இதுவும் கடந்து போகும் என்ற தலைப்பை பார்த்ததும் இங்கு ஏதோ சீரியசான விஷயம் இருக்குபோல என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாறுவீர்கள்...வாழ்க்கையில் எத்தனை விஷயங்கள் எங்களோடு பயணிக்கின்றன?எத்தனை மனிதர்கள்?எத்தனை சம்பவங்கள்?எத்தனை அனுபவங்கள்?எத்தனை சந்தோஷங்கள்?எத்தனை சுவடுகள்?எத்தனை ரணங்கள்?எத்தனை தோல்விகள்?எத்தனை?வெற்றிகள்?எத்தனை ஏமாற்றங்கள்?எத்தனை இழப்புக்கள்?எத்தனை சுய மதிப்பீடுகள்?எல்லாக்கேள்விக்கும் பதில் ஆயிரம் ஆயிரம்...சிலருக்கு அதிகமாகக்கூட இருக்கலாம்..
ஒவ்வொரு நாளும் எப்படி மறைகிறது,எப்படி கரைகிறது என்று தெரியாமலே கரைந்து மறைகிறது.அந்த ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரம் கடந்த பிறகுதான் இழந்த பொன்னான நேரத்தின் மதிப்பு எங்களுக்கு தெரிகிறது.அது எங்களோடு நகரும்போது அதன் பெறுமதி எங்களுக்கு தெரிவதே இல்லை.நாங்கள் மீளப் பெறமுடியாத அந்த மணித்துளிகளில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும்,சம்பவங்களும் மங்கி மறைவதும் எமக்கு எண்ண ஓட்டத்திலும்,நேர விரைவிலும் தெரிவதே இல்லை.எதுவும் இருக்கும்போது மதிக்கப்படுவதில்லைதானே?
தினமும் பல எண்ண அலைகளின் மத்தியில் எந்த அலை அதிகமாக எம் காலை வருடுகிறதோ,அதனையே அன்றைய நாளுக்கான சந்தோஷமாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து முடிக்கிறோம்.பிறகு என்றோ ஒரு நாள் ஒரு சுய மதிப்பீட்டில் ஈடுபடும்போது நாம் இழந்த நேரமும்,செய்ய மறந்த செயல்களும் மனக்கண்ணில் கோரைப்பற்களுடன் வந்து எம்மை உலுக்கிஎடுக்கும்.அந்த நேரம் தாழ்வுணர்ச்சி எம்மை வாட்டி,வதக்கி,வறுத்து,பொரித்து,துவைத்து எடுக்கும்.ஏன் இப்படி பொறுப்பற்று இருந்தேன்?என்ன வெட்டி வேலை செய்து என் நேரத்தை அழித்தேன்?பணம் தந்து,கஷ்டப்பட்டு படிக்கவைக்கும் பெற்றோரை ஏன் ஏமாற்றுகிறோம் என்ற கேள்வி தலையில் ஓங்கி அடித்து பலமாக பொறிகலங்க வைக்கும்..
சில நேரம் பொன்னான நேரத்துடன்,பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்துத் தந்த பணம் அல்லது நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணம்கூட வீணாக அரிக்கப்பட்டிருக்கும்.அதை செலவு செய்யும்போது எந்த கவலையும் இன்றி கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்ற நினைப்பில் வீசி எறிந்திருப்போம்.ஆனால் அவசரத்திற்கு நூறு ரூபா கூட கையில் இல்லாத நிலையில் என்றோ அனாவசியமாக வீசி எறிந்த ஆயிரம் ரூபா பச்சைத்தாள்கள் சிரி சிரியென சிரிக்கும்.சுய மதிப்பிடல்களும்,மீழ் பார்வைகளும் சொல்லித்தரும் அனுபவப் பாடங்கள் கற்றுக்கொண்ட கடின பாடங்கள்..
அனுபவம் போல சிறந்த ஆசான் எதுவுமே இல்லை.அந்த ஆசானின் பட்டறையில் பெற்றுக்கொண்ட பாடங்களை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தினால் நிச்சயம் சிறப்பாக வாழலாம்.அந்த எண்ணம் இன்றி நாளைக்கு பார்க்கலாம்,நாளையிலிருந்து மாறலாம்,நாளைக்கு தொடங்கலாம் என்று நாளையை நாளைக்கு அழைத்தால் எமது நாளைய நாள் தோற்றுப்போகும் என்பது திண்ணம்.நினைத்த கணம் நினைவுகளோடு கழிந்தால் நினைவுகள் நிறம் மாறிவிடும்..
சுய மதிப்பிடல்களை,சுய மீழ் பார்வைகளை நல்ல வழியில் பயன்படுத்துவது எம் கையிலே.இப்படி செய்திற்றனே!என்ன ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன்?நான் மட்டும் ஏன் இப்படி?ஹையோ!ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று யோசித்து யோசித்து மனதை புண்படுத்தி,மூளையை கசக்கிக்கொண்டால் வலிகள் வடுக்களாகிவிடும்.மீண்டும் இது போன்ற செயல்கள் நடக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டால் உடனே செயலில் இறங்குவது புத்திசாலித்தனம்..பிறந்தோம்,வளர்ந்தோம்,வாழ்ந்தோம் என்று பத்தோடு பதினொன்றாய் இருக்காமல் தனித்து தெரியும் முயற்சிகளிலிறங்கி பயிர் செய்வது நல்லதாக முடியும்..
இதுவும் கடந்து போகும்...மனமாற்றங்களோடு புதிய போராட்டங்களை சந்திக்க தயாராக இந்த நொடி கடக்கிறது..நாளைய புதிய உலகை காண ஆயத்தமாகி இந்த நாள் நகர்ந்துகொள்கிறது..

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்...என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என்று நினைப்பது அதற்கான வழியாகக்கூட இருக்கலாம்.இந்த நொடி என் வெற்றிக்கான எண்ணத்தின் என் ஒரு செயலாக இருக்கலாம்.
இதுவும் கடந்து போகும்...மனமாற்றங்களோடு புதிய போராட்டங்களை சந்திக்க தயாராக இந்த நொடி கடக்கிறது..நாளைய புதிய உலகை காண ஆயத்தமாகி இந்த நாள் நகர்ந்துகொள்கிறது..
நாளை போடும்
சேதித் தாள் - எந்தன்
பேரைக் காட்டுமே!!!