாவம்..
எம் வாழ்க்கைப் பயணத்தில் பல மைல்களைக் கடக்க கடமைப்பட்ட நாம்,அன்றாட வாழ்க்கையில் சில கிலோமீட்டர்களை தாண்டவே மூச்சு வாங்குகிறோம்.அவ்வளவு கடினமான குன்றும்,குழிகளும்,அதல பாதாலங்களும் நிறைந்தது எம் பாதை.பயணிக்கும் பாதை காப்பெட் ரோடாக இருந்தால் யாரும் புலம்ப தேவையில்லையே?ஆனால் போடுவார்தான் யாருமில்லை.இந்த பாதைகள் போடப்பட்டவை.அதில் புத்திசாலித்தனமாக நடப்பதும்,சாதூர்யமாக நகர்வதும் எம் பொறுப்பு.அதில் கடினமிருப்பினும்,துயரம் இருக்காது.துயரம் எம்மோடு நடக்கும் சக பாதசாரிகளாலே.புயல் காற்றைத் தோற்றுவிக்கும் பூதங்களும் எம்முடனே,சுழிக்காற்றாய் அமுக்கும் சூட்சிக்காரர்களும் எம்முடனே...
எல்லாம் நானே.என்னை வெல்ல யாருமில்லை,நானே சகலமும் என்று வாழும் தலைக்கனம் பிடித்த பேய்கள் சில...
எம் போன்றவர்களின் சகவாசத்திற்கு இது சரிவராது என்று நாம் ஒதுங்கினாலும் தேடிவந்து உரசவும்,கொத்தவும்,கடித்துக் குதறவும் சில தயாராகவே இருக்கின்றன.ஏன் இப்படி என்ற கேள்வி தேவையற்றது.அவைதான் கொடூர கொடிய பாதாள உலகைச்சேர்ந்தவையே.
சேக்ஷ்பியர் என்றோ சொன்ன ஒரு வாக்கியம்."நரகம் வெறுமையாக உள்ளது..ஏனெனில் எல்லாக் கொடியவையும் இங்கேதான் இருக்கிறது"..அன்றே இந்தப் பூதங்களுடன் போரிட்டு வருந்தியிருக்கிறார் போல அந்தப் பேரறிஞர்.எப்படித்தான் நாம் இந்த காட்டேரிகளின் பார்வையிலிருந்து மறைய விரும்பினாலும்,மற்றையவனின் துயர வாடையை அனுபவித்து மகிழ எத்தனையோ ஜந்துக்கள்.புல்லாகி,புழுவாகியே நிற்கின்றன இன்னும்...
சந்தோசம் ஒருவனின் கண்ணில் தெரிந்தால் போதும்.அழையா விருந்தாளியாய் தேடிவந்து நலம் விசாரித்து,இல்லாத பொல்லாத குப்பைகளை அங்கு வீசியெறிந்து,தேவையான உணவை வலிந்து பெற்று உப்பு,புளி,காரம் சேர்த்து இன்னொருவனுக்கு படையலிட அலாதி பிரியம்.அந்தப்படையலை பங்கு பிரித்து பலருக்கு விருந்தோம்புவதில் மட்டற்ற மகிழ்ச்சி.அவனுக்காக யோசிக்கிறானோ இல்லையோ..மற்றவனின் அழிவைத் திட்டமிட தூக்கம் மறந்து யோசிக்கிறான்.இப்படிப்பட்ட பேய்களுக்கான பூச்சி கொல்லிகளை எங்கு பெற்று எப்போது வீசி எம்மை விடுவித்துக் கொள்வது?உங்களில் பலர் இந்தப் பேய்களோடு போராடிக்கொண்டிருப்பீர்கள்.சிலருக்கு தாக்கம் குறைவாக இருக்கும்.பலருக்கு வீக்கம் பலமாக இருக்கும்.என்ன செய்வது?வாங்கிக்கொண்டுவந்த வரம்.அனுபவித்துத்தானே ஆகணும்?என்ன உலகமடா இது?இந்த மனித இனம் என்று திருந்தி..........................
#####################################################################

நானே இப்படி இருக்கிறேன்.அப்புறம் அவங்க எப்படி அப்பிடி வாழலாம் என்று பொருமும் பூதங்கள் சில...
அவ அப்பிடி செய்யும்போது என்னால் முடியாதா என்ன?என்று வயிறெரியும் இரத்தக் காட்டேரிகள் சில..
அவள வாழ விட்டிருவனா என்ன என்ற பிசாசுகள் சில...
எத்தனை பேய்கள்..அதில்தான் எத்தனை வகைகள்.எல்லாம் எம் மனிதக்கூட்டத்தினரின் உறவுகளாய் வாழும் எம்மினமே..
சுயநலம் மிகுந்து போது நலம் அழிந்து மனிதாபிமானமே இல்லாது மிருகங்களாக வாழும் மனிதக் கூட்டத்தில்,பேய்,பிசாசுகளிடம் கடிபடாது,இரத்தம் சிந்த விரும்பாது ஓடிக்கொண்டிருக்கும் உங்களைப்போன்ற அப்பாவிகளில் நானும் ஒருத்தி..